திருப்புகழ் 231 முறுகு காள  (சுவாமிமலை)
Thiruppugazh 231 muRugukALa  (swAmimalai)
Thiruppugazh - 231 muRugukALa - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
     முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே

முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
     முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
     அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி

அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
     னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
     தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா

தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
     தரணி யேழும் வலம்வ ருந்திண் ...... மயில்வீரா

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
     வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா

மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
     வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ள(ம்)
மயங்கி
... கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட
இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி,

முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே முழுகு காதல்
தனை மறந்து
... தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின்
மேல் முழுகுகின்ற காதலை மறந்து,

பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி
அயராதே
... மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு
முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல்,

அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை
அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி
... அறுகம் புல்,
ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ
இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது
திருவடியை விரும்பி,

அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும்
அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே
...
தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி,
அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க
முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக.

தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து
தமர வேலை சுவற வென்ற வடி வேலா
... அஞ்சாமை கொண்ட
வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய
உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற
கூரிய வேலனே,

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு
தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா
... முத்துப் போன்ற
பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம்
உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே,

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில்
இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா
... குற்றம்
இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது
இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே,

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி
வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே.
... பொருந்திய புலி நகக்
கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக்
காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.543  pg 1.544  pg 1.545  pg 1.546 
 WIKI_urai Song number: 227 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 231 - muRugu kALa (swAmimalai)

muRuku kALa vidama yinRa irukaN vEli nuLama yangi
     muLari vEri mukaiya darntha ...... mulaimeethE

muzhuku kAthal thanaima Ranthu parama njAna voLisi Ranthu
     mukamo rARu mikavi rumpi ...... ayarAthE

aRuku thALi naRaiya vizhntha kuvaLai vAsa malarka ranthai
     adaiya vAri misaipo zhinthu ...... nadipENi

avasa mAki yuruku thoNda rudana thAki viLaiyu manpi
     nadimai yAku muRaimai yonRai ...... aruLvAyE

thaRukaN veerar thalaiya rinthu porutha cUra nudalpi Lanthu
     thamara vElai suvaRa venRa ...... vadivElA

tharaLa mUra lumaima danthai mulaiyi lAra amutha muNdu
     tharaNi yEzhum valamva runthiN ...... mayilveerA

maRuvi lAtha thinaivi Laintha punamvi dAma lithaNi runthu
     valiya kAval punaiya Nangin ...... maNavALA

maruvu njAzha laNise runthi yadavi cUtha vanane rungi
     vaLarsu vAmi malaiya marntha ...... perumALE.

......... Meaning .........

muRuku kALa vidam ayinRa iru kaN vElin u(L)La(m) mayangi: I lost my heart to those whores whose two spear-like eyes have imbibed the gushing and evil poison;

muLari vEri mukai adarntha mulai meethE muzhuku kAthal thanai maRanthu: forgetting my passion for drowning in their fragrant bosom that looks like the lotus bud,

parama njAna oLi siRanthu mukam oru ARu mika virumpi: I wish to have the vision of Your six hallowed faces that radiate the bright light of the great Knowledge

ayarAthE aRuku thALi naRai avizhntha kuvaLai vAsa malar karanthai adaiya vAri misai pozhinthu un adi pENi: by showering, without tiring, plenty of aRugam (cynodon) grass, Umaththai flower, the fragrant lily and the green vilvam (bael) leaves dipped in the holy ash filled with aroma on Your hallowed feet which I am seeking with great devotion!

avasamAki uruku thoNdar udan athAki viLaiyum anpin adimaiyAkum muRaimai onRai aruLvAyE: Kindly grant me the good fortune of mingling with Your devotees who spontaneously lose themselves and melt their heart so that I could abide by their great discipline and be deemed as Your servant in bondage of love, Oh Lord!

thaRukaN veerar thalai arinthu porutha cUran udal piLanthu thamara vElai suvaRa venRa vadi vElA: The demon SUran fought the war by severing the heads of many fearless warriors; by splitting his body into two, You triumphantly wielded the spear, which also dried up the roaring sea, Oh Lord!

tharaLam Ural umai madanthai mulaiyil Ara amutham uNdu tharaNi Ezhum valam varum thiN mayil veerA: After copiously imbibing the nectar-like breast-milk of Goddess UmA, whose teeth are like pearls, You went around the seven worlds, mounting the powerful peacock, Oh valorous One!

maRu ilAtha thinai viLaintha punam vidAmal ithaNil irunthu valiya kAval punai aNangin maNavALA: She never left the millet-field that produced unblemished crops of millet; She was seated on the raised bamboo platform in the millet-field and zealously guarded the crops; and You are the consort of that damsel, VaLLi!

maruvu njAzhal aNi serunthi adavi cUtha vana(m) nerungi vaLar suvAmi malai amarntha perumALE.: The flower garden in this place has aptly fitting kondRai (Indian laburnum) flowers of the variety of tiger's claws and beautiful cherunthi flowers; mango forests also abound in SwAmimalai (ThiruvErakam), and You are seated here, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 231 muRugu kALa - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]