திருப்புகழ் 367 குமர குருபர குணதர  (திருவருணை)
Thiruppugazh 367 kumaragurubaraguNadhara  (thiruvaruNai)
Thiruppugazh - 367 kumaragurubaraguNadhara - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ ...
குமரனே, குருமூர்த்தியே, நற்குணங்கள் நிறைந்தவனே, அசுரர்கள்
என்னும் இருளை நீக்கும் சூரியனே, சரவணபவனே,

கிரி குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் குறவர்
சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண்
... இமயமலையின்
மகளுக்கு மகனே, பகீரதியின் (கங்கையின்) மகனே, தேவர்களுக்குத்
தலைவனான இந்திரனின் சிறந்த மகளான மான் போன்ற
தேவயானையையும், வேடர் குலப் பெண்ணான வள்ளியையும் தழுவும்
வலிமை வாய்ந்த தோள்களை உடைய முருகனே, அடைக்கலம்

என உருகுதல் சிறிதும் இல் கொடிய வினையனை அவலனை
அசடனை
... என்று கூறி மனம் உருகுதல் கொஞ்சமும் இல்லாத
கொடுமையான வினைக்கு ஈடானவனை, வீணனை, முட்டாளை,

அதி மோகக் கமரில் விழவிடு அழகு உடை அரிவையர் ...
மிகுந்த காமம் என்னும் நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகு
வாய்ந்த விலைமாதர்கள்,

களவினொடு பொருள் அளவளவு அருளிய கலவி அளறிடை
துவளுறும் வெளிறனை
... வஞ்சகமாக, (வருபவருடைய) கைப்
பொருள் கொடுத்த அளவுக்குத் தகுந்தபடி இன்பம் கொடுக்கின்ற
சேர்க்கை என்னும் சேற்றில் சோர்வுறும் அறிவிலியாகிய என்னை,

இனிது ஆள கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை ...
(என் குறைகளைக் கருதாது,) அன்புடன் ஆண்டருள, கருணைக்குப்
பாத்திரமான அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலையில் ஒரு முறை

சுருதி புடை தர வரும் இரு பரிபுர கமல மலர் அடி கனவிலும்
நனவிலும் மறவேனே
... வேதங்கள் பக்கங்களில் முழங்க நடந்து வந்த,
இரண்டு சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடிகளை, கனவிலும்,
விழித்துக் கொண்டிருக்கும் போதும் மறவேனே.

தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட ...
ஒலி மிக்க அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பாகங்கள் கலங்க
அலைச்சல் உறவும்,

விட நதி உமிழ்வன சமுக முக கண பண பணி பதி நெடு
வடமாக
... விஷத்தை ஆறு போலக் கக்கி உமிழும், விளக்கமான
தோற்றத்தைக் கொண்ட கூட்டமான படங்களை உடைய, பாம்பு
அரசனாகிய வாசுகி (கடலைக் கடையும்) நீண்ட கயிறாகவும்,

சகல உலகமு(ம்) நிலைபெற நிறுவிய கனக கிரி திரிதர ...
எல்லா உலகங்களும் நிலைபெறும்படி நிறுத்தி வைக்கப்பட்ட
பொன்மயமான மேரு மலை (மத்தாகச்) சுழலவும்,

வெகு கர மலர் தளர இனியதொர் அமுதினை ஒரு தனி
கடையா நின்று
... (கடைபவர்களின்) அனேக பல திருக்கர
மலர்களும் தளர்ச்சி அடைய, இனியதான அமுதத்தை ஒப்பற்ற
தனி முதல்வனாக நின்று கடைந்து,

அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் ... தேவர்கள் பசி
நீங்க உதவி செய்த கருணை வாய்ந்த மேக வண்ணன்,

அகில புவனமும் அளவிடு குறியவன் அளவு நெடியவன்
அளவிட அரியவன் மருகோனே
... எல்லா உலகங்களையும்
பாதத்தால் அளக்க வல்ல குட்டை வடிவுடைய வாமனன், அளந்த
போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், மதித்து
எண்ணுதற்கு அரியவன் (ஆகிய அத்தகைய திருமாலுக்கு) மருகனே,

அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு
தெளி தர
... பாம்பை அணிகலனாகக் கொண்ட தூய்மையான
சிவபெருமானும் துதிக்கும்படி, உனது குதலைச் சொல்லால்
அவர் தெளிவு பெறும்படி,

ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய
பெருமாளே.
... ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள்
ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.167  pg 2.168  pg 2.169  pg 2.170  pg 2.171  pg 2.172 
 WIKI_urai Song number: 509 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 367 - kumara gurubara guNadhara (thiruvaNNAmalai)

kumara gurupara guNathara nisisara
     thimira thinakara saravaNa pavakiri
          kumari suthapaki rathisutha surapathi ...... kulamAnum

kuRavar siRumiyu maruviya thiraLpuya
     muruka saraNena vurukuthal siRithumil
          kodiya vinaiyanai yavalanai yasadanai ...... yathimOkak

kamaril vizhavidu mazhakudai yarivaiyar
     kaLavi noduporu LaLavaLa varuLiya
          kalavi yaLaRidai thuvaLuRum veLiRanai ...... yinithALak

karuNai yadiyaro daruNaiyi loruvisai
     suruthi pudaithara varumiru paripura
          kamala malaradi kanavilu nanavilu ...... maRavEnE

thamara mikuthirai yeRivaLai kadalkudal
     maRuki yalaipada vidanathi yumizhvana
          samuka mukakaNa paNapaNi pathinedu ...... vadamAka

sakala vulakamu nilaipeRa niRuviya
     kanaka kirithiri tharaveku karamalar
          thaLara viniyatho ramuthinai yoruthani ...... kadaiyAnin

Ramarar pasikeda vuthaviya krupaimukil
     akila puvanamu maLavidu kuRiyavan
          aLavu nediyava naLavida ariyavan ...... marukOnE

aravu punaitharu punitharum vazhipada
     mazhalai mozhikodu theLithara voLithikazh
          aRivai yaRivathu poruLena aruLiya ...... perumALE.

......... Meaning .........

kumara gurupara guNathara nisisara thimira thinakara saravaNapava: "Oh KumarA, oh Supreme Master, You are full of virtues; You are the sun that dispels the darkness called the demons; Oh SaravaNabavA!

kiri kumari sutha pakirathi sutha sura pathi kula mAnum kuRavar siRumiyum maruviya thiraL puya muruka saraN: You are the child of Mount HimavAn's daughter! You are also the son of Bhagirathi (Gangai)! Oh MurugA, with Your strong shoulders You hug DEvayAnai, the deer-like daughter of IndrA, the leader of the celestials, and also VaLLi, the damsel of the hunters! I surrender to You!"

ena urukuthal siRithum il kodiya vinaiyanai avalanai asadanai: - I never say so with my heart melting even slightly; I am such a product of evil deeds, an utter waste and a fool;

athi mOkak kamaril vizhavidu azhaku udai arivaiyar: the beautiful whores are capable of throwing their suitors into an extreme passion which is like a crevice on the earth;

kaLavinodu poruL aLavaLavu aruLiya kalavi aLaRidai thuvaLuRum veLiRanai: treacherously, they manage to dispense pleasure in a measure proportionate to the money they obtain; I am such a stupid person falling into the slushy mud of that so-called carnal pleasure, feeling miserable thereafter;

inithu ALa karuNai adiyarodu aruNaiyil oru visai: (ignoring my shortcomings,) once, in ThiruvaNNAmalai, along with a group of devotees who earned Your compassion, You came kindly to take charge of me,

suruthi pudai thara varum iru paripura kamala malar adi kanavilum nanavilum maRavEnE: accompanied by the chanting of VEdAs on both sides; Your hallowed lotus feet, adorned with anklets, which feet came walking for my sake, can never be forgotten by me even in my dream or while I am awake!

thamara miku thirai eRi vaLai kadal kudal maRuki alaipada: The curved sea tossing noisy waves became so agitated that its bowels began to shake;

vida nathi umizhvana samuka muka kaNa paNa paNi pathi nedu vadamAka: the distinct bunch of hoods of the serpent-king VAsuki spewed out poison which flowed like a river; that VAsuki served as the long rope (for churning the sea);

sakala ulakamu(m) nilaipeRa niRuviya kanaka kiri thirithara: the golden mount MEru was installed as the churning rod so that the entire universe could remain in a state of stability;

veku kara malar thaLara iniyathor amuthinai oru thani kadaiyA ninRu amarar pasi keda uthaviya krupai mukil: when many lotus-like hands (of the churners) became exhausted, He stood alone and churned the sea all by Himself to bring out the sweet nectar and assisted in satiation of the celestials' hunger; He is the compassionate one with the complexion of the dark cloud;

akila puvanamum aLavidu kuRiyavan aLavu nediyavan aLavida ariyavan marukOnE: coming in the form of a dwarf (VAmanan), He was able to measure the entire worlds with His foot; while measuring so, He assumed the gigantic form (of Thirivikrama); He is beyond comprehension through any measure; and You are the nephew of that Lord VishNu!

aravu punaitharu punitharum vazhipada mazhalai mozhikodu theLi thara: When Lord SivA of great purity, who wears the serpent as an ornament, worshipped, You cleared His mind with Your prattling words

oLi thikazh aRivai aRivathu poruL ena aruLiya perumALE.: preaching that knowing the effulgent form of True Knowledge is the most significant thing, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 367 kumara gurubara guNadhara - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]