பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 343 மணமுள்ள கொன்றை, அறுகு, பல மலர்க் குவியல்களோடு சிறு பிறை, பாம்பு, அழகிய (கங்கை) நீர்-இவை (தமது) சிறந்த சிரசில் இனிது விளங்க அணிந்துள்ள சன்டயராம் (சிவபிரான்) மெச்சிப் பிரியப்பட, மயிலில் ஏறி. (அந்த மயில்) நவ நதிகளும் குமுகுமு என்று கலங்க, மலைக் கூட்டங்கள் சுழற்சியுற, பூலோகம் முதலான ஏழு உலகங்களும் மிகவும் நீக்கிட் நவமணிகளையும் பாம்பு தனது உட்லினின்றும் கக்கத் துரத்தி வரும் முருகனே! குறவர்களுடைய துணிவு அழிய, மனது வெட்கப்பட குடிசையிலும், மலையில் உள்ள தினைப்புனத்துப் பரணிலும் இருந்த (வள்ளிப்) பெண்ணின் இரண்டு குவிந்த கொங்கைகளையும் அழகிய இட்ையையும் பாராட்டிப் புணர்ந்த மணவாளனே! அகத்திய முநிவர் (காலை மாலை) இரு போதிலும் அருச்சித்து முத்தி அடையும்படி (அவருக்கு) அறிவு வழியையும் (ஞான மார்க்கத்தையும்) தவ நிலைகளையும் உள்ள மலையில்ே பெருமாளே! (இனிய மொழி செப்பிச் சிவந்த பதம் அருள்வாயே) 148. வேத முடிவாய் மோன நிலையைக் காட்டுகின்ற அறிவு மயமாம் பரம ஞான சிவ சமய வடிவாய் விளங்கி எழுந்தருளும் இரண்டற்ற, பரஞ்சுடர் ஒளியாய் நிற்கின்ற களங்கமில்லாத சொரூபமுள்ள, முதன்மையான ஒப்பற்ற வாழ்வே! தன் மயமாய் நிற்கும் உயர்ந்த யோக நிலையைக் கண்ட முத்திக்கு உரிய் பெரியோரது உள்ளத் தாமரையில் உண்டாகின்ற அற்புதமான மெய்ஞ்ஞான சுகமதாய், சுயஞ் சோதியாய், ஸ்படிகம் போல (மாசற்ற) பேரின்ப நில்ையாயுள்ள, (உனது) தாமரை யன்ன பாதங்களைச் சேர அறியாது