திருப்புகழ் 195 வனிதை உடல்  (பழநி)
Thiruppugazh 195 vanidhaiudal  (pazhani)
Thiruppugazh - 195 vanidhaiudal - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
     வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே

மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
     வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக்

கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
     கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக்

கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
     கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய்

புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
     புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே

பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
     புதியமயி லேறு கந்த ...... வடிவேலா

பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
     பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே

பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
     பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வனிதை உடல் காய நின்று உதிரமதிலே உருண்டு ...
தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே
திரட்சிபெற்று வளையவந்து,

வயிறில் நெடு நாள் அலைந்து புவிமீதே ... அவளது வயிற்றில்
நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல்

மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து ... மனித
உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று,

வயது பதினாறு சென்று வடிவாகி ... பதினாறு வயதை அடைந்து,
ஆணழகனாக ஆகி,

கனகமுலை மாதர் தங்கள் வலையில் மிகவே உழன்று ... அழகிய
மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும்
திரிந்து,

கனிவதுடனே அணைந்து பொருள்தேடி ... அன்புடனே
அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி,

கனபொருளெலாம் இழந்து மயலில்மிகவே அலைந்த ... பெரும்
பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த

கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் ... மூடனாகிய
அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க.

புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி
இதழ் ஊறல் உண்ட புலவோனே
... தினைப்புனத்தில்
வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி
தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே,

பொரு மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய
மயில் ஏறு கந்த வடிவேலா
... மலர்க்கணையால் போர் புரிந்த
மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த
புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய
வடிவேலனே,

பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி ... பாம்பை
ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும்,
மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும்,

பரம கலியாணி தந்த பெருவாழ்வே ... நித்திய மங்களமுடையவளும்
ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே,

பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று ...
பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று
மீளுமாறு அருள் புரிந்து,

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. ... பழநிமலை மீது
நின்றருளிய பெருமாளே.


* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப்
பிறந்து 'மாதங்கி' எனப் பெயர் பெற்றாள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.346  pg 1.347 
 WIKI_urai Song number: 142 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 195 - vanidhai udal (pazhani)

vanithaiyudal kAya ninRu vuthiramathi lEyu ruNdu
     vayiRilnedu nALa lainthu ...... puvimeethE

manitharuru vAki vanthu anuthinamu mEva Larnthu
     vayathupathi nARu senRu ...... vadivAkik

kanakamulai mAthar thangaL valaiyilmika vEyu zhanRu
     kanivathuda nEya Nainthu ...... poruLthEdik

kanaporuLe lAmi zhanthu mayalilmika vEya laintha
     kasadanenai yALa vunRa ...... naruLthArAy

punamathanil vAzhu kinRa vanithairagu nAthar thantha
     puthalviyitha zhURa luNda ...... pulavOnE

porumathanai neeRu kaNda ariyasiva nAru kantha
     puthiyamayi lERu kantha ...... vadivElA

panakamaNi mAma thangi kumariveku neeli saNdi
     paramakali yANi thantha ...... peruvAzhvE

pakaiyasurar mALa venRu amarar siRai meeLa venRu
     pazhanimalai meethi ninRa ...... perumALE.

......... Meaning .........

vanithai udal kAya ninRu uthiramathilE uruNdu: Being confined in the womb of the mother drying up her body, rolling over in her blood gathering strength,

vayiRil nedu nAL alainthu puvimeethE manithar uruvAki vanthu: and suffering for many a day in her womb, finally I took a human form and arrived on this earth;

anuthinamumE vaLarnthu vayathu pathinARu senRu vadivAki: I grew up everyday and attained the age of sixteen, becoming a handsome youth;

kanakamulai mAthar thangaL valaiyil mikavE uzhanRu: I roamed around a lot being ensnared by whores with beautiful bosom;

kanivathudanE aNainthu poruLthEdi: I hugged them with passion and went about in search of wealth (to shower on them);

kanaporuLelAm izhanthu mayalilmikavE alaintha kasadan: I squandered away all my large riches; I am a stupid fool having indulged in delusory lust and wandering aimlessly;

enai ALa unRan aruLthArAy: kindly bless me with Your grace and take charge of me!

punam athanil vAzhukinRa vanithai ragunAthar thantha puthalvi ithazh URal uNda pulavOnE: She is the damsel, VaLLi, who lives in the millet field; She is the daughter of Raguraman (VishNu); You imbibe the nectar from her lips, Oh Great Poet!

poru mathanai neeRu kaNda ariya sivanAr ukantha puthiya mayil ERu kantha vadivElA: He burnt down Manmathan to ashes, who fought with arrows of flowers; that unique Lord SivA loves the novel peacock mounted by You, Oh KanthA, with the sharp spear!

panaka maNi mA mathangi kumari veku neeli saNdi: She is the great MAthangi* who wears snakes as jewels; She is youthful; She has a dark blue complexion; She is the swift ChaNdi (Durga);

parama kaliyANi thantha peruvAzhvE: She is the Supreme Mother who blesses all with prosperity; You are the greatest treasure of that Goddess UmAdEvi!

pakai asurar mALa venRu amarar siRai meeLa venRu: The hostile demons were conquered and killed by You while the celestials were freed from their prisons,

pazhanimalai meethil ninRa perumALE.: and You stood triumphantly on the top of Mount Pazhani, Oh Great One!


* In appreciation of the great penance performed by Sage Mathangar, Goddess PArvathi was born to him as his daughter with the name MAthangi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 195 vanidhai udal - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]