திருப்புகழ் 193 வஞ்சனை மிஞ்சி  (பழநி)
Thiruppugazh 193 vanjanaiminji  (pazhani)
Thiruppugazh - 193 vanjanaiminji - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தந்தன தான தந்தன
     தந்தன தந்தன தான தந்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான

......... பாடல் .........

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி

மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
     தந்தக டம்பிக ளூற லுண்டிடு
          மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே

சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
     இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
          சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே

தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
     கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
          தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ

கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
     வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
          கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே

கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
     கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
          கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே

குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
     மின்பமி குந்திட வேய ணைந்தருள்
          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா

கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
     பண்புத ருந்திரு வாவி னன்குடி
          குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை
கண்டவர் வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள்
...
வஞ்சனை மிகுந்த மாய வம்பு செய்பவர்கள். தம்மிடம் வந்த ஆடவர்களை
துன்புறுத்துவோர். (உண்மைக்) காதல் இல்லாமல் பல அன்பு
வார்த்தைகளைப் பேசி கட்டிலில் அமர்ந்து கலவி வேடிக்கைகளைத் தரும்
பொல்லாதவர்கள்.

ஊறல் உண்டிடு மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும்
உரையாலே சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல்
புரிந்து உருகாத தொண்டிகள்
... காமுகரின் வாயிதழ் ஊறலை
உண்ணும் வேசியர்கள். கண்டிப்புடன் பேசும் வார்த்தைகளால்
கவலையைத் தருகின்ற மோகத் துர் நடத்தையர். இனிமையான
சொற்களை (வெளியில்) பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத
விலைமகளிர்.

சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே தங்களில்
நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை
முண்டைகள் தந்த சுகம் தனையே உகந்து உடல்
மெலிவேனோ
... (இத்தகையோரின்) இணக்கத்தையே
விரும்பினவனாகிய நான் தளராமல் (எப்போதும்)
அவர்களிடத்தேயே உள்ளம் களிப்படைந்து, அவர்கள்
கொஞ்சியும் நடனம் புரிந்தும் வேசை முண்டைகளாய்
கொடுத்த சுகத்தையே விரும்பி உடல் மெலிந்து போவேனோ?

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி
மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு
... கம்சன்
ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில்
ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய
வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன்
இருந்தும் இசை பாடி,

விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால்
மகிழ்ந்து அருள் மருகோனே
... (கண்ணனாக) விளங்கிய
நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும்
மருகனே,

குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே
அணைந்து அருள் குன்று என வந்து அருள் நீப(ம்) முந்திய
மணி மார்பா
... யானையாகிய (ஐராவதம்) வளர்த்த வஞ்சிக் கொடி
போன்ற தேவயானையையும், மான் பெற்ற மகளாகிய வள்ளியையும்
இன்பம் பெருகவே அணைந்தருளும் மலை போல் வந்து அருளிய,
கடப்ப மாலை முற்பட்டு விளங்கும் அழகிய மார்பனே,

கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும்
திருவாவினன்குடி குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள்
பெருமாளே.
... பூங்கொத்துக்கள் மலரும் குளங்கள் நிரம்பிய அழகு
விளங்கும் (பழநி ஆகிய) திரு ஆவினன்குடியில் உள்ள குன்றுகளின்
எல்லா இடத்திலும் விளங்கி வீற்றருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.278  pg 1.279  pg 1.280  pg 1.281 
 WIKI_urai Song number: 111 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 193 - vanjanai minji (pazhani)

vanjanai minjiya mAya vampikaL
     vanthavar thangaLai vAthai kaNdavar
          vangaNa muntheri yAma lanpukaL ...... palapEsi

manjami runthanu rAka vinthaikaL
     thanthaka dampika LURa luNdidu
          maNdaikaL kaNditha mAymo zhinthidu ...... muraiyAlE

sanjala muntharu mOka laNdikaL
     insolpu rinthuru kAtha thoNdikaL
          sangama menpathai yEpu rinthava ...... nayarAthE

thangaLil nenjaka mEma kizhnthavar
     konjina dampayil vEsai muNdaikaL
          thanthasu kanthanai yEyu kanthudal ...... melivEnO

kanjanvi dumchaka dAsu ranpada
     venRuku runthini lERi mangaiyar
          kaNkaLsi vanthida vEka lantharu ...... muRaiyAlE

kaNduma kizhnthazha kAyi runthisai
     koNduvi Langiya nALi lanpodu
          kaNkuLi runthiru mAlma kizhntharuL ...... marukOnE

kunjara vanjiyu mAnma danthaiyu
     minpami kunthida vEya NaintharuL
          kunRena vantharuL neepa munthiya ...... maNimArpA

konthavi zhunthada mEni rampiya
     paNputha runthiru vAvi nankudi
          kunRuka Lenginu mEva LarntharuL ...... perumALE.

......... Meaning .........

vanjanai minjiya mAya vampikaL vanthavar thangaLai vAthai kaNdavar vangaNamum theriyAmal anpukaL pala pEsi manjam irunthu anurAka vinthaikaL thantha kadampikaL: These treacherous women resort to deliberate and tantalising mischief. They illtreat the men who come to them seeking their company. These wicked women speak many affectionate words without (true) love and offer quirky carnal pleasure sitting on the bed.

URal uNdidu maNdaikaL kaNdithamAy mozhinthidum uraiyAlE sanjalamum tharu mOka laNdikaL in sol purinthu urukAtha thoNdikaL: These whores imbibe the saliva gushing from their suitors' lips. These passionate women, treading immoral path, speak sternly, causing concern. Outwardly, they might be talking sweetly, but these whores do not have even an iota of compassion in their heart.

sangamam enpathaiyE purinthavan ayarAthE thangaLil nenjakamE makizhnthavar konji nadam payil vEsai muNdaikaL thantha sukam thanaiyE ukanthu udal melivEnO: Seeking the company of this kind of women, I persistantly derive enjoyment from them always to my heart's content; why am I becoming leaner and weaker indulging in the pleasure offered by these flirting and dancing prostitutes?

kanjan vidum chakadAsuran pada venRu kurunthinil ERi mangaiyar kaNkaL sivanthidavE kalantha aru muRaiyAlE kaNdu makizhnthu azhakAy irunthu isai koNdu: He conquered and killed the demon ChakatAsuran sent by Kamsan; He climbed the kuruntha tree (wild lemon tree) and alternately made love and squabbled with the gOpees (shepherd girls) until their eyes reddened; He stared at the girls in many rare ways and gladly kept nice company with them in group-singing;

viLangiya nALil anpodu kaN kuLirum thirumAl makizhnthu aruL marukOnE: (coming as KrishNa) He gracefully befriended those girls with His cool and charming eyes in those days; and You are the dear and elating nephew of that Lord VishNu!

kunjara vanjiyum mAn madanthaiyum inpam mikunthidavE aNainthu aruL kunRu ena vanthu aruL neepa(m) munthiya maNi mArpA: She is DEvayAnai who has a waist like the creeper, vanji (rattan reed) and was reared the elephant (AirAvadham); and the other one is VaLLi delivered by a deer; hugging them both happily like a mountain, You display prominently the kadappa garland on Your broad chest, Oh Lord!

konthu avizhum thadamE nirampiya paNpu tharum thiruvAvinankudi kunRukaL enginumE vaLarnthu aruL perumALE.: In this town, Thiru Avinankudi (Pazhani), which is surrounded by many beautiful ponds with bunches of flowers blossoming, You are seated graciously in all the hills, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 193 vanjanai minji - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]