திருப்புகழ் 118 இரு செப்பென  (பழநி)
Thiruppugazh 118 iruseppena  (pazhani)
Thiruppugazh - 118 iruseppena - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

......... பாடல் .........

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடுமாதர்

இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
     றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்

தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
     தழுவிக் கடிசுற் ...... றணைமீதே

சருவிச் சருவிக் குனகித் தனகித்
     தவமற் றுழலக் ...... கடவேனோ

அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
     குரியத் திருமைத் ...... துனவேளே

அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
     றசுரக் கிளையைப் ...... பொருவோனே

பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
     பயனுற் றறியப் ...... பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகிப்
புளகித்திடு(ம்) மாதர் இடையைச் சுமையைப் பெறுதற்கு உறவு
உற்று
... இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட
வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய
சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு
கொண்டு,

இறுகக் குறுகிக் குழல் சோரத் தரு மெய்ச் சுவை உற்று
இதழைப் பருகித் தழுவிக் கடி சுற்று அணை மீதே
... நெருங்கி
அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற
உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்)
தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே,

சருவிச் சருவிக் குனகித் தனகித் தவம் அற்று உழலக்
கடவேனோ
... காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப்
பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ?

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன
வேளே
... திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய
மைத்துனனாகிய* தலைவனே,

அடல் குக்குட நல் கொடி பெற்று எதிர் உற்ற அசுரக்
கிளையைப் பொருவோனே
... வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல
கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத்
தாக்கியவனே,

பரிவு உற்று அரனுக்கு அருள் நல் பொருளைப் பயன் உற்று
அறியப் பகர்வோனே
... அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும்
நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில்
உபதேசித்தவனே,

பவனப் புவனச் செறிவு உற்று உயர் மெய்ப் பழநிக் குமரப்
பெருமாளே.
... வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த
மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


* மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.
எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.310  pg 1.311  pg 1.312  pg 1.313 
 WIKI_urai Song number: 125 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 118 - iru seppena (pazhani)

iruchep penaveR penavat tamumoth
     thiLakip puLakith ...... thidumAthar

idaiyaic chumaiyaip peRuthaR kuRavut
     RiRukak kuRukik ...... kuzhalsOrath

tharumeyc chuvaiyut Rithazhaip parukith
     thazhuvik kadichut ...... RaNaimeethE

saruvic charuvik kunakith thanakith
     thavamat Ruzhalak ...... kadavEnO

ariputh thirasith thajanuk karumaik
     kuriyath thirumaith ...... thunavELE

adalkuk kudanaR kodipet Rethirut
     Rasurak kiLaiyaip ...... poruvOnE

parivut Raranuk karuNaR poruLaip
     payanut RaRiyap ...... pakarvOnE

pavanap puvanac cheRivut Ruyarmeyp
     pazhanik kumarap ...... perumALE.

......... Meaning .........

iru cheppu ena veRpu ena vattamum oththu iLakip puLakiththidu(m) mAthar idaiyaic chumaiyaip peRuthaRku uRavu utRu: Making friends with women for the sake of getting hold of their breasts that look like two copper pots and mountain, being round in shape, mellow, bulging and blissful burden to their waist,

iRukak kuRukik kuzhal sOrath tharu meyc chuvai utRu ithazhaip parukith thazhuvik kadi chutRu aNai meethE: I close in making their hair loosen and fall down; deriving the carnal pleasure offered by them and imbibing the saliva oozing from their lips, I hug them, reclining on their fragrant bed;

saruvic charuvik kunakith thanakith thavam atRu uzhalak kadavEnO: making love to them repeatedly and speaking to them in an endearing way, I have been elated; am I fated to be deviating from the righteous path of penance in this way?

ari puththira siththajanukku arumaikku uriyath thiru maiththuna vELE: Oh Lord, You are the dear and handsome cousin* of Manmathan (God of Love), the son of Lord VishNu!

adal kukkuda nal kodi petRu ethir utRa asurak kiLaiyaip poruvOnE: Winning the great staff of victorious Rooster, You attacked the confronting armies of the demons, Oh Lord!

parivu utRu aranukku aruL nal poruLaip payan utRu aRiyap pakarvOnE: To Lord SivA, with love and compassion, You preached the meaning of the fine PraNava ManthrA so that its significance is well perceived, Oh Master!

pavanap puvanac cheRivu utRu uyar meyp pazhanik kumarap perumALE.: Eternal truth prevails throughout the milky way encompassing the great mountain in Pazhani, and You are seated here, Oh Great One!


* Manmathan is the son and VaLLi is the daughter of Lord VishNu.
Thus, VaLLi's consort, Murugan, becomes the brother-in-law of Manmathan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 118 iru seppena - pazhani


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]