திருப்புகழ் 547 அங்கை நீட்டி  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 547 angaineetti  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 547 angaineetti - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தாத்தன தத்தத் தானன
     தந்த தாத்தன தத்தத் தானன
          தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான

......... பாடல் .........

அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
     கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
          அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி

அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
     இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
          அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை

பங்க மாக்கிய லைத்துத் தாடனை
     கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்
          பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப்

பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்
     தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
          பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
     அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
          இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய்

இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
     மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
          மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா

செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
     வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
          தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
     மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
          தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அம் கை நீட்டி அழைத்துப் பாரிய கொங்கை காட்டி
மறைத்துச் சீரிய அன்பு போல் பொய் நடித்துக் காசு அளவு
உறவாடி
... அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த மார்பகத்தைக்
காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர்கள் போல் பொய் வேடத்துடன்
நடித்தும், கொடுத்த பொருளுக்குத் தக்கவாறு உறவு காட்டியும்,

அம்பு தோற்ற கண் இட்டுத் தோதக இன்ப சாஸ்த்ரம்
உரைத்துக் கோகிலம் அன்றில் போல் குரலிட்டுக் கூரிய
நகரேகை பங்கம் ஆக்கி அலைத்துத் தாடனை கொண்டு
வேட்கை எழுப்பி
... அம்பும் தோற்கும்படியான (கூர்மையான)
கண்களால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை
எடுத்துப் பேசியும், குயில் அன்றில் பறவை இவைகளைப் போல
புட்குரலைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு காயப்படுத்தி
அலைத்தும், காம சாத்திர முறையில் தட்டுதல் செய்தும் காம ஆசையை
எழுப்பி,

காமுகர் பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் இயல்பாகப்
பண்டு இராப்பகல் சுற்றுச் சூளைகள் தங்கள் மேல் ப்ரமை
விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள் தொழ
அருள்வாயே
... நாடி வருகின்ற காமுகரைத் தமது வசப்படும்படி செய்து,
தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, முதலிலிருந்தே
இரவும் பகலும் சுற்றி அலைக்கும் சூதுக்கார வேசிகளின் மேல் உள்ள
மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த
உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக.

எங்குமாய்க் குறைவு அற்றுச் சேதன அங்கமாய்ப்
பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய்ப் புகழ் முப்பத்து ஆறினின்
முடி வேறாய்
... எங்கும் நிறைந்தவனாய், குறை இல்லாதவனாய்,
அறிவே வடிவு உடையவனாய், பரிசுத்த அன்பர்கள் அடையும் இன்பப்
பொருளாய், புகழ் கொண்டவனாய், முப்பத்தாறு தத்துவங்களின் *
முடிவுக்கும் வேறானவனாய்,

இந்த்ர கோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்துத்
தாமதம் இன்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலூரா
...
இந்திரன் முதலிய கூட்டத்துத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி சிறந்த
(சரவணபவ) மந்திர ரூப பூஜை செய்து தாமதம் இல்லாமல் வாழ்த்திய
தேவ லோகக் காவலனே, வயலூர்த் தெய்வமே,

செங்கை வேல் கொ(ண்)டு துட்டச் சூரனை வென்று தோல்
பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்து நடிக்கத் தோகையில்
வரும் வீரா
... திருக்கையில் உள்ள வேலைக் கொண்டு துஷ்டனாகிய
சூரனை வெற்றி கொண்டு, தோலாலாகிய பறைகள் கொட்ட, பேய்கள்
அசுரப் பிணங்களை உண்டு கூத்தாடி நடிக்க, மயிலின் மேல்
வரும் வீரனே,

செம்பொன் ஆர்த் திகழ் சித்ரக் கோபுரம் மஞ்சு இராப்பகல்
மெத்தச் சூழ் தரு தென் சிராப் ப(ள்)ளி வெற்பின் தேவர்கள்
பெருமாளே.
... செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது
மேகங்கள் இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி
மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.


