திருப்புகழ் 160 சுருதி முடி மோனம்  (பழநி)
Thiruppugazh 160 surudhimudimOnam  (pazhani)
Thiruppugazh - 160 surudhimudimOnam - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தானந்த தத்ததன தானதன
     தனதனன தானந்த தத்ததன தானதன
          தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான

......... பாடல் .........

சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
     சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
          சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே

துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
     மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
          சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே

கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
     பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
          கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே

கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
     மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
          கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்

ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
     முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
          ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே

உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
     முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
          வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா

பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
     தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
          பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே

பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
     சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
          பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுருதி முடி மோனம் சொல் சித் பரம ... வேதங்களின் முடிவில்
விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய
பெரிய பொருளே,

ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர ...
அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த,
இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே,

சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப ... ஒளிக்குள் ஒளியாய்
நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே,

முதல் ஒரு வாழ்வே ... முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு
வாழ்வே,

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் அதனில் ... துரிய
நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட
ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில்,

விளையா நின்ற அற்புத சுபோத சுக ... விளைகின்றதும்,
ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும்,
சுகத்தைத் தருவதும்,

சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே ...
சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும்,
தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும்
நெறியை அடியேன் உணராமல்,

கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி ... (தாயின்)
கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு
பிராண வாயு வந்து பூரிக்க,

பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை ...
அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும்
மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை,

கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி ... நினைப்பதற்கு
முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்)
மூடப்பட்டு,

உடல் வினை தானே கலகம் இடவே ... உடலினால் வந்த
தீ வினைகள் கலகங்களைச் செய்ய,

பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் ... மிகுந்த
குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே
நிலைத்தது என்று திரிபவனும்,

மாயம் செனித்த குகையே உறுதி கருது அசுழம் ஆம் ...
மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது
எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய,

இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய் ... மூடனாகிய
இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக.

ஒரு நியமமே விண்ட சட் சமய வேத ... ஒரு விதியையே
கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின்

அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி ... முதலும்
முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும்
அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி,

உயிர் உடல் உணர்வு அது ஆய் ... ஆன்மாக்களின் உயிருக்கு
உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி,

எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே ... யாண்டும்
நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே,

உத தரிசமாம் இன்பப் புது அமிர்த போக சுகம் உதவும் ...
தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய
அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற

அமல ஆனந்த சத்தி கர ... மலமில்லாத இன்ப வடிவான எம்
பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே,

மேவு உணர் அ உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு
குரு நாதா
... பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ
மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற
குருநாதனே,

பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய ...
சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும்
உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய,

நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் ... நிறைந்த பெரிய
அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற

கன பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு
திறலோனே
... பெருமை பொருந்திய அடிகளை உடைமையால்
செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான
மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே,

பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில் ...
உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே
உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற

சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர் ... சரவணபவா
என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை
நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற

பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே. ...
பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.358  pg 1.359  pg 1.360  pg 1.361 
 WIKI_urai Song number: 148 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 160 - surudhi mudi mOnam (pazhani)

surudhimudi mOnansol siRparama nyAna siva
     samaya vadivAy vandha adhvaithamAna para
          sudar oLiyadhAy nindra nishkaLa sorUpa mudhal ...... oru vAzhvE

thuriya nilaiyE kaNda muththar idhayA kamalam
     adhanil viLaiyA nindra aRbutha subOdha suka
          suya padika mA inba padhma padhamE adaiya ...... uNarAdhE

karuviluruvE thangu sukkila nidhAna vaLi
     poruma adhilE koNda mukguNa vibAga nilai
          karudha ariyA vanjaka kapata mUdi udal ...... vinaithAnE

kalagamidavE pongu kuppai mala vAzhvu nijam
     enauzhalu mAyan jeniththa guhaiyE uRudhi
          karudha suzhamAm indha mattai thanai ALa una ...... dharuLthArAy

oru niyamamE viNda shatsamaya vEdha adi
     mudi naduvumAy aNda muttai veLiyAgi uyir
          udal uNarvadhAy engum uRpanamadhAga amar ...... uLavOnE

udhadharisamAm inba puththamirtha bOga sukam
     udhavum amalAnandha saththikara mEvuNara
          urupiraNavA manthra karthavyam Aga varu ...... gurunAthA

parudhi kadhirE konju naRcharaNa nUpurama
     dhasaiya niRai pEraNda mokka nadamAdu gana
          padha keruvidhA thunga vetri mayil Erum oru ...... thiRalOnE

paNiyum adiyAr chindhai mey poruLadhAga navil
     saravaNa bavA ondru vaRkaramumAgi vaLar
          pAzhani malai mEnindra subramaNiyA amarar ...... perumALE.

