திருப்புகழ் 484 தாது மாமலர்  (சிதம்பரம்)
Thiruppugazh 484 thAdhumAmalar  (chidhambaram)
Thiruppugazh - 484 thAdhumAmalar - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானன தனனா தானன
     தான தானன தனனா தானன
          தான தானன தனனா தானன ...... தனதான

......... பாடல் .........

தாது மாமலர் முடியா லேபத
     றாத நூபுர அடியா லேகர
          தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே

சாடை பேசிய வகையா லேமிகு
     வாடை பூசிய நகையா லேபல
          தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே

மோதி மீறிய முலையா லேமுலை
     மீதி லேறிய கலையா லேவெகு
          மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார்

மோக வாரிதி தனிலே நாடொறு
     மூழ்கு வேனுன தடியா ராகிய
          மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே

காத லாயருள் புரிவாய் நான்மறை
     மூல மேயென வுடனே மாகரி
          காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே

காதல் மாதவர் வலமே சூழ்சபை
     நாத னார்தம திடமே வாழ்சிவ
          காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே

வேத நூன்முறை வழுவா மேதினம்
     வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
          மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே

வீறு சேர்வரை யரசாய் மேவிய
     மேரு மால்வரை யெனநீள் கோபுர
          மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
... மகரந்தப் பொடிகள்
தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள்
அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும்,
(வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும்,

சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே
பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே
...
ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக்
கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான
பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும்,

மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே
வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்
...
முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த
ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக்
காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற
விலைமாதர்களின்

மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது
அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும்
அருள்வாயே
... காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான்
உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து
பழகுவதற்கு அருள் புரிவாயாக.

காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே
மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
...
"நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள்
புரிவாயாக" என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க,
அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய
திருமால் நாராயணனுடைய மருகனே,

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ்
சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
... பக்தியும்
பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக
சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி
பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே,

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
...
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்
யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம்
வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*,

வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்
கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.
...
பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல
உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல்
விளங்கும் பெருமாளே.


* அருணகிரிநாதருக்கு நடராஜப் பெருமானே முருகனாகவும், முருகனே
நடராஜராகவும் பேதமின்றித் தரிசனம் தரப்பட்டது என்பது இதன் கருத்து.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.455  pg 2.456  pg 2.457  pg 2.458  pg 2.459  pg 2.460 
 WIKI_urai Song number: 625 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 484 - thAdhu mAmalar (chidhambaram)

thAthu mAmalar mudiyA lEpatha
     RAtha nUpura adiyA lEkara
          thALa mAkiya nodiyA lEmadi ...... pidiyAlE

sAdai pEsiya vakaiyA lEmiku
     vAdai pUsiya nakaiyA lEpala
          thARu mARusol mikaiyA lEyana ...... nadaiyAlE

mOthi meeRiya mulaiyA lEmulai
     meethi lERiya kalaiyA lEveku
          mOdi nANaya vilaiyA lEmayal ...... tharumAnAr

mOka vArithi thanilE nAdoRu
     mUzhku vEnuna thadiyA rAkiya
          mOna njAnika LudanE sEravu ...... maruLvAyE

kAtha lAyaruL purivAy nAnmaRai
     mUla mEyena vudanE mAkari
          kANa nErvaru thirumAl nAraNan ...... marukOnE

kAthal mAthavar valamE cUzhsapai
     nAtha nArthama thidamE vAzhsiva
          kAma nAyaki tharubA lApuli ...... saiyilvAzhvE

vEtha nUnmuRai vazhuvA mEthinam
     vELvi yAlezhil punaimU vAyira
          mEnmai vEthiyar mikavE pUsanai ...... purikOvE

veeRu sErvarai yarasAy mEviya
     mEru mAlvarai yenaneeL kOpura
          mElai vAyilin mayilmee thERiya ...... perumALE.

......... Meaning .........

thAthu mA malar mudiyAlE pathaRAtha nUpura adiyAlE kara thALamAkiya nodiyAlE madi pidiyAlE: By their hair adorned with flowers filled with pollen grains, by the unflustered way of walking with their anklet-wearing feet, by the loud musical beats produced by their hands, by their grabbing of the suitors' waist-line and enticing them,

sAdai pEsiya vakaiyAlE miku vAdai pUsiya nakaiyAlE pala thARumARu sol mikaiyAlE a(n)na nadaiyAlE: by their speeches interspersed with gestures, by their giggles while exuding fragrant scents, by their arrogance displayed through incoherent and impertinent words spoken by them, by their gait like that of a swan,

mOthi meeRiya mulaiyAlE mulai meethil ERiya kalaiyAlE veku mOdi nANaya(m) vilaiyAlE mayal tharu(m) mAnAr: by their bulging breasts thrusting forward, by the clothing that covers their bosom and by their proud demeanor showing many an enchanting act, for a price, these whores are capable of making their suitors obsessed with passion;

mOka vArithi thanilE nAL thoRu(m) mUzhkuvEn unathu adiyAr Akiya mOna njAnikaLudanE sEravum aruLvAyE: I have been drowning compulsively everyday in the sea of passion for these whores; kindly bless me to join the company of Your devotees who are the serene and realised ones, Oh Lord!

kAthalAy aruL purivAy nAn maRai mUlamE ena udanE mA kari kANa nEr varu thirumAl nAraNan marukOnE: When the huge elephant (GajEndran) screamed for help, praying "Oh Primordial and Causal Principle of the four VedAs, kindly bestow Your compassion upon me", He came right in front of that elephant so that it could see Him; You are the nephew of that helpful Lord VishNu!

kAthal mAthavar valamE cUzh sapai nAthanAr thamathu idamE vAzh sivakAma nAyaki tharu bAlA pulisaiyil vAzhvE: Great people, filled with devotion and known for their penance, circumambulate Lord SivA, in worship, in the golden stage; She is concorporate on the left part of that SivA's body; She is Goddess SivagAmi, and You are Her dear child, Oh Lord! You are the Treasure of Pulisai (Chidhambaram)!

vEtha nUn muRai vazhuvAmE thinam vELviyAl ezhil punai mUvAyira(m) mEnmai vEthiyar mikavE pUsanai purikOvE: The three thousand VEdic Brahmins of Thillai (Chidhambaram) perform excellent sacrificial rites everyday, by way of worship and performing penance, strictly in accordance with the procedures laid out in the scriptures; and You are the Master receiving all those sacrificial rites, Oh Lord!*

veeRu sEr varai arasAy mEviya mEru mAl varai ena neeL kOpura mElai vAyilin mayil meethu ERiya perumALE.: The temple tower of this place is tall like Mount MEru, the king of all great mountains; and near the western gate of that temple tower, You are seated, mounted on the peacock, Oh Great One!


* AruNagirinAthar had the vision of Lord NadarAjan in the form of Lord Murugan and vice versa, without any distinction.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 484 thAdhu mAmalar - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]