  * 36 பரதத்துவங்கள் (அகநிலை):

ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.801  pg 1.802  pg 1.803  pg 1.804 
 WIKI_urai Song number: 329 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 547 - angai neetti (thiruchirAppaLLi)

angai neettiya zhaiththup pAriya
     kongai kAttima Raiththuc cheeriya
          anpu pORpoyna diththuk kAsaLa ...... vuRavAdi

ampu thOtRaka Nittuth thOthaka
     inpa sAsthramu raiththuk kOkilam
          anRil pORkura littuk kUriya ...... nakarEkai

panga mAkkiya laiththuth thAdanai
     koNdu vEtkaiye zhuppik kAmukar
          paNpil vAykkama yakkik kUdutha ...... liyalpAkap

paNdi rAppakal sutRuc cULaikaL
     thangaL mERpramai vittup pArvathi
          pangar pOtRiya pathmath thALthozha ...... aruLvAyE

engu mAykkuRai vatRuc chEthana
     anga mAyppari suththath thOrpeRum
          inpa mAyppukazh muppath thARinin ...... mudivERAy

inthra kOttima yakkath thAnmika
     manthra mUrththame duththuth thAmatha
          minRi vAzhththiya sorkkak kAvala ...... vayalUrA

sengai vERkodu thuttac cUranai
     venRu thORpaRai kottak kULikaL
          thinRu kUththuna dikkath thOkaiyil ...... varumveerA

sempo nAtRikazh chithrak kOpura
     manji rAppakal meththac cUzhtharu
          thenchi rAppaLLi veRpit REvarkaL ...... perumALE.

......... Meaning .........

am kai neetti azhaiththup pAriya kongai kAtti maRaiththuc cheeriya anpu pOl poy nadiththuk kAsu aLavu uRavAdi: They beckon by gesturing with their beautiful hand; they alternately expose and cover their huge bosom; they put on an act of love and extend their relationship proportionate to the amount offered;

ampu thOtRa kaN ittuth thOthaka inpa sAsthram uraiththuk kOkilam anRil pOl kuralittuk kUriya nakarEkai pangam Akki alaiththuth thAdanai koNdu vEtkai ezhuppi: they entice with their eyes that surpass the arrows in sharpness; they treacherously converse citing the text from erotic manuals; from their throat emanate the sounds of birds like the cuckoo and the krouncha bird; with their sharp nails they scratch the body (of their suitors) and harass; they gently pat as suggested in the sex manuals and stimulate;

kAmukar paNpil vAykka mayakkik kUduthal iyalpAkap paNdu irAppakal sutRuc cULaikaL thangaL mEl pramai vittup pArvathi pangar pOtRiya pathmath thAL thozha aruLvAyE: holding tightly on to their suitors seeking their company, these whores, from the very beginning, make them develop a habit of making love to them day in and day out; they make their suitors revolve around them; getting rid of my delusion over these treacherous whores, kindly bless me to worship Your lotus feet at which Lord SivA, the consort of PArvathi DEvi concorporate on His left side, prostrated, Oh Lord!

engumAyk kuRaivu atRuc chEthana angamAyp parisuththaththOr peRum inpamAyp pukazh muppaththu ARinin mudi vERAy: You are omnipresent, unblemished, an embodiment of Knowledge, the ultimate bliss attained by pure devotees, distinguished and a principle different from the conclusion of all the thirty-six tenets*;

inthra kOtti mayakkaththAn mika manthra mUrththam eduththuth thAmatham inRi vAzhththiya sorkkak kAvala vayalUrA: when the celestials headed by Indra congregated and performed the worship to the form of the great manthrA (saravaNabava), they praised Your glory promptly; You are the protector and benefactor of the celestial world! You are the presiding Deity in VayalUr, Oh Lord!

sengai vEl ko(N)du thuttac cUranai venRu thOl paRai kottak kULikaL thinRu kUththu nadikkath thOkaiyil varum veerA: With the spear in Your hallowed hand, You conquered the evil demon, SUran; against the background beating of drums made of leather, and the dancing of fiends on the battlefield after devouring the corpses of demons, You come mounted on the peacock, Oh Valorous One!

sempon Arth thikazh chithrak kOpuram manju irAppakal meththac cUzh tharu then chirAp pa(L)Li veRpin thEvarkaL perumALE.: The abundant clouds hover day and night over the reddish golden and beautiful temple towers of this pretty mountainous town ThirichirAppaLLi where You are seated; You are the Lord of the celestials, Oh Great One!


* 36 Parathathvas (Superior Tenets) (Internal)

These are the 36 tenets referred to herein

Athma (Soul) Thathvas 24
Vidhya (Knowledge)Thathvas 7
Siva Thathvas 5.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 547 angai neetti - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]