......... Meaning .........

surudhimudi mOnansol siRparama: You, the great Omniscient, are the preacher of the tranquil silence permeating the crest of the VEdAs.

nyAna siva samaya vadivAy vandha adhvaithamAna para: You materialised with the Saivite body, full of Wisdom, being the Supreme non-dualistic entity.

sudar oLiyadhAy nindra nishkaLa sorUpa: You prevailed as the radiance of the ethereal light, without any shape, form or attribute.

mudhal oru vAzhvE: You are primordial! You are the matchless and blissful Saiva way of life!

thuriya nilaiyE kaNda muththar idhayA kamalam: In the lotus of heart of the liberated souls who have attained Self-Realisation (turiya) and have witnessed the Truth,

adhanil viLaiyA nindra aRbutha subOdha suka: "These" wonderful things are brought into view; "These" are the ones that give the Supreme Knowledge and bliss;

suya padika mA inba padhma padhamE adaiya uNarAdhE: "These" are like naturally evolving crystals, giving pure delight and are none other than Your Hallowed Lotus Feet; not knowing the right way to attain those feet,

karuviluruvE thangu sukkila nidhAna vaLi: I found my form in (my mother's) womb wherein rested (my father's) semen, fired up by the Pranic Air (oxygen);

poruma adhilE koNda mukguNa vibAga nilai: to that form were fitted, the three attributes (Sathvam, Rajas and Thamas - namely, tranquility, aggressiveness and lethargy) in various proportions;

karudha ariyA vanjaka kapata mUdi: unthinkable deceit and treachery covered (that form);

udal vinaithAnE kalagamidavE: the evil deeds that accompanied this body played havoc on it;

pongu kuppai mala vAzhvu nijam enauzhalum: notwithstanding its association with the three rubbish slags (of arrogance, karma and delusion), I roamed about believing that this body is immortal;

mAyan jeniththa guhaiyE uRudhi karudhu asuzhamAm: ignoring the fact that this body is the birthplace of all delusions, I, the lowly dog, deemed it to be indestructible;

indha mattai thanai ALa una dharuLthArAy: will You not kindly bless this stupid one?

oru niyamamE viNda shatsamaya vEdha: Of the VEdAs, holding within their realm the six religions, all of which have a common precept,

adi mudi naduvumAy aNda muttai veLiyAgi: You are the base, the body and the crest; You manifest in all the worlds and also in the ether beyond those worlds;

uyir udal uNarvadhAy engum uRpanamadhAga amar uLavOnE: You are the inner life of all souls, besides being their body and intellect; You are all-pervading and immortal!

udhadharisamAm inba puththamirtha bOga sukam udhavum: You bestow the fresh nectar of SivA's blissful world, springing like a fountain with unvarying delight.

amalAnandha saththikara: You are the unstained form of pleasure, my Great Lord! You hold the powerful Spear in Your hand!

mEvuNar a uru piraNavA manthra karthavyam Aga varu gurunAthA: You are the wisest personification of the PraNava ManthrA, coming out as the primeval meaning of that ManthrA, Oh Great Master!

parudhi kadhirE konju naRcharaNa nUpuram adhasaiya: The anklets on Your magnanimous and holy feet radiate the sun's rays, making lilting sound;

niRai pEraNda mokka nadamAdu: It (Your Peacock) dances making all the worlds swing in tandem with its beat;

gana padha keruvidhA thunga vetri mayil Erum oru thiRalOnE: It is proud of Its eminent feet; It is immaculate and triumphant; You mount that Peacock with matchless ability!

paNiyum adiyAr chindhai mey poruLadhAga navil: The hearts of the devotees worshipping You echo the only true ManthrA, namely,

saravaNa bavA ondru vaRkaramumAgi vaLar: "SaravaNabavA", which six letters expand into the most powerful effulgence (dispelling the darkness of ignorance)

pAzhani malai mEnindra subramaNiyA amarar perumALE.: in Mount Pazhani, on which You stand as SubramaNiyan; You are the Lord of the DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 160 surudhi mudi mOnam - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]