திருப்புகழ் 123 ஒருபொழுதும் இருசரண  (பழநி)
Thiruppugazh 123 orupozhudhumirusaraNa  (pazhani)
Thiruppugazh - 123 orupozhudhumirusaraNa - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான

......... பாடல் .........

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
     பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
     தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
     விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒருபொழுதும் ... ஒரு வேளை கூட

இருசரண ... உனது இரண்டு திருவடிகளிலும்

நேசத் தேவைத்து ... அன்பையே வைத்து

உணரேனே ... அறிய மாட்டேன்.

உனது பழநி மலையெனும் ஊரை ... உன் பழநிமலை என்னும்
பதியினை

சேவித் தறியேனே ... வணங்கி அறியமாட்டேன்.

பெருபுவியில் உயர்வரிய ... இப்பெரிய பூமியில் உயர்ந்ததும்,
அருமையானதுமான

வாழ்வைத் தீரக் ... வாழ்க்கையை முற்றுமாக

குறியேனே ... யான் குறிக்கொள்ளவில்லை.

பிறவியற நினைகுவன் ... (இவ்வளவு குறைகளிருந்தும்)
பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன்.

என்ஆசைப் பாடைத் தவிரேனோ ... என் ஆசைப்பாடுகளை
ஒழிக்க மாட்டேனோ?

துரிதமிடு ... பாவத் தொழில்களையே செய்யும்

நிருதர்புர ... அசுரர்களின் ஊர்களை

சூறைக் காரப் பெருமாளே ... சூறாவளி போல் வீசியடித்த
பெருமாளே,

தொழுதுவழி படுமடியர் ... உனை வணங்கி வழிபடுகின்ற
அடியார்களுக்கு

காவற் காரப் பெருமாளே ... காவற்காரனாக இருந்து உதவும்
பெருமாளே,

விருதுகவி விதரண ... வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய

விநோதக் காரப் பெருமாளே ... அற்புத மூர்த்தியாகிய
(ஞானசம்பந்தப்)* பெருமாளே,

விறன் மறவர் சிறுமி ... வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு

திருவேளைக் காரப் பெருமாளே. ... தக்க சமயத்தில்
காவலாயிருந்த பெருமாளே.


* முருகனே ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்தார் என்று பல இடங்களில்
அருணகிரியார் கூறுகிறார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.400  pg 1.401  pg 1.402  pg 1.403 
 WIKI_urai Song number: 166 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar
'பழநி' திரு சண்முக சுந்தரம்

'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 123 - orupozhudhum irusaraNa (pazhani)

orupozhudhum irucharaNa nEsath thEvaith ...... thuNarEnE
     unadhupazha nimalaiyenum Uraic chEvith ...... thaRiyEnE

perubuviyil uyarvariya vAzhvaith theerak ...... kuRiyEnE
     piRaviyaRa ninaiguvanen Asaip pAdaith ...... thavirEnO

dhurithamidu nirudharpura sURaik kArap ...... perumALE
     thozhudhuvazhi padumadiyar kAvaR kArap ...... perumALE

virudhukavi vidharaNavi nOdhak kArap ...... perumALE
     viRanmaRavar siRumithiru vELaik kArap ...... perumALE.

......... Meaning .........

orupozhudhum: Even once,

irucharaNa: at Your two hallowed feet

nEsath thEvaith thuNarEnE: I failed to prostrate with devotion.

unadhu pazhani malaiyenum Urai: Towards Your abode called Pazhani

sEvith thaRiyEnE: I have never worshipped.

peru buviyil: In this vast world,

uyar variya vAzhvai: a lofty and rare way of life

theerak kuRiyEnE: was never pursued by me as a goal.

piRaviyaRa ninaiguvan: (Despite all my shortcomings,) I still desire not to be reborn!

en AsaippAdai thavirEnO: When will I put an end to my desires?

dhurithamidu nirudhar: The asuras (demons) were always committing sins;

pura sURaikArap perumALE.: their dwellings were destroyed by You like a hurricane, Oh Great One!

thozhudhu vazhipadum adiya: For those devotees who bow down and worship You,

kAvaRkArap perumALE.: You are their Saviour, Oh Great One!

virudhu kavi vidharaNa: The Poet, who gave to this world songs of victory

vinOdhakArap perumALE.: wonderfully - (that ThirugnAna Sambandhar)* is Yourself, Oh Great One!

viRan maRavar siRumi: For VaLLi, the damsel of the valorous KuRavas,

thiru vELaikkArap perumALE.: You are the timely protector, Oh Great One!


* The famous Saivite Poet ThirugnAna Sambandhar is none other than the reincarnation of Murugan according to ArunagirinAthar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 123 orupozhudhum irusaraNa - pazhani


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]