திருப்புகழ் 320 புரைபடுஞ் செற்ற  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 320 puraipadunjchetRa  (kAnjeepuram)
Thiruppugazh - 320 puraipadunjchetRa - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
     தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
          புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன்

பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின்

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
     கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
          கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங்

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
     பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
          கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
     கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
          குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக்

குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
     கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
          குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத்

தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
     சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
          ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத்

தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
     தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
          சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன் ... தணியாத கோபம் முதலிய
குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன்,

தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் ... தவம் ஏதும் இல்லாதவன்,
கலப்பில்லாத பொய்யையே பேசுபவன்,

புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் ... வேறு
திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப்
போன்றவன்,

பொறையிலன் ... பொறுமையே இல்லாதவன்,

கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றி ... பலதரப்பட்ட
உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும்,

பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...
பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும்
இல்லாத பயனற்றவன்,

கொடியேன் நின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன்
... பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக்
கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன்,

கட்டைப் புத்தியன் மட்டன் ... குறுகிய அறிவை உடையவன்,
மட்டமானவன்,

கதியிலன் ... நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன்,

செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும் ... வெட்சிமலர்
அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற
வேலாயுதத்தையும்,

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக்
கச்சியு
... கதிர்காமத்தையும், வட்டமலையையும்*, மற்றைய
திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும்,

முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு
அடைவேனோ
... முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத்
தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ?

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் ... பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற
ஏழு சமுத்திரங்களும்

கதறிவெந்து உட்க ... கதறி, வெந்து போய் வற்றிவிடவும்,

கட்புர துட்டன் குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய ... பெருமைமிக்க
ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது
குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும்,

சென்று ஒருநேமிக் குவடு ஒதுங்க ... ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன்
இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும்,

சொர்க்கத்தர் இடுக்கங் கெட ... தேவர்களின் துயரங்கள் யாவும்
நீங்கவும்,

நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் ... அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக்
கூட்டங்கள் யாவும் நடுங்கவும்,

குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் குடியேற ...
வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது
ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும்,

தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப்
பட்டொழிய
... பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில்
வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு)
விலகவும்,

சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட ... எப்போதும்
வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும்,

தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங்கைக்
கொத்து
... அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான
வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும்

ஒத்துமு ழக்குஞ் சரண கஞ்சத்தில் ... தாள ஒற்றுமையுடன் ஒலி
செய்யும் பாதத் தாமரைகளில்

பொற்கழல் கட்டும் பெருமாளே. ... அழகிய வீரக் கழலைக் கட்டிய
பெருமாளே.


* வட்டமலை என்ற தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.45  pg 2.46  pg 2.47  pg 2.48 
 WIKI_urai Song number: 462 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 320 - puraipadunj chetRa (kAnjeepuram)

puraipadum cetRak kutRama naththan
     thavamilan suththac sathya asathyan
          pukalilan sutRac ceththaiyuL niRkum ...... thurisALan

poRaiyilan koththuth thathvavi kaRpam
     sakalamum patRip patRaRa niRkum
          poruLudan patRuc catRumil vetRan ...... kodiyEnin

karaiyaRum cithrac coRpukazh kaRkum
     kalaiyilan kattaip puththiyan mattan
          kathiyilan ceccaip poRpuya veRpum ...... kathirvElum

kathiraiyum cakrap potRaiyu matRum
     pathikaLum poRpuk kacciyu mutRum
          kanavilum siththath thiRkaru thikkoN ...... dadaivEnO

kuraitharum sutRuc saththasa muthram
     kathaRiven thutkak katpura thuttan
          kulamadan gakket tottozhi yaccen ...... RorunEmik

kuvadothun gaccork kaththari dukkam
     kedanadun gaththik kiRkiri varkkam
          kulisathun gakkaik kotRava naththam ...... kudiyERath

tharaivisum paiccit tiththa irukkan
     cathurmukan sitcaip pattozhi yaccan
          thathamumvan thikkap petRavar thaththam ...... pakaiyOdath

thakaiyathaN daippoR cithravi cithram
     tharusathan gaikkoth thoththumu zhakkum
          saraNakan jaththiR poRkazhal kattum ...... perumALE.

......... Meaning .........

puraipadum cetRak kutRa manaththan: My mind is stained with several blemishes like uncontrollable anger;

thavamilan suththac sathya asathyan: I have never done any penance; I utter unadulterated lies at all times;

pukalilan sutRac ceththaiyuL niRkum thurisALan: I have no other refuge; I am like the dirt in the garbage swirling around in the wind;

poRaiyilan: I have no patience;

koththuth thathvavi kaRpam sakalamum patRi: even though I comprehend all the nuances of the diverse truths,

patRaRa niRkum poruLudan patRuc catRumil vetRan: I draw a blank and become useless when it comes to attaching myself to that totally detached substance (namely God);

kodiyEn: I am a wicked person;

nin karaiyaRum cithrac coRpukazh kaRkum kalaiyilan: I do not have an iota of aesthetic sense to learn about Your boundless glory;

kattaip puththiyan mattan: My intellect is far too shallow; I am debased; and

kathiyilan: I am not destined to attain salvation.

ceccaip poRpuya veRpum kathirvElum: Your mountain-like shoulders adorned with garlands of vetchi flowers, Your dazzling spear,

kathiraiyum cakrap potRaiyu matRum pathikaLum: Your seats in KadhirgAmam, Vattamalai*, other abodes and

poRpuk kacciyu: beautiful KAnchipuram

mutRum kanavilum siththath thiRkaru thikkoNdadaivEnO: must fill up my mind, in their entirety, even in my dreams, so that by comtemplating them, I shall be able to attain You.

kuraitharum sutRuc saththasa muthram kathaRiven thutka: The seven roaring oceans surrounding the earth cried out, boiled and dried up;

katpura thuttan kulamadangakkettottozhiya: the wicked demon SUran, who ruled the great city (of Veeramahendrapuri), was annihilated with his entire clan;

cenRorunEmik kuvadothunga: the unique mount ChakravALam was displaced from its original position;

corkkaththar idukkam keda: the miseries of the celestials were removed;

nadungath thikkiRkiri varkkam: the group of renowned mountains in all the eight directions trembled;

kulisa thungakkaik kotRava naththam kudiyERa: IndrA, holding the weapon vajrAyutham in His holy hand, was able to resettle in His home at AmarApuri;

tharaivisumpaic cittiththa irukkan cathurmukan sitcaip pattozhiya: BrahmA, the four-faced God who is an expert in Rig VedA and who has created the earth and the sky, fled after being punished (by knocks on His heads);

canthathamum vanthikkap petRavar thaththam pakaiyOda: the enemies of Your devotees who always worship You ran away; and

thakaiyathaN daippoR cithravicithram tharusathan gaik koththuoththu muzhakkum: the pretty anklet, thaNdai, and the bunches of golden sathangai (a unique anklet with intricate designs) make lilting sounds in a synchronised meter, adorning

saraNakan jaththiR poRkazhal kattum perumALE.: Your lotus feet, where You are tying the victory anklets, Oh Great One!


* Vattamalai is located in Coimbatore District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 320 puraipadunj chetRa - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]