பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 505 (விடை) நந்தி யெம்பெருமானைப் (பரவி) போற்றி வணங்கி (அவர் அனுப்பப்) பிரமனும், மாலும் தேவர்களும், முநிவர் கூட்டங்களும் ஓடிவந்து தம்மிடம் சரண்புக (அல்லது - இறைவன் சந்நிதிக்குப் போகலாம் என்று நந்தி அளித்த விடையைப் (பதிலைப்) போற்றி அயன் - மால் அமரர் முநிவர் கணம் ஓடிவந்து சரணடையத் தமது நெஞ்சிடையே (அடையும்படி) பொருந்தி நிற்கும்படி விஷத்தை வாரியுண்டு (சரண் அடைந்தவர்களுக்கு அருள் புரிந்த நாதன் (தலைவன்). மின்னலுக்கு ஒப்பான இடையை உடைய மாது (பார்வதி) தனது இடது பாகத்தில் பொருந்தி உள்ள குருமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ அவருக்கு ஞானோபதேசப் பிரசாதத்தை அருளியவனே! துன்பங்களும், கிரகசேஷடைகளும், நோய்களும் விலக, என்ன்ையும் ஒரு பொருளாகக் கருதி எனக்கு அருளின் குறமாதின்) வள்ளியின் இரண்டு இளநீர் போன்ற கொங்கைகள் அமைந்த மார்பில் அணையும் திருமார்பை உடையவனே! இன்பநிலையில் உள்ள பழையமுநி வியாக்ரபாதருடன் (அரவு) பாம்புருவுள்ள பதஞ்சலி முநிவரும், நூறுகோடிக் கணக்கான இருடிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே! (அருள் பாட வரவேனும்) 644. கிளி போலவும், மயில் போலவும், தமது தன்மையைக் குறித்த பேச்சுக்களைப் பேசி, பலவிதமான மோகம் எழுப்பவல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவதுபோல நாணத்தைக் காட்டியும், கொங்கை மேலே புடைவைகொண்டு மூடியும் நிற்கின்ற அவர் (அந்தப் பொதுமகளிர்) - (சற்று) கொஞ்சம் கிட்டத்தான் (அவிடம்) அந்த இடத்தில் (எங்கள்) விடும் இருக்கின்றது. இனி நீங்கள் வரவேண்டும் என்று கூறி ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வதுபோல (அழைத்து)