திருப்புகழ் 333 கொக்குக்கு ஒக்க  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 333 kokkukkuokka  (kAnjeepuram)
Thiruppugazh - 333 kokkukkuokka - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
     தத்தத் தத்தத் தனனத் ...... தனதான

......... பாடல் .........

கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
     கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக்

குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
     கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை

திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
     செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்

சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
     திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ

அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
     டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன்

அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
     புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத்

தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
     கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச்

சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
     சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக்
கொத்து உற்று
... கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள
சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து,

உக்குப் பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல்
தத்து உற்றுக் கழல
... மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி
செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய,

கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித்
திக்கிக் குளறிச் செப்பி
... இழிவான சொற்களைக் கற்று
உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச,

தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை
பேணும் சிக்கு அற்று
... தவறுதலான வழியில் சென்று, குப்பை
நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை
விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று,

உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப்
புகலப் பெறுவேனோ
... உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம்
வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப்
பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப்
பெறுவேனோ?

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு
எதிரிட்டு
... அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து,
மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து,

அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன் ... ஆயுதங்களைச்
செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன்

அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள்
புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக
... உடம்பு கெட்டுப் போய்,
ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர
உருவத்தை அடைந்து நிற்க,

தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண் ...
அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற,
கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட,

கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி ...
கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள்
ஆட்டம் கண்டு,

சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய் ... சக்தியாகிய
வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான
போரைச் செய்தவனே,

சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே. ... சக்தியாகிய காமாட்சி தங்கும்
காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.


வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள்
மிகுதியாக அமைந்த பாடல்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.79  pg 2.80  pg 2.81  pg 2.82 
 WIKI_urai Song number: 475 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 333 - kokkukku okka (kAnjeepuram)

kokkuk kokkath thalaiyiR patRuc cikkath thaLakak
     koththut Rukkup piNiyut ...... RavanAkik

kukkik kakkik kadaiyiR patRath thutRuk kazhalak
     koththaic coRkat RulakiR ...... palapAshai

thikkith thikkik kuLaRic ceppith thappik kedupoyc
     cetRaic cattaik kudilaic ...... cumaipENum

cikkat Rutkuk karuNaic cuththac ciththith thamizhaith
     thittath thukkup pukalap ...... peRuvEnO

akkit tikkit tamaruk kottik kittit tethirit
     tathrath thetRik kadukap ...... porucUran

acchuk kettup padaivit tacchap pattuk kadalut
     pukkup pattuth thurumath ...... thadaivAkath

thakkuth thikkuth thaRukat tokkuth thokkut Rathukat
     kaikkot tittit tudalciR ...... kaNamAdic

caththik kuththith thudiyiR caththik kakkaic camarceyc
     caththik kacchik kumarap ...... perumALE.

......... Meaning .........

kokkukku okkath thalaiyil patRuc cikkaththu aLakak koththu utRu: The hair in the tuft on top of the head turning white like the crane,

ukkup piNi utRavanAkik kukkik kakkik kadaiyil pal thaththu utRuk kazhala: becoming skinny, ailing from diseases, coughing and throwing up, ultimately all the teeth beginning to shake and fall off,

koththaic col katRu ulakil pala pAshai thikkith thikkik kuLaRic ceppi: picking up all foul words and speaking with a stammer many languages of the world,

thappik kedu poyc cetRaic cattaik kudilaic cumai pENum cikku atRu: treading the sinful path, and carrying the burden of this cottage of a body that is nothing but a shirt whose pockets are filled with rubbish; - I wish that the problem of desiring such a body is done away with and that

utkuk karuNaic cuththac ciththith thamizhaith thittaththukkup pukalap peRuvEnO: my heart is filled with compassion; will I be fortunate to acquire the ability to cogently recite immaculate Tamil poems at will, leading to my liberation!

akkittu ikkittu amarukku ottik kitti ittu ethirittu: He dared to engage in combat at many places here and there; he confronted You at a close range;

athraththu etRik kadukap poru cUran: he was the demon SUran who wielded several weapons and fought vigorously;

acchuk kettup padai vittu acchap pattuk kadaluL pukkuppattuth thurumaththu adaivAka: unable to hold on to his weakening body, he abandoned the weapons, hid under the sea out of fear and assumed the disguise of a mango tree;

thakkuth thikkuth thaRukaN thokkuth thokku utRathu kaN: all his valour, along with arrogance, stood there falteringly in a totter while his eyes and other sensory organs were devastated;

kaik kottu ittu ittu udal cil kaNam Adi: only (by reflex) his hands were clapping loudly and the body shook for a few split seconds

caththik kuththith thudiyil caththikkak kaic camar cey: when the powerful spear (SakthivEl) pierced, and SUran shrieked with unbearable pain as You waged the righteous war, Oh Lord!

caththik kacchik kumarap perumALE.: You are seated in KAnchipuram which is the abode of Mother Sakthi KAmAkshi, Oh KumarA, the Great One!


This song is full of hard consonants of the Tamil language to depict the gory fight with the demon SUran.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 333 kokkukku okka - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]