திருப்புகழ் 503 தத்தை மயில்  (சிதம்பரம்)
Thiruppugazh 503 thaththaimayil  (chidhambaram)
Thiruppugazh - 503 thaththaimayil - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
     யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
          சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல

தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
     யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
          தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி

வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
     கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
          வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர

மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
     னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
          வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ

சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
     நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
          தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா

சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
     ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
          சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே

துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
     சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
          சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா

சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
     சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
          சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டும்
உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
... கிளி போல்
(இனிமையாகப்) பேசி மயில் போல நடித்தும், பலவிதமான காமத்தை
எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவது போல
நாணத்தைக் காட்டியும், மார்பகங்களை ஆடையால் மூடியும் நின்ற
அந்தப் பொது மகளிர்

சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல
தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்
... எங்கள்
வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும்
என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்து,
தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து உறவு முறையில்
விளையாடி, வீட்டுக்குக் கொண்டு போய்

எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக
...
வஞ்சனை எண்ணத்துடன் படுக்கையின் மேல் இருத்தி, இது தக்க சமயம்
அன்றோ? ஏன் நீர் போகின்றீர்? என்று கூறி, தட்டில் புனுகு சட்டத்துடன்,
பன்னீர் முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை வந்தவருடைய
உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, இன்ப ரசமான வாயிதழ்
ஊறல் பெருக,

குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார்
புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர மச்ச விழி
பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்)
மயல் மூழ்கிய பின்
... கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று
துடிக்க, வட்டமான தனங்கள் மார்பில் புதைந்து திகழ, வேர்வை உண்டாக,
தோளை இறுக அணைத்து, உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப்
போரை விளைவிக்க, கட்டித் தழுவி ஆனந்தமாக மனம் ஒப்பி, இருவரும்
காம மயக்கில் முழுகிய பின்னர்,

ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார்
கலவி செயலாமோ
... வந்தவர் நகைகளை அடமானம் வைத்து, தேடிய
பொருளை எல்லாம் சூறைக் காற்று அடித்துக் கொண்டு போகின்ற
விலைமகளிருடன் கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா?

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி
எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி
சிவகாமி உமை அருள் பாலா
... சக்தி, தனித்து விளங்கும் ஜோதி,
அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே
இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான்
மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய
உமாதேவி அருளிய பாலனே,

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி
விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள்
சிறை மீள நடம் இடுவோனே
... சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த
பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின்
மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி
தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே,

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி
எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா
முலை விடாத கர மணி மார்பா
... தேமல் பரந்த தன பாரங்கள்
உள்ளவளும், மோகம் தர வல்லவளும், சுகக் கடல் போன்றவளும், மிக்க
அழகிய முக வடிவத்தைக் கொண்டவளும், எனது தாய் ஆனவளும் ஆகிய
வள்ளி அம்மையை பரிசுத்தமான படுக்கையில், மாலை அணிந்த பெரிய
மார்பகங்களை விட்டுப் பிரியாத* அழகிய கரத்துடன் விளங்கும் மணிமார்பனே,

சுத்த மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே
குடியதா(ய்) உறையும் ஆறு முக
... பரிசுத்தமான, அழகிய, சிறந்த
தவ சிகாமணியே என்று ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக
உறைகின்ற ஆறுமுகனே,

சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே. ...
சுப்ரமணியனே, புலியூரில் பொருந்தி வீற்றிருப்பவனே, தேவர்கள்
போற்றும் பெருமாளே.


* உண்மை அடியார்களின் பக்குவ நிலையை எப்போதும் விரும்பி அணைந்து
காக்கும் கரம் என்பது பொருள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.509  pg 2.510  pg 2.511  pg 2.512  pg 2.513  pg 2.514 
 WIKI_urai Song number: 644 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 503 - thaththai mayil (chidhambaram)

thaththaimayil pOlumiyal pEsipala mOkanakai
     yittumuda nANimulai meethuthukil mUdiyavar
          satRavidam veedumini vArumena vOdimadi ...... pidipOla

thaiccharasa mOduRave yAdiyaka mEkodupo
     yeththiyaNai meethilithu kAlamenir pOvathena
          thattupuzhu kOdupani neerpalasa vAthaiyava ...... rudalpUsi

vaiththumuka mOdirasa vAyithazhi nURalperu
     kakkuzhala LAvasuzhal vALvizhika LEpathaRa
          vattamulai mArputhaiya vErvaithara thOLiRuki ...... yudaisOra

macchavizhi pUsalida vAypuliyu lAsamuda
     noppiyiru vOrumayal mUzhkiyapin AparaNam
          vaiththadaku thEduporuL cURaikoLu vArkalavi ...... seyalAmO

saththisara sOthithiru mAthuveku rUpisuka
     niththiyakal yANiyenai yeeNamalai mAthusivai
          thaRparano dAdumapi rAmisiva kAmiyumai ...... yaruLbAlA

chakrakiri mUrimaka mErukadal thULipada
     rathnamayi lERiviLai yAdiyasu rAraivizha
          saththiyinai yEviama rOrkaLsiRai meeLanada ...... miduvOnE

thuththithana pAraveku mOkasuka vArimiku
     chithramuka rUpiyena thAyivaLi nAyakiyai
          suththaaNai yUduvada mAmulaivi dAthakara ...... maNimArpA

suththavama kAthavasi kAmaNiye nOthumavar
     siththamathi lEkudiya thAvuRaiyum ARumuka
          supramaNi yApuliyur mEviyuRai thEvarpukazh ...... perumALE.

