பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம் திருப்புகழ் உரை 111 தெருவில் மரம்போல நின்று யாரோடும் பேசிப் பேசித் திரிகின்ற தொழிலை நான் வீணாக மேற் கொண்டுள்ளேன்; அங்ங்னம் மேற்கொள்ளாமல் 'இலக்குமியின் மகளாம் வள்ளி அணைகின்ற திரண்ட புயங்களை உடைய ஆறுமுகனே! (அல்லது திரண்ட புயங்களை உடையவனே! ஆறுமுகனே!) உனது தரிசனையைப் பெற அருள்புரிவாயே! (அல்லது) ஆறுமுகங்களின் தரிசனை. யைக் (காட்சியை) ப் பெற அருள்வாயே; அன்புடனே நல்ல பழங்களுடன், கடலை வகைகள், பயறுடனே சில வகைப்பட்ட பணியாரங்கள் (பலகாரங்கள்) (இவைகளை) உண்ணும் பெரு வயிற்றினை உடையவர், பழமொழியாம் தமிழில் (பாரதத்தை மேருமலையில்) எழுதிய கணபதிக்குத் தம்பியே! பெரிய கிரெளஞ்ச கிரி ஊடுருவ (அங்ங்னம் வேல் ஊடுருவினதால் அழிபட), அடியார்கள் (நெஞ்சம் நெக்கு) உருக, அவர்களுடைய பிணி நோய்கள் தொலைய அருள்பாலிக்கும் குமரேசனே! பெண் யானைகளுடன் ஆண் யானைகள் உலவ, கலை மான்களின் கூட்டம் பெண்மான்களுடன் இருக்கின்ற tதிருமலை (யில் வீற்றிருக்கும்) பெருமாளே! (தெரிசனை பெற அருள் புரிவாயே) "(iர) இலக்குமி மருவிய திரண்ட புயத்தனே! tதிருமலை என்றே ஒரு பிரபல சுப்ரமணியத்தலம் தென்காசி. குற்றாலத்துக்குச் சமீபத்திற் செங்கோட்டை புகைவண்டி நிலையத்துக்கு வடமேற்கு 5 மைல் துாரத்திலுள்ளது.