திருப்புகழ் 87 மனைகனக மைந்தர்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 87 manaikanagamaindhar  (thiruchchendhUr)
Thiruppugazh - 87 manaikanagamaindhar - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதானா

......... பாடல் .........

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
     வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர்

வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
     வரிசைதம ரென்று ...... வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று
     கருதிவிழி யின்ப ...... மடவார்தம்

கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
     கருவில்விழு கின்ற ...... தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
     நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா

நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில்
     நிலைபெறஇ ருந்த ...... முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
     புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா

பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
     பொடிபடந டந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்)
நின்ற நிலை ஊர் பேர்
... வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய
மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும்
நிலை, தம்முடைய ஊர், பேர்,

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர்
என்று வரும் மாய கனவு நிலை இன்பம் அதனை எனது
என்று கருதி
... வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு,
துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு,
சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில்
வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று
நினைத்து,

விழி இன்ப மடவார் தம் கலவி மயல் கொண்டு பல உடல்
புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்
... கண்ணால்
இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல
உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ?

நினையும் நினது அன்பர் பழ வினை களைந்து நெடு வரை
பிளந்த கதிர் வேலா
... நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ
வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி
வீசும் வேலனே,

நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற
இருந்த முருகோனே
... பூமியில் சிறப்புடன் முதல் இடமாக
விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை
பெறுமாறு வீற்றிருந்த முருகனே,

புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு
கொங்கை புணர் மார்பா
... அலங்காரத்துக்குத் தக்க மலர்களை
அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப்
பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும்
அணைந்த மார்பனே,

பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட
நடந்த பெருமாளே.
... சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த
அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு)
வீர நடை நடந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.220  pg 1.221 
 WIKI_urai Song number: 87 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Dharmapuram Thiru SwAminAthan
'தருமபுரம்' திரு சுவாமிநாதன்

Dharmapuram SwAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 87 - manaikanaga maindhar (thiruchchendhUr)

manaikanaka mainthar thamathazhaku peNdir
     valimaikula ninRa ...... nilaiyUrpEr

vaLariLamai thanja munaipunaiva LangaL
     varisaithama renRu ...... varumAyak

kanavunilai yinpa mathanaiyena thenRu
     karuthivizhi yinpa ...... madavArtham

kalavimayal koNdu palavudalpu Narnthu
     karuvilvizhu kinRa ...... thiyalpOthAn

ninaiyunina thanpar pazhavinaika Lainthu
     neduvaraipi Lantha ...... kathirvElA

nilamuthalvi Langu nalamaruvu senthil
     nilaipeRai runtha ...... murukOnE

punaimalarpu naintha punamaRama danthai
     puLakairu kongai ...... puNarmArpA

poruthudane thirntha nirutharmaku dangaL
     podipadana dantha ...... perumALE.

......... Meaning .........

manai kanakam mainthar thamathu azhaku peNdir valimai kula(m) ninRa nilai Ur pEr: My house, my gold, my children, my beautiful wife and others, my valour, my heritage, my status in society, my hometown, my name,

vaLar iLamai thanjam munai punai vaLangaL varisai thamar enRu varum mAya kanavu nilai inpam athanai enathu enRu karuthi: my ever-growing youth, my safe haven, my audacity, the jewellery and other wealth I display, my reputation and my relatives are all nothing but illusions that one dreams about; similarly, thinking that the transient pleasure is entirely mine,

vizhi inpa madavAr tham kalavi mayal koNdu pala udal puNarnthu karuvil vizhukinRathu iyalpO thAn: I used to remain in a daze indulging in carnal pleasure offered by whores with tantalising eyes; is it worth having intercourse with a multitude of bodies and taking several births in this world?

ninaiyum ninathu anpar pazha vinai kaLainthu nedu varai piLantha kathir vElA: You remove the past deeds of those devotees who contemplate on You; You are the Lord with the bright spear that split the long range of Mount Krouncha!

nilam muthal viLangu nalam maruvu senthil nilai peRa iruntha murukOnE: You are seated in TiruchendhUr, conferring prosperity on that town that is the foremost place of fame in this world, Oh MurugA!

punai malar punaintha puna maRa madanthai puLaka iru kongai puNar mArpA: She lived in the millet-field (of VaLLimalai), adorning herself with worthy flowers; She is VaLLi, the damsel of the hunters; and You hugged her exhilarated bosom with Your hallowed chest, Oh Lord!

poruthu udan ethirntha niruthar makudangaL podipada nadantha perumALE.: When the confronting demons came to the war, You went to the battleground with such a stern gait that their crowns were shattered to pieces, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 87 manaikanaga maindhar - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]