திருப்புகழ் 176 புடவிக்கு அணி  (பழநி)
Thiruppugazh 176 pudavikkuaNi  (pazhani)
Thiruppugazh - 176 pudavikkuaNi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனதன தனதன தந்தத்
     தனனத் தனதன தனதன தந்தத்
          தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
     கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
          புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன்

புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
     கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
          புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ

ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
     செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
          றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா

எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
     கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
          டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும்

பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
     சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
          புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப்

பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
     குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
          புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா

படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
     கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
          பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே

பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
     கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
          பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புடவிக்கு அணி துகில் என வளர் ... பூமிக்கு உடுக்கப்படும்
ஆடை எனப் பரந்துள்ள

அந்தக் கடல் எட்டையும் அற குடி முநி ... அந்த எட்டுத்
திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர்,

எண் கண் புநிதச் சத தள நிலை கொள் சயம்புச் சதுர்
வேதன்
... எட்டுக் கண்களை உடையவரும், சுத்தமான நூற்றிதழ்த்
தாமரையில் நிலையாக இருப்பவருமாகிய பிரமனாகிய நான்கு
வேதத்தோன்,

புரம் அட்டு எரி எழ விழி கனல் சிந்தி ... திரிபுரங்கள் அழிந்து
எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி,

கடினத்தொடு சில சிறுநகை கொண்ட அற்புத கர்த்தர் அரகர
பரசிவன்
... வன்மையுடன் சற்றுச் சிறிய புன்னகையைக் கொண்ட
அற்புதத் தலைவரும், பாவங்களை அழிக்கவல்லவருமான பரம சிவன்,

இந்தத் தனி மூவர்இட(ம்) சித்தமும் நிறை தெளிவு உறவும் ...
ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய சித்தம் நிறைந்து தெளிவுறும்
வண்ணம்,

பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்பு உற்றிட ... அவர்களது
மேலான செவிகளில், பிரணவப் பொருளை, ஆர்வமாக

உற்பன மொழி உரை செய் குழந்தைக் குருநாதா ... (உனது
திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளால் விளக்கிய, குழந்தை
உருவில் வந்த குரு நாதனே,

எதிர் உற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம்
வைத்திட
... போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் தமது படைகளைக்
கொண்டு சண்டைக்கு வலிய இடம் தந்ததால்,

அவர் குலம் முழுதும் பட்டிட ... அவர்களுடைய குலம் முழுவதும்
அழியும்படிச் செய்தும்,

உக்கிரமொடு வெகுளிகள் பொங்கக் கிரி யாவும் பொடி
பட்டு உதிரவும்
... உக்கிரமாக, கோபம் பொங்க, குலமலைகள் யாவும்
பொடிபட்டு உதிரச் செய்தும்,

விரிவுறும் அண்டச் சுவர் விட்டு அதிரவும் ... விரிந்த அண்டச்
சுவர்கள் பிளவுபட்டு அதிர்ச்சி அடையச்செய்தும்,

முகடு கிழிந்து அப்புறம் அப் பர வெளி கிடு கிடு எனும்
சத்தமும் ஆக
... அண்டத்து உச்சி கிழிபட்டு, அதற்கு அப்பாலுள்ள
ஆகாய வெளி எல்லாம் கிடுகிடு என்று சத்தம்படும்படி,

பொருதுக் கையில் உள அயில் நிணம் உண்க ... போரிட்டு,
கையில் உள்ள வேல் (பகைவர்களின்) கொழுப்பை உண்ண,

குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச ... ரத்த நீர் ஏழு
கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக,

புரவிக் கன மயில் நட விடும் விந்தைக் குமரேசா ...
குதிரையாகிய சிறந்த மயிலைச் செலுத்திய அற்புதக் குமரேசனே,

படியில் பெருமித தக உயர் செம் பொன் கிரியைத் தனி வலம்
வர
... பூமியில் மேன்மையும், தகுதியும் மிக்க செம் பொன் மலையாகிய
மேருவை, தனித்து நீ வலம் வர,

அரன் அந்தப் பலனைக் கரி முகன் வசம் அருளும் பொற்பு
அதனாலே
... சிவபெருமான் அந்தப் பரிசுப் பழத்தை (உன் அண்ணன்)
யானைமுகன் கணபதிக்குக் கொடுத்த நியாயமற்ற தன்மையாலே,

பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு ... (அந்தச்) சிவன்
வெட்கம் கொள்ளும்படி, உள்ளத்தில் மிகக் கோபம்கொண்டு,

அக் கனியைத் தர விலை என அருள் செந்தில் ... அந்தப்
பழத்தைத் தரவில்லை என்று, அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும்,

பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப் பெருமாளே. ... பழனிச்
சிவகிரியிலும் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.294  pg 1.295  pg 1.296  pg 1.297 
 WIKI_urai Song number: 117 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 176 - pudavikkaNi (pazhani)

pudavik kaNithuki lenavaLa ranthak
     kadalet taiyumaRa kudimuni yeNkat
          punitha sathathaLa nilaikoLsa yampuc ...... cathurvEthan

puramat teriyezha vizhikanal sinthik
     kadinath thodusila siRunakai koNdaR
          puthakarth tharakara parasiva ninthath ...... thanimUvar

idasith thamuniRai theLivuRa vumpoR
     ceviyut piraNava rakasiya manput
          RidavuR panamozhi yuraiseyku zhanthaik ...... kurunAthA

ethirut RasurarkaL padaikodu saNdaik
     kidamvaith thidAvar kulamuzhu thumpat
          tidavuk kiramodu vekuLikaL pongkak ...... kiriyAvum

podipat tuthiravum virivuRu maNdac
     cuvarvit tathiravu mukaduki zhinthap
          puRamap paraveLi kidukide nunjcath ...... thamumAkap

poruthuk kaiyiluLa ayilniNa muNkak
     kuruthip punalezhu kadalinu minjap
          puravik kanamayil nadavidum vinthaik ...... kumarEsA

padiyiR perumitha thakavuyar sempoR
     kiriyaith thanivalam varAra nanthap
          palanaik karimukan vasamaru LumpoR ...... pathanAlE

paranvet kidavuLa mikavumve kuNdak
     kaniyaith tharavilai yenAruL senthiR
          pazhanic civakiri thaniluRai kanthap ...... perumALE.

......... Meaning .........

pudavikku aNi thukil ena vaLar anthak kadal ettaiyum aRa kudi muni: Sage Agasthya who fully drank all the seas in the eight directions of the world that was covered by those seas like a cloth;

eN kaN punitha satha thaLa nilai koL sayampuc cathur vEthan: Lord BrahmA, the eight-eyed One, ensconced firmly on a pure lotus of a hundred petals, who is in charge of the four vEdAs;

puram attu eri ezha vizhi kanal sinthi: The One who exuded fire from His third eye on the forehead and burnt down Thiripuram

kadinaththodu sila siRunakai koNda aRputha karththar arakara parasivan: with a stern, yet smiling, face, He is the wonderful leader and the Supreme Lord SivA who is the eradicator of all sins;

inthath thani mUvarida(m) siththamum niRai theLivu uRavum: to illuminate the minds of these three unique divine ones,

pon seviyuL piraNava rakasiyam anpu utRida uRpana mozhi urai sey kuzhanthai kurunAthA: You ardently preached into their holy ears the PraNava ManthrA from Your cute little mouth, Oh Master in the guise of a child!

ethir utRa asurarkaL padai kodu saNdaikku idam vaiththida: As the confronting demons brought their armies giving rise to the battle,

avar kulam muzhuthum pattida: You destroyed their entire clan;

ukkiramodu vekuLikaL pongak kiri yAvum podi pattu uthiravum: with a fierce rage, You shattered all their protective mountains into pieces;

virivuRum aNdac cuvar vittu athiravum: their expansive fortress walls were rendered asunder and shaken;

mukadu kizhinthu appuRam ap para veLi kidu kidu enum saththamum Aka: the roof of their world was torn apart, and the ether beyond their sky shuddered with a loud noise;

poruthuk kaiyil uLa ayil niNam uNka: such was Your battling power; the Spear held in Your Hand tasted the enemy's flesh;

kuruthip punal ezhu kadalinum minja: the rivers of blood gushing in the battlefield exceeded the seven seas

puravik kana mayil nada vidum vinthaik kumarEsA: as You rode Your unique Peacock like a horse, Oh Wonderful Lord KumarA!

padiyil perumitha thaka uyar sem ponkiriyaith thani valam vara: After You went on a flight by Yourself around the great, eminent and golden Mount MEru,

aran anthap palanaik kari mukan vasam aruLum poRpu athanAlE: Lord SivA awarded the prized-fruit to the elephant-faced (brother of Yours), Ganapathi; because of this injustice,

paran vetkida uLam mikavum vekuNdu: You became very enraged causing discomfiture to SivA;

ak kaniyaith thara vilai ena aruL senthil: having been denied the fruit, You went to the town of ThiruchchendhUr (from where You shower grace on Your devotees)

pazhanic civakiri thanil uRai kanthap perumALE.: and to the Mount SivA (Pazhani) making them Your abode, Oh KanthA, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 176 pudavikku aNi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]