திருப்புகழ் 677 தவர்வாள் தோமர  (திருவோத்தூர்)
Thiruppugazh 677 thavarvALthOmara  (thiruvOththUr)
Thiruppugazh - 677 thavarvALthOmara - thiruvOththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
     தனனாத் தானன தானம் ...... தனதான

......... பாடல் .........

தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
     தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
     தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
     துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
     பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
     டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
     திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தவர்வாள் தோமர சூலந் தரியாக் காதிய சூரும் ... வில், வாள்,
தண்டாயுதம், சூலம் இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த
சூரனும்,

தணியாச் சாகர மேழுங் கிரியேழும் ... வற்றாத கடல்கள் ஏழும்,
மலைகள் ஏழும்,

சருகாக் காய்கதிர் வேலும் ... சருகு போலக் காய்ந்து போகும்படி
எரித்த ஒளிமிக்க வேலும்,

பொருகாற் சேவலு ... சண்டை செய்யவல்ல கால்களை உடைய
சேவலும்,

நீலந் தரிகூத் தாடிய மாவும் ... நீல நிறமானதும், நடனம்
ஆடவல்லதுமான மயிலாம் குதிரையும்,

தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானும் ... தினைப் புனத்தைக்
காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட, வேடர் குலத்து மான் போன்ற
வள்ளியும்,

சுரநாட் டாளொரு தேனும் ... தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன்
அனைய தேவயானையும்,

துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே ... துணையாகக்
கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே,

துணையாய்க் காவல்செய்வாயென்று ... நீ துணையாகக் காவல்
செய்து ரக்ஷிப்பாய் என்று

உணராப் பாவிகள் பாலும் ... உணராத பாவிகளிடத்தில் சென்று

தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ ... அழிவில்லாத
அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ?

பவமாய்த்து ஆணது வாகும் பனைகாய்த்தே ... பிறப்பை ஒழித்து,
ஆணாக இருந்த பனைமரம் காய்த்து

மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி ... நறுமணம் வீசும்
பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,*1

வேதம் படியாப் பாதகர் ... வேதத்தைப் படிக்காத பாதகர்கள் *2

பாயன்றி யுடாப் பேதைகள் ... பாயைத் தவிர வேறு எந்த ஆடையும்
உடுக்காத பேதைகள் *3

கேசம் பறி கோப் பாளிகள் ... தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும்
கூத்தாடிச் சமர்த்தர்கள் *4 ஆகிய சமணர்

யாருங் கழுவேற ... எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக,

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால் ... சிவமயமானதும்,
தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது
(திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும்,

ஒளி சேர்வெண் டிருநீற் றால் ... பெருமை வாய்ந்த வெள்ளைத்
திருநீற்றாலும்,

அமராடுஞ் சிறியோனே ... வாதுப் போர் புரிந்த இளையோனே,

செழுநீர்ச் சேய்நதி ... செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு

ஆரங் கொழியாக் கோமளம் வீசும் ... முத்துக்களைக் கரையிலே
கொட்டும் அழகு நிறைந்த

திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே. ... திருவோத்தூர்*5
என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு
சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த திருஞானசம்பந்தர்
(குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட,
ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின.
பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.


(1) (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:

(1) சமணர் வேதத்தைப் படித்ததில்லை.
(2) சமணர் கோரைப் பாயைத் தவிர வேறு ஆடை உடுப்பதில்லை.
(3) சமண குருமார் ஒருவனைக் குருவாக ஆக்கும்போது அவனது
     தலைமயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பறிக்கும் வழக்கம் உண்டு.


** திருவோத்தூர் காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்கே 19 மைலில் சேயாற்றின்
கரையின் உள்ளது. இங்கு சிவபிரான் தேவர்களுக்கும் முநிவர்களுக்கும்
வேதத்தை ஓதுவித்ததால் திருவோத்தூர் எனப்படும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.627  pg 2.628  pg 2.629  pg 2.630 
 WIKI_urai Song number: 681 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 677 - thavarvAL thOmara (thiruvOththUr)

thavarvAt tOmara sUlan thariyAk kAdhiya sUrun
     thaNiyA sAgaram Ezhung ...... giri Ezhung