......... Meaning .........

thaththai mayil pOlum iyal pEsi pala mOka nakai ittum udan nANi mulai meethu thukil mUdi avar: Speaking sweetly like the parrot and dancing like the peacock, they laugh sensually provoking passion in several ways; these whores feign modesty instantly, trying to cover their bosom by their attire;

satRu avidam veedum ini vArum ena Odi madi pidi pOla thaic charasamOdu uRave Adi akamE kodu pOy: saying "Our house is just a short distance away; you must come now", they literally pull their suitors catching hold of their lap and coax them playfully, claiming all kinds of relationship and stimulating them with aggressive sex-games; they take them home;

eththi aNai meethil ithu kAlam en ni(nee)r pOvathu ena thattu puzhukOdu pani neer pala savAthai avar udal pUsi vaiththu mukamOdu irasa vAy ithazhin URal peruka: treacherously they place their suitor on the bed saying "Isn't this the right time? Why do you try to get away?" and bringing an amalgam of civet paste, rose water and other fragrant substances on a plate which they richly smear on the suitor's body and pressing their face with that of the suitor, they let their lips soak in the sweet saliva gushing from their mouth;

kuzhal aLAva suzhal vAL vizhikaLE pathaRa vatta mulai mAr puthaiya vErvai thara thOL iRuki udai sOra maccha vizhi pUsalida vAy pu(l)li u(l)lAsamudan oppi iruvOru(m) mayal mUzhkiya pin: with their hair dishevelled, their bright eyes rolling and quivering, the prominent round bosom thrust on the (suitor's) chest, the perspiring shoulders intertwining tightly, their attire loosening, the fish-like eyes waging a war of passion, their two minds synchronising in the ecstacy of embrace and after the two have drowned themselves in the deluge of erotic delusion,

AparaNam vaiththu adaku thEdu poruL cURai koLuvAr kalavi seyalAmO: all the jewels of the suitor are pawned to raise money which is entirely grabbed like a hurricane; does it make any sense to be having carnal pleasure with such whores?

saththi sarasOthi thiru mAthu veku rUpi suka niththiya kalyANi enai eeNa malai mAthu sivai thaR paranodu Adum apirAmi sivakAmi umai aruL pAlA: She is Powerful Effulgence shining distinctively; She is PArvathi, the beautiful, capable of coming in several forms; She is the perennial benefactor (Nithya KalyANi) who remains ever-blissful; She is the Mother who created me; She is the daughter of King HimavAn and the Consort of SivA; She is the exquisite beauty who dances with Lord SivA; She is SivagAmi (adored by SivA); and You are the child of that UmA DEvi, Oh Lord!

chakra kiri mUri maka mEru kadal thULipada rathna mayil ERi viLaiyAdi asurArai vizha saththiyinai Evi amarOrkaL siRai meeLa nadam iduvOnE: Mount ChakravAkam, the mighty and huge mount MEru and the sea were shattered to dust when You mounted the precious gem-like peacock and sportively knocked down the demons by wielding the powerful Spear (Sakthi VEl), releasing the celestials from their prison, Oh dancing Lord!

thuththi thanapAra veku mOka suka vAri miku chithra muka rUpi enathu Ayi va(L)Li nAyakiyai suththa aNaiyUdu vada mA mulai vidAtha kara maNi mArpA: Her weighty bosom is pale due to the stain (acne); She is capable of provoking passion; She is like the sea of bliss; the shape of Her face is superbly beautiful; and she is my Mother VaLLi; You make Her recline on a pristine bed and never let Your lovely hand* and handsome chest move away from Her large bosom wearing the garland, Oh Lord!

suththa makA thava sikAmaNi ena Othum avar siththam athilE kudiyathA(y) uRaiyum ARu muka: You reside permanently in the hearts of Your devotees who pray saying "Oh Pure, Handsome and Famous Pinnacle of Penance!", Oh Lord with six hallowed faces!

supramaNiyA puliyUr mEvi uRai thEvar pukazh perumALE.: Oh Lord SubramaniyA! You are seated with relish in Chidhambaram! You are the Lord hailed by the celestials, Oh Great One!


* Lord Murugan's arm never leaves the embrace of true devotees who are the realised ones.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 503 thaththai mayil - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]