பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்' திருப்புகழ் உரை 205 87 வீடு, பொன், மக்கள் தம்முடைய அழகிய பெண்டிர் (மனைவி முதலானோர்), (தமது) வலிமை, குலம், (தாம்) இருக்கும் நிலை, (தமது) ஊர், (தமது) பேர் - வளர்ச்சியுறும் இளமை, தமக்குள்ள சார்பு (பற்றுக்கோடு), துணிவு, ஆபரணம் ஆதிய செல்வங்கள், மேம்பாடுகள், சுற்றத்தார்-என்றெல்லாம் சொல்லப் படுகின்ற மாயமான, கனவு நிலை கொண்ட (நிலையில்லாத) இன்பத்தை எனது' என்று நினைத்து, கண்ணினால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய - கலவி மயக்கத்தைப் பூண்டு, பல உடல்களை (பலபேரைப்) புணர்ந்து கருப்பப் பையில் விழுகிறது (பல பிறவிகள் எடுப்பது) தக்கது ஆகுமா? (ஆகாது என்றபடி); நினைக்கின்ற உனது அன்பர்களுடைய பழவினைகளை நீக்கி, நீண்ட மலையை (கிரெளஞ்சத்தை)ப் பிளந்த ஒளி வீசும் வேலனே! பூமியில் ஏற்றத்துடன் (சிறப்புடன், முதல் இடமாக) விளங்குகின்ற அழகைப் பெற்ற (உயர்வைப் பெற்ற) திருச்செந்தூரில் நிலைபெற வீற்றிருந்த முருகனே! அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (தினைப்) புனத்திலிருந்த வேடப் பெண்ணின் (வள்ளியின்) புளகிதம் கொண்ட இரு கொங்கைகளையும் அணைந்த மார்பனே! சண்டை செய்து எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி முடிகள் பொடிபடும்படி(போர்க்கு) நடந்த பெருமாளே! (கருவில் விழுகின்ற தியல்போ தான்!)