திருப்புகழ் 211 கறை படும் உடம்பு  (சுவாமிமலை)
Thiruppugazh 211 kaRaipadumudambU  (swAmimalai)
Thiruppugazh - 211 kaRaipadumudambU - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தானனத்
     தனதனன தந்த தானனத்
          தனதனன தந்த தானனத் தனதான

......... பாடல் .........

கறைபடுமு டம்பி ராதெனக்
     கருதுதலொ ழிந்து வாயுவைக்
          கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக்

கவலைபடு கின்ற யோககற்
     பனைமருவு சிந்தை போய்விடக்
          கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக்

குறைவறநி றைந்த மோனநிர்க்
     குணமதுபொ ருந்தி வீடுறக்
          குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா

குமரசர ணென்று கூதளப்
     புதுமலர்சொ ரிந்து கோமளப்
          பதயுகள புண்ட ரீகமுற் ...... றுணர்வேனோ

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
     புயலுடன டங்க வேபிழைத்
          திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித்

திமிரமிகு சிந்து வாய்விடச்
     சிகரிகளும் வெந்து நீறெழத்
          திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும்

பிறைமவுலி மைந்த கோவெனப்
     பிரமனைமு னிந்து காவலிட்
          டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப்

பெருகுமத கும்ப லாளிதக்
     கரியெனப்ர சண்ட வாரணப்
          பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து ...
குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை
விட்டு,

வாயுவை கரும வசனங்களால் மறித்து ... (அவ்வுடல் நிலைத்து
நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில்* மந்திரங்களால்
தடுத்து நிறுத்தி,

அனல் ஊதி ... மூலாக்கினியை எழுப்பி,

கவலைப் படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்
விட
... கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப்
பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும்,

கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள ... கலக்கத்தைத் தரும்
ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம்
அழியவும்,

குறைவு அற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி
வீடு உற
... குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள்
அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும்,

குரு மலை விளங்கும் ஞான சற் குரு நாதா ... (அதற்காக)
சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே,

குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து ... குமரனே,
சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து,

கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ ...
(உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து
உன்னை உணர்வேனோ?

சிறை தளை விளங்கும் பேர் ... சிறையும் விலங்குமாய்க் கிடந்து
விளங்கியவர்களான தேவர்கள்

முடிப்புயல் உடன் அடங்கவே பிழைத்து ... இந்திரன் முதலான
யாவரும் ஒருங்கே பிழைக்கவும்,

இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி ... தேவர்கள் தங்கள்
ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப்
புரிந்து,

திமிர மிகு சிந்து வாய் விட ... இருள் மிகுந்த கடல் ஓலமிட,

சிகரிகளும் வெந்து நீறு எழ ... மலைகள் வெந்து பொடியாக,

திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும் ... (சுதர் ன)
சக்கரத்தை ஏந்தியவரும் பொன்முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும்,

பிறை மவுலி மைந்த கோ என ... பிறைச் சந்திரனை முடியில் சூடிய
சிவபெருமானின் மைந்தனே, (சூரனை அழித்தருளுக என்று)
இரங்கி வேண்ட,

பிரமனை முனிந்து காவல்இட்டு ... பிரமனைக் கோபித்துச்
சிறையிட்டு,

ஒரு நொடியில் மண்டு சூரனை பொருதேறி ... ஒரு நொடிப்
பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் சண்டை செய்து வென்று,

பெருகு மத கும்ப லாளிதம் ... பெருகி வருகின்ற மத நீருள்ள
மத்தகத்தையும், அழகையும் கொண்ட

கரி என ப்ரசண்ட வாரணப் பிடி தனை ... யானை எனப்படும்
வீரம் கொண்ட (ஐராவதம் என்னும்) வெள்ளை யானையால்
வளர்க்கப்பட்ட தேவயானையை

மணந்த சேவக பெருமாளே. ... மணம் புரிந்த வலிமை வாய்ந்த
பெருமாளே.


