திருப்புகழ் 279 பகல் இராவினும்  (திருத்தணிகை)
Thiruppugazh 279 pagalirAvinum  (thiruththaNigai)
Thiruppugazh - 279 pagalirAvinum - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான

......... பாடல் .........

பகலி ராவினுங் கருவி யாலனம்
     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்

பழைய வேதமும் புதிய நூல்களும்
     பலபு ராணமுஞ் ...... சிலவோதி

அகல நீளமென் றளவு கூறரும்
     பொருளி லேயமைந் ...... தடைவோரை

அசடர் மூகரென் றவல மேமொழிந்
     தறிவி லேனழிந் ...... திடலாமோ

சகல லோகமும் புகல நாடொறுஞ்
     சறுகி லாதசெங் ...... கழுநீருந்

தளவு நீபமும் புனையு மார்பதென்
     தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா

சிகர பூதரந் தகர நான்முகன்
     சிறுகு வாசவன் ...... சிறைமீளத்

திமிர சாகரங் கதற மாமரஞ்
     சிதற வேல்விடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பகலி ராவினுங் கருவி யால் ... பகலிலும் இரவிலும் இந்த உடம்பு
என்ற கருவியால்

அ(ன்)னம் பருகி யாவிகொண்டு ... சோறு உண்டு உயிரைப்
பாதுகாத்து

உடல்பேணி ... இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,

பழைய வேதமும் புதிய நூல்களும் ... பழமையான வேத
நூல்களையும் புதுமையான நூல்களையும்

பலபுராணமுஞ் சிலவோதி ... பலவகையான புராணங்களையும்
ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து,

அகல நீளமென்று அளவு கூறரும் ... இத்தனை அகலம்
இத்தனை நீளம் என்று அளக்க முடியாத

பொருளிலே அமைந்து அடைவோரை ... பேரின்பப் பொருளிலே
மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை,

அசடர் மூகரென்று அவலமே மொழிந்து ... மூடர், ஊமையர்
என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து

அறிவிலேன் அழிந்திடலாமோ ... அறிவிலியாகிய அடியேன்
அழிந்து போகலாமா?

சகல லோகமும் புகல ... எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி,

நாடொறும் சறுகிலாத ... தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற

செங்கழுநீரும் தளவு நீபமும் ... செங்கழுநீர் மலரும், முல்லையும்,
கடப்ப மலரும்

புனையு மார்ப ... தரிக்கின்ற மார்பனே,

தென் தணிகை மேவு செங்கதிர்வேலா ... அழகிய திருத்தணிகையில்
வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா,

சிகர பூதரந் தகர ... சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை
பொடிப்பொடியாக,

நான்முகன் சிறுகு வாசவன் ... பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து
தாழ்ந்த இந்திரனும்

சிறைமீள ... சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற,

திமிர சாகரங் கதற ... இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக,

மாமரஞ் சிதற ... மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல்
பிளவுபட,

வேல்விடும் பெருமாளே. ... வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.713  pg 1.714  pg 1.715  pg 1.716 
 WIKI_urai Song number: 295 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 279 - pagal irAvinum (thiruththaNigai)

pagal irAvinung karuviyAl anam
     parugi AvikoN ...... dudal pENi

pazhaiya vEdhamum pudhiya nUlgaLum
     pala purANamum ...... sila Odhi

agala neeLamendr aLavu kUR arum
     poruLilE amaindh ...... adaivOrai

asadar mUkarendr avalamE mozhindh
     aRivilEn azhin ...... dhidalAmO

sakala lOkamum pugala nALthorum
     saRugilAdha seng ...... kazhu neerum

thaLavu neepamum punaiyu mArbathen
     thaNigai mEvu seng ...... kadhir vElA

sikara bUtharan thagara nAn mukan
     siRugu vAsavan ...... siRaimeeLa

thimira sAgarang kadhaRa mAmaram
     sidhaRa vEl vidum ...... perumALE.

......... Meaning .........

pagal irAvinung karuviyAl anam parugi: Day and night I have been using my organs to consume food

AvikoN dudal pENi: to sustain my life and to nurture my body!

pazhaiya vEdhamum pudhiya nUlgaLum pala purANamum sila Odhi: There are a few scholars who have studied old scriptures and some new writings and a variety of epics of which they have specialised in a few;

agala neeLamendr aLavu kUR arum poruLilE amaindh adaivOrai: they have understood the rare truth which cannot be measured in terms of length and breadth; and they have derived peace from that truth of bliss.

asadar mUkarendr avalamE mozhindhu: I was ridiculing these wise men as fools and dumb.

aRivilEn azhin dhidalAmO: Why was I so stupid, following such a destructive path?

sakala lOkamum pugala: With the whole world praising,

nALthorum saRugilAdha seng kazhu neerum: "You wear the red kazhuneer flowers, which bloom without fail, daily"

thaLavu neepamum punaiyu mArba: jasmine and kadamba flowers decorating Your chest.

thenthaNigai mEvu seng kadhir vElA: You have chosen this beautiful place ThiruththaNigai as Your abode, Oh MurugA with the brilliant spear!

sikara bUtharan thagara: Mount Krouncha with all its peaks was shattered into pieces;

nAn mukan siRugu vAsavan siRaimeeLa: BrahmA and the humiliated IndrA, were liberated from their prisons by SUran;

thimira sAgarang kadhaRa: the dark turbulent seas were howling with the noise of the waves;

mAmaram sidhaRa: and SUran, who took the disguise of a mango tree, was split into two parts; when

vEl vidum perumALE.: You threw Your mighty Spear, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 279 pagal irAvinum - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]