திருப்புகழ் 230 மருவே செறித்த  (சுவாமிமலை)
Thiruppugazh 230 maruvEseRiththa  (swAmimalai)
Thiruppugazh - 230 maruvEseRiththa - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான

......... பாடல் .........

மருவே செறித்த குழலார் மயக்கி
     மதனா கமத்தின் ...... விரகாலே

மயலே யெழுப்பி யிதழே யருத்த
     மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
     பிரியாது பட்ச ...... மறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்த
     குகனே குறத்தி ...... மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
     குடகா விரிக்கு ...... வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
     சிறுவா கரிக்கு ...... மிளையோனே

திருமால் தனக்கு மருகா வரக்கர்
     சிரமே துணித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மருவே செறித்த ... மருக்கொழுந்து வாசனை மிகுந்த

குழலார் மயக்கி ... கூந்தலையுடைய பெண்கள் என்னை மயக்கி

மதனா கமத்தின் ... காம சாஸ்திரத்தின்

விரகாலே ... தந்திர வகைகளாலே

மயலே யெழுப்பி ... மோகத்தை மூட்டிவிட்டு,

இதழே யருத்த ... வாயிதழ் ஊறலை ஊட்டிவிட,

மலைபோல் முலைக்குள் ... மலைபோன்ற அவர்களின் மார்பகங்களில்

உறவாகிப் பெருகாத லுற்ற ... விருப்பங்கொண்டு மிக்க ஆசை பூண்ட

தமியேனை நித்தல் பிரியாது ... அடியேனை நித்தமும் பிரியாமலும்,

பட்ச மறவாதே ... என்னிடம் அன்பு மாறாமலும்,

பிழையே பொறுத்து ... என் பிழைகளைப் பொறுத்து

உனிருதாளி லுற்ற ... உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள

பெருவாழ்வு பற்ற ... பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக

அருள்வாயே ... அருள் புரிவாயாக.

குருவா யரற்கும் ... குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கும்

உபதேசம் வைத்த ... பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த

குகனே குறத்தி மணவாளா ... குகனே, குறத்தி வள்ளியின்
மணவாளனே,

குளிர்கா மிகுத்த ... குளிர்ந்த சோலைகளால் நிறைந்த,

வளர்பூக மெத்து ... வளர்ந்தோங்கிய கமுக மரங்கள் சூழ்ந்த,

குடகா விரிக்கு வடபாலார் ... மேற்கினின்று வரும் காவிரிக்கு
வடபாலுள்ள

திருவேரகத்தில் உறைவாய் ... திருவேரகமாம் சுவாமிமலையில்
வாழ்பவனே,

உமைக்கொர் சிறுவா ... உமாதேவியின் ஒப்பற்ற மகனே,

கரிக்கு மிளையோனே ... யானைமுகக் கணபதிக்குத் தம்பியே,

திருமால் தனக்கு மருகா ... திருமாலுக்கு மருமகனே,

அரக்கர் சிரமே துணித்த பெருமாளே. ... அரக்கரின் சிரங்களை
வெட்டியெறிந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.487  pg 1.488  pg 1.489  pg 1.490 
 WIKI_urai Song number: 200 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 230 - maruvE seRiththa (SwAmimalai)

maruvE seRiththa kuzhalAr mayakki
     mathanA kamaththin ...... virakAlE

mayalE ezhuppi ithazhE yaruththa
     malaipOl mulaikkuL ...... uRavAkip

perukAthaluRRa thamiyEnai niththal
     piriyAthu patcham ...... maRavAthE

pizhaiyE poRuththun iruthALil uRRa
     peruvAzhvu paRRa ...... aruLvAyE

guruvAy araRkum upathEsam vaiththa
     guhanE kuRaththi ...... maNavALA

kuLirkA mikuththa vaLar pUkameththu
     kudakAvirikku ...... vadapAlAr

thiruvErakaththi luRaivAy umaikkor
     ciRuvA karikku ...... iLaiyOnE

thirumAl thanakku marukA varakkar
     ciramE thuniththa ...... perumALE.

......... Meaning .........

maruvE seRiththa kuzhalAr: Women with fragrant hair with the scent of maru

mayakki mathanA kamaththin virakAlE: tempted me with all the skills they had learned from the book of love.

mayalE ezhuppi ithazhE yaruththa: They aroused me by showering kisses;

malaipOl mulaikkuL uRavAki: and I fell for their huge bosoms.

perukAthaluRRa thamiyEnai: Such an infatuated lowly me

niththal piriyAthu: should never be left alone by You,

patcham maRavAthE: and Your love for me should not change.

pizhaiyE poRuththu: You must forgive all my sins,

un iruthALil uRRa peruvAzhvu paRRa aruLvAyE: and allow me to hold Your two feet firmly and attain eternal bliss.

guruvAy araRkum upathEsam vaiththa: You were the Master of SivA and You preached to Him the holy ManthrA (OM).

guhanE kuRaththi maNavALA: You are GuhA and also the consort of VaLLi, the KuRava damsel.

kuLirkA mikuththa vaLar pUkameththu: A place full of cool groves and tall betel nut trees,

kudakAvirikku vadapAlAr: which is north of Kaveri river flowing from the West,

thiruvErakaththil uRaivAy: is the town of ThiruvEragam (SwAmimalai), and it is Your abode.

Umaikkor ciRuvA karikku iLaiyOnE: You are the son of UmA (PArvathi) and the younger brother of the Elephant-faced Ganapathi.

thirumAl thanakku marukA: You are the Nephew of Vishnu.

Arakkar ciramE thuniththa perumALE.: You beheaded all the demons (asuras), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 230 maruvE seRiththa - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]