திருப்புகழ் 613 கருடன் மிசைவரு  (குருடிமலை)
Thiruppugazh 613 garudanmisaivaru  (kurudimalai)
Thiruppugazh - 613 garudanmisaivaru - kurudimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான

......... பாடல் .........

கருடன் மிசைவரு கரிய புயலென
     கமல மணியென ...... வுலகோரைக்

கதறி யவர்பெயர் செருகி மனமது
     கருதி முதுமொழி ...... களைநாடித்

திருடி யொருபடி நெருடி யறிவிலர்
     செவியில் நுழைவன ...... கவிபாடித்

திரியு மவர்சில புலவர் மொழிவது
     சிறிது முணர்வகை ...... யறியேனே

வருடை யினமது முருடு படுமகில்
     மரமு மருதமு ...... மடிசாய

மதுர மெனுநதி பெருகி யிருகரை
     வழிய வகைவகை ...... குதிபாயுங்

குருடி மலையுறை முருக குலவட
     குவடு தவிடெழ ...... மயிலேறுங்

குமர குருபர திமிர தினகர
     குறைவி லிமையவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருடன் மிசை வரு கரிய புயல் என ... கருடன்மேல் வருகின்ற
கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும்,

கமல மணி என உலகோரை ... தாமரை (பதும நிதி), சிந்தாமணி
நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி ... கூச்சலிட்டு,
பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில்
மிக்க கருத்துடன்

முது மொழிகளை நாடி ... பழைய செஞ் சொற்களைத் தேடியும்,

திருடி ஒரு படி நெருடி ... திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து
அப்பாடலில் அமைத்தும்,

அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி ... அறிவில்லாத
மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும்,

திரியும் அவர் சில புலவர் மொழிவது ... திரிகின்றவர்களாகிய சில
புலவர்கள் கூறுவது,

சிறிதும் உணர் வகை அறியேனே ... சற்றேனும் உணரும்படியான
வழியை நான் அறிந்திலேன்.

வருடை இனம் அது முருடு படும் ... மலை ஆடுகளின் கூட்டமும்,
கரடு முரடு உள்ள

அகில் மரமும் மருதமும் அடி சாய ... அகில், மருதம் ஆகிய
மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி,

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய ... மதுரம் என்ற
ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி,

வகை வகை குதி பாயும் ... பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற

குருடி மலை உறை முருக ... குருடி மலையில்* வீற்றிருக்கும்
முருகனே,

குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் ... சிறந்த வட மலை
ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும்,

குமர குருபர திமிர தினகர ... குமரனே, குருபரனே, அஞ்ஞான
இருளுக்கு ஓர் சூரியனே,

குறைவில் இமையவர் பெருமாளே. ... குறைவில்லாத தேவர்களின்
பெருமாளே.


* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப்
பக்கத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.983  pg 1.984 
 WIKI_urai Song number: 395 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 613 - garudan misaivaru (kurudimalai)

garudan misaivaru kariya puyalena
     kamala maNiyena ...... vulakOraik

kathaRi yavarpeyar seruki manamathu
     karuthi muthumozhi ...... kaLainAdith

thirudi yorupadi nerudi yaRivilar
     seviyil nuzhaivana ...... kavipAdith

thiriyu mavarsila pulavar mozhivathu
     siRithu muNarvakai ...... yaRiyEnE

varudai yinamathu murudu padumakil
     maramu maruthamu ...... madisAya

mathura menunathi peruki yirukarai
     vazhiya vakaivakai ...... kuthipAyung

kurudi malaiyuRai muruka kulavada
     kuvadu thavidezha ...... mayilERung

kumara gurupara thimira thinakara
     kuRaivi limaiyavar ...... perumALE.

......... Meaning .........

garudan misaivaru kariya puyalena: "You are like Lord Vishnu, mounted on Eagle Garuda, with the complexion of the dark cloud!

kamala maNiyena: In charity You are the Treasure of Lotus (Padmanidhi) and the Gem of the Heart (ChinthAmaNi)!" -

ulakOraikkathaRi yavarpeyar seruki: with these screaming words of praise, some poets sing about the people of the world, even inserting their names in the songs!

manamathu karuthi muthumozhi kaLainAdith: They deliberate on selecting the choicest words of adage,

thirudi yorupadi nerudi: sometimes resorting to stealing such words and using excessive hyperbole!

yaRivilar seviyil nuzhaivana kavipAdith: They literally drum such songs into the ears of those stupid people;

thiriyu mavarsila pulavar: this is the lot of some of those roving poets;

mozhivathu siRithu muNarvakai yaRiyEnE: and I am unable to comprehend even slightly as to what these poets sing about.

varudai yinamathu murudu padumakil maramu maruthamu madisAya: Herds of mountain-goats, along with jagged trees of sandalwood and marutham are uprooted

mathura menunathi peruki yirukarai vazhiya: by the floods in the river Madhuram inundating both the banks,

vakaivakai kuthipAyung kurudi malaiyuRai muruka: with water jumping about in all directions in this town called Kurudimalai*. That is Your abode, Oh MurugA!

kulavada kuvadu thavidezha mayilERung kumara gurupara: The great mount in the north, Krouncha, was shattered to pieces when You mounted the Peacock, Oh Kumara! Oh Great Master!

thimira thinakara kuRaivi limaiyavar perumALE.: You are the Sun that dispels the darkness of ignorance! You are the Lord of the unblemished celestials, Oh Great One!


* Kurudimalai is within 2 miles of Coimbatore, adjacent to Thudiyalur Railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 613 garudan misaivaru - kurudimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]