sarugAk kAykadhir vElum porukAR sEvalu neelan
     thari kUth adiya mAvun ...... thinai kAval

thuvarvAyk kAnavar mAnum suranAt tALoru thEnun
     thuNaiyAth thAzhvaRa vAzhum ...... periyOnE

thuNaiyAy kAval seyvAy endruNarA pAvigaL pAlun
     tholaiyAp pAdalai yAnum ...... pugalvEnO

bavamAyth thANadhu vAgum panai kAyththE maNanARum
     pazham Ayp pArmisai veezhum ...... padi vEdham

padiyAp pAthakar pAy andriyudAp pEdhaigaL kEsam
     paRi kOppALigaL yArung ...... kazhuvERa

sivamAyth thEn amudhUrun thiruvAk kAloLi sErveN
     thiru neetrAl amarAdum ...... siRiyOnE

sezhuneer sEy nadhiyAram kozhiyAk kOmaLam veesun
     thiruvOth thUr thanail mEvum ...... perumALE.

......... Meaning .........

thavarvAt tOmara sUlan thariyAk kAdhiya sUrun: Armed with a bow, sword, mace and trident, he massacred many people - that SUran;

thaNiyA sAgaram Ezhung giri Ezhung: the seven oceans that were filled to the brink; and the seven mountains

sarugAk kAykadhir vElum porukAR sEvalu: were all burnt like a dry leaf by the bright Spear; the Rooster with legs capable of fighting;

neelan thari kUth adiya mAvun: the horse-like dancing peacock which is of bluish hue;

thinai kAval thuvarvAyk kAnavar mAnum: VaLLi, the deer-like damsel of the foresters, guarding the millet-field and with lips of coral colour;

suranAt tALoru thEnun: the honey-like sweet damsel of the celestials, the unique one, DEvayAnai,

thuNaiyAth thAzhvaRa vAzhum periyOnE: are all keeping nice company with You, Oh Great One, Your life is without any blemish.

thuNaiyAy kAval seyvAy endruNarA pAvigaL pAlun: I approach the sinners who never realise that You shall protect them like a lifeguard

tholaiyAp pAdalai yAnum pugalvEnO: and roam around singing immortal songs to them; (when will I stop doing so?)

bavamAyththu ANadhu vAgum panai kAyththE: The male palm trees (whose rebirth was stopped) were made by You to deliver

maNanARum pazham Ayp pArmisai veezhum padi: aromatic palm fruits which fell down on earth!*1

vEdham padiyAp pAthakar: The sinners*2 who have never read the scriptures;

pAy andriyudAp pEdhaigaL: those stupid people who wear only mats made of weeds (as clothing)*3;

kEsam paRi kOppALigaL: those pranksters who pluck the hair of their colleagues*4;

yArung kazhuvERa: were altogether sent to the gallows by You (as ThirugnAna Sambandhar).

sivamAyth thEn amudhUrun thiruvAk kAl: With Your songs and speech, full of SivA, sweet like honey and the nectar,

oLi sErveN thiru neetrAl amarAdum siRiyOnE: and with the bright white holy ash (VibUthi), You conquered them in debates, Oh Young One.

sezhuneer sEy nadhiyAram kozhiyA: The river SEY has plenteous water, throwing into its banks garlands of pearls,

kOmaLam veesun thiruvOth thUr thanail mEvum perumALE.: at this beautiful place, ThiruvOththUr,*5 which is Your abode, Oh Great One.


* In ThiruvOththUr, there were only male palm trees which fact was derided by the ChamaNas. When ThirugnAna SambandhAr passed through the town and heard about this stigma, he sang a ThEvAram song upon which the male trees blossomed and delivered bunches of ripe palm fruits.


(1), (2) and (3) all denote the ChamaNas who were bitterly against the Saivites.

     (1) ChamaNas never learnt any of the scriptures.
     (2) ChamaNas would never put on any clothing other than mats made of reeds.
     (3) ChamaNas have a peculiar custom by which when one of them is to be promoted as Master, the latter's hair used to be completely plucked by each and every member of the group.


** ThiruvOththUr is the place where the Scriptures were preached by Lord SivA (to many sages and celestials).


The town is 19 miles southwest of KAnchipuram on the banks of River 'SEY'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 677 thavarvAL thOmara - thiruvOththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]