* தொழில் மந்திரங்கள் ஆகர்ஷண, ஸ்தம்பநாதி மந்திரங்கள் ஆகும்.
இவற்றை கர்மயோகிகள் மேற்கொள்வர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.513  pg 1.514  pg 1.515  pg 1.516 
 WIKI_urai Song number: 212 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 211 - kaRai padum udambU (SwAmimalai)

kaRai padum udambi rAdhenak
     karudhudhal ozhindhu vAyuvaik
          karuma vachanangaLal maRiththu ...... analUdhi

kavalai padugindra yOga kaR
     panai maruvu chindhai pOyvidak
          kalagam idum anjum vEraRa ...... cheyal mALa

kuRaivaRa niRaindha mOna nir
     guNamadhu porundhi veeduRa
          gurumalai viLangu nyAna saR ...... gurunAthA

kumara saraNendru kUdhaLa
     pudhu malar sorindhu kOmaLa
          padhayugaLa pundareekam utr ...... uNarvEnO

siRai thaLai viLangu pEr mudip
     puyal udan adangavE pizhaiththu
          imaiyavargaL thangaLUr puga ...... samarAdi

thimiramigu sindhu vAy vida
     sigarigaLum vendhu neeRezha
          thigiri koL anantha sUdigai ...... thirumAlum

piRai mavuli maindha kOvenap
     biramanai munindhu kAvalittu
          oru nodiyil maNdu sUranai ...... porudhERi

perugu madha kumba lALitha
     kariyena prachaNda vAraNa
          pididhanai maNandha sEvaka ...... perumALE.

......... Meaning .........

kaRai padum udambi rAdhenak karudhudhal ozhindhu: Ceasing to think that the body, the source of blemishes, will not be everlasting,

vAyuvaik karuma vachanangaLal maRiththu: (in order that the body could last for ever) one holds the inhaled breath by means of certain ThAnthrik ManthrAs*;

analUdhi: the fundamental and intrinsic fire is aroused within the body;

kavalai padugindra yOga kaRpanai maruvu chindhai pOyvida: this kind of worrisome Yogic exercises should not occupy my mind;

kalagam idum anjum vEraRa cheyal mALa: my five senses that cause so much trouble should be annihilated; my actions should cease to exist;

kuRaivaRa niRaindha mOna nirguNamadhu porundhi veeduRa: I must reach the ultimate bliss after attaining the most satisfying tranquility and a stage bereft of any characteristic (vice or virtue).

gurumalai viLangu nyAna saR gurunAthA: (For that) I must say "Oh the Greatest and Wisest Master, seated in the hill of SwAmimalai,

kumara saraNendru: Oh Kumara, I surrender to You" offering

kUdhaLa pudhu malar sorindhu kOmaLa padhayugaLa pundareekam utr uNarvEnO: fresh KUthaLa flowers at Your two hallowed feet. Meditating on them shall I realise You!

siRai thaLai viLangu pEr mudippuyal udan adangavE pizhaiththu: The celestials beginning from IndrA suffered in prisons, all shackled up; in order that they could be released,

imaiyavargaL thangaLUr puga samarAdi: and for the return to their golden land (of AmarAvathi), You waged the war;

thimiramigu sindhu vAy vida: the dark seas made a loud noise;

sigarigaLum vendhu neeRezha: several mountains were burnt down to pieces;

thigiri koL anantha sUdigai thirumAlum piRai mavuli maindha kOvena: Lord Vishnu, who holds the disc (Sudharsanam) in His hand and wears the golden crown, beseeched You, saying "Oh the son of Lord SivA who wears the crescent moon, kindly save us all (by killing the demon SUran)";

biramanai munindhu kAvalittu: You were so enraged with Brahman that You imprisoned Him;

oru nodiyil maNdu sUranai porudhERi: in a moment, You fought and conquered the menacingly advancing demon SUran!

perugu madha kumba lALitha kariyena prachaNda vAraNa: The powerful elephant AirAvadham was large and elegant, with fluid oozing from his jaws denoting its ferocity;

pididhanai maNandha sEvaka perumALE.: the young damsel, DEvayAnai, was reared by that white elephant, and You married Her, Oh valorous and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 211 kaRai padum udambU - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]