திருப்புகழ் 523 ஒருபதும் இருபதும்  (ஸ்ரீ சைலம் திருமலை)
Thiruppugazh 523 orubadhumirubadhum  (Sri sailam thirumalai)
Thiruppugazh - 523 orubadhumirubadhum - SrisailamthirumalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி

உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே

தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே

திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே

பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்

பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே

பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா

பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும் ... ஒரு பத்து,
இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு
தத்துவங்களின்*

உணர்வுற ... உண்மையை உணர்ந்து,

இருபதம் உளநாடி ... உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில்
தியானித்து

உருகிட ... அதனால் உள்ளம் உருகிட,

முழுமதி தழலென ஒளிதிகழ் ... பூரண சந்திரனது தீப்போன்று
ஒளி வீசும்

வெளியொடு ஒளிபெற விரவாதே ... பரவெளியின் ஒளியை யான்
பெற்று அதோடு கலவாமல்,

தெருவினில் மரமென ... வீதியிலே மரம் போல நின்று

எவரொடும் உரைசெய்து திரிதொழில் ... யாரோடும் பேசித் திரியும்
தொழிலை

அவமது புரியாதே ... யான் மேற்கொண்டு வீணாக அலையாது
இருப்பதற்காக,

திருமகள் மருவிய ... லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய

திரள்புய அறுமுக ... திரண்ட தோள்களை உடையவனே,
ஆறுமுகனே,

தெரிசனை பெறஅருள் புரிவாயே ... உன் அருட்காட்சி பெற
எனக்கு அருள் புரிவாயாக.

பரிவுட னழகிய பழமொடு ... அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட
நல்ல பழங்களுடன்,

கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் ... கடலை வகைகள்,
பயறு, சில பணியாரங்களை

பருகிடு பெருவயி றுடையவர் ... உண்ணும் பெரு வயிற்றை
உடையவரும்,

பழமொழி எழுதிய ... பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை
மேருமலையில் எழுதியவருமான

கணபதி யிளையோனே ... கணபதிக்குத் தம்பியே,

பெருமலை யுருவிட ... பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும்,

அடியவர் உருகிட ... உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும்,

பிணிகெட ... அடியார்களின் பிறவிநோய் தொலையவும்

அருள்தரு குமரேசா ... திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே,

பிடியொடு களிறுகள் நடையிட ... பெண்யானைகளோடு
ஆண்யானைகள் உலாவும்,

கலைதிரள் பிணையமர் ... கலைமான்களின் கூட்டம்
பெண்மான்களோடு விரும்பி அமரும்

திருமலை பெருமாளே. ... திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள
பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** ஸ்ரீசைலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இங்குள்ள மல்லிகார்ச்சுனரும் ஒருவர்.

தமிழில் இவ்வூர் திருமலை, திருப்பருப்பதம் எனப்படும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.581  pg 1.582  pg 1.583  pg 1.584 
 WIKI_urai Song number: 244 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 523 - orubadhum irubadhum (srichailam thirumalai)

orupadhum irupadhum aRupadhum udanaRum
     uNarvuRa irupadham ...... uLanAdi

urugida muzhumadhi thazhalena oLithigazh
     veLiyodu oLipeRa ...... viravAdhE

theruvinil maramena evarodum uraiseydhu
     thirithozhil avamadhu ...... puriyAdhE

thirumagaL maruviya thiraLbuya aRumuga
     dherisanai peRa aruL ...... purivAyE

parivudan azhagiya pazhamodu kadalaigaL
     payaRodu silavagai ...... paNiyAram

parugidu peruvayiR udaiyavar pazhamozhi
     ezhudhiya gaNapathi ...... iLaiyOnE

perumalai uruvida adiyavar urugida
     piNikeda aruLtharu ...... kumarEsA

pidiyodu kaLiRugaL nadaiyida kalaithiraL
     piNaiyamar thirumalai ...... perumALE.

......... Meaning .........

orupadhum irupadhum aRupadhum udanaRum: Ten plus twenty plus sixty plus six (totalling ninety-six) thathvas' (tenets)*

uNarvuRa: essence has to be understood, and

irupadham uLanAdi urugida: my mind should seek Your two feet and, as a result, simply melt

muzhumadhi thazhalena oLithigazh veLiyodu oLipeRa: in the Cosmic Light, which is as luminous as the bright light of full moon.

viravAdhE: (But my mind) failed to mingle with that Light.

theruvinil maramena: I stand like a tree in the streets,

evarodum uraiseydhu thirithozhil: roaming around and chatting with whoever passes by;

avamadhu puriyAdhE: and I do not want indulge in this futile exercise anymore.

thirumagaL maruviya thiraLbuya aRumuga: Oh Shanmukha, Your broad shoulders were fondly embraced by VaLLi, daughter of Lakshmi, and

dherisanai peRa aruL purivAyE: You should grant me Your Graceful Vision.

parivudan azhagiya pazhamodu kadalaigaL: When with love and devotion good fruits and nuts are offered,

payaRodu silavagai paNiyAram: along with pulses and some home-made eatables,

parugidu peruvayiR udaiyavar: (GanEshA) devours them and fills up his big belly!

pazhamozhi ezhudhiya gaNapathi: That Ganapathi also wrote the old MahAbhArathA;**

iLaiyOnE: You are His younger brother!

perumalai uruvida adiyavar urugida: If the huge mount (Krounchamalai) has to be pierced or Your devotees' hearts have to melt, or

piNikeda aruLtharu kumarEsA: their disease of repeated births has to be cured, only You can grant the grace for all that, Oh KumaresA.

pidiyodu kaLiRugaL nadaiyida kalaithiraL piNaiyamar: (In this holy place) herds of she-elephants roam about with male-elephants and deers relish the company of roes;

thirumalai perumALE.: This place is Your abode, Thirumalai (Srichailam)***, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** VinAyagA was supposed to have written down MahAbhArathA with His one broken tusk while VyAsA narrated the story at MahA KailAs according to VinAyaga PurANam.


*** Srichailam is in Andhra Pradesh with main deity Mallikarjuna, one of the twelve JyothirlingAs of SivA.
In Tamil, Srichailam is called Thirumalai and Thirupparuppatham.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 523 orubadhum irubadhum - Sri sailam thirumalai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]