திருப்புகழ் 53 கொம்பனையார்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 53 kombanaiyAr  (thiruchchendhUr)
Thiruppugazh - 53 kombanaiyAr - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தானான தானன
     தந்தன தானான தானன
          தந்தன தானான தானன ...... தனதான

......... பாடல் .........

கொம்பனை யார்காது மோதிரு
     கண்களி லாமோத சீதள
          குங்கும பாடீர பூஷண ...... நகமேவு

கொங்கையி னீராவி மேல்வளர்
     செங்கழு நீர்மாலை சூடிய
          கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே

உம்பர்கள் ஸ்வாமிந மோநம
     எம்பெரு மானேந மோநம
          ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்

உன்புக ழேபாடி நானினி
     அன்புட னாசார பூசைசெய்
          துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே

பம்பர மேபோல ஆடிய
     சங்கரி வேதாள நாயகி
          பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி

பங்கமி லாநீலி மோடிப
     யங்கரி மாகாளி யோகினி
          பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்

டெம்புதல் வாவாழி வாழியெ
     னும்படி வீறான வேல்தர
          என்றுமு ளானேம நோகர ...... வயலூரா

இன்சொல்வி சாகாக்ரு பாகர
     செந்திலில் வாழ்வாகி யேயடி
          யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொம்பனையார் காது மோது இரு கண்களில் ... பூங்கொடி
போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு
கண்களிலும்,

ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையில்
... வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம்,
நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும்,

நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில் ...
நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய
கூந்தலிலும்,

ஆதார சோபையில் மருளாதே ... உடலின் அழகிலும்
மயங்காமல்,

உம்பர்கள் ஸ்வாமி நமோநம ... தேவர்களின் ஸ்வாமியே போற்றி,
போற்றி,

எம்பெருமானே நமோநம ... எங்கள் பெருமானே போற்றி, போற்றி,

ஒண்டொடி மோகா நமோநம ... ஒளி பொருந்திய வளையல்களை
அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி,

எனநாளும் உன்புகழேபாடி ... என்று தினமும் உனது புகழையே
பாடி

நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட ... யான் இனி
அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும்,

வீணாள்படாதருள் புரிவாயே ... என் வாழ்நாள் வீண் நாளாகப்
போகாதபடியும் அருள் புரிவாயாக.

பம்பரமேபோல ஆடிய சங்கரி ... பம்பரம் போலவே சுழன்று
நடனம் ஆடும் சங்கரி,

வேதாள நாயகி ... வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
தலைவி,

பங்கய சீபாத நூபுரி கரசூலி ... தாமரை போன்ற திரு நிறைந்த
பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
தரித்தவள்,

பங்கமி லாநீலி மோடிபயங்கரி ... குற்றமில்லாத கருநீல
நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள்
(தந்த பயத்தைப் போக்குபவள்)

மாகாளி யோகினி ... மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
அன்னை பார்வதி,

பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு ... முன்பு மதுபானம்
செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி,

எம் புதல்வா வாழி வாழியெனும்படி ... என் மகனே நீ வாழ்க, வாழ்க
என்று ஆசி கூறும் வகையில்

வீறான வேல்தர என்றுமுளானே ... வெற்றியைத் தரும்
வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே,

மநோகர வயலூரா ... மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப்
பெருமானே,

இன்சொல் விசாகா க்ருபாகர ... இனிய சொற்களை உடைய
விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே,

செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை ... திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை

ஈடேற வாழ்வருள் பெருமாளே. ... உய்விக்கும்படியாக வாழ்வை
எனக்கு அருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.174  pg 1.175  pg 1.176  pg 1.177 
 WIKI_urai Song number: 66 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 53 - kombanaiyAr (thiruchchendhUr)

kombanaiyAr kAdhu mOdhiru
     kaNgaLil AmOdha seethaLa
          kungkuma pAdeera bUshaNa ...... nagamEvu

kongaiyil neerAvi mEl vaLar
     sengazhu neer mAlai sUdiya
          kondaiyil AdhAra sObaiyil ...... maruLAdhE

umbargaL swAmina mOnama
     emperu mAnEna mOnama
          oNdodi mOgAna mOnama ...... enanALum

unpuga zhEpAdi nAnini
     anbudan AchAra pUjaisey
          dhuyndhida veeNALpa dAtharuL ...... purivAyE

pambara mEpOla Adiya
     sankari vEdhALa nAyaki
          pangaya seepAdha nUpuri ...... karasUli

pangami lAneeli mOdiba
     yankari mAkALi yOgini
          paNdusu rApAna sUrano ...... dedhirpOrkaN

dempudhal vAvAzhi vAzhiye
     numpadi veeRAna vElthara
          endrumu LAnEma nOhara ...... vayalUrA

insolvi sAkAkri pAkara
     sendhilil vAzhvAgi yEadi
          endranai yeedERa vAzhvaruL ...... perumALE.

......... Meaning .........

kombanaiyAr kAdhu mOdhiru kaNgaLil: Looking at both the eyes of the beautiful creeper-like women, which extend up to, and hit, their ears;

AmOdha seethaLa kungkuma pAdeera bUshaNa nagamEvu kongaiyil: at their fragrant mountain-like bosom wearing cool vermilion, sandalwood paste and jewels;

neerAvi mEl vaLar sengazhu neer mAlai sUdiya kondaiyil: at their braided hair, adorned with garlands of red lilies that blossom on the waterfront of the ponds;

AdhAra sObaiyil maruLAdhE: and at the lovely shapes of their bodies, - I do not want to be befuddled.

umbargaL swAmi namO nama: (Instead,) saying "Oh Lord of the Celestials, I bow to You, I bow to You;

emperumAnE namO nama: Oh our Supreme Lord! I bow to You, I bow to You;

oNdodi mOgA namO nama ena nALum: Oh the great lover of VaLLi who wears dazzling bangles! I bow to You, I bow to You", everyday,

un pugazhE pAdi nAnini anbudan AchAra pUjai seydhu: I want to sing Your glory and offer with love my obeisance to You in the traditional and ritualistic manner;

uyndhida veeNAL padAdharuL purivAyE: for my survival, and lest my life is wasted away, kindly bless me!

pambaramE pOla Adiya sankari: She dances like a spinning top; She is Sankari;

vEdhALa nAyaki: She is the head of all the vEthALAs (the fiends in the service of Lord SivA);

pangaya seepAdha nUpuri karasUli: Her hallowed lotus feet are adorned with anklets; in Her hand, She holds the trident;

pangam ilA neeli mOdi: She is of a spotless dark-blue complexion; She is Vana Durga, protector of the forests;

bayankari mA kALi yOgini: She is awe-inspiring (and removes the causes of terror); She is the Great KALi; She is the ultimate manifestation of yOgA;

paNdu surApAna sUranodu edhirpOrkaNdu: once, to fight in the battle against the drunkard demon, SUran,

empudhalvA vAzhi vAzhi: She, PArvathi, greeted You saying "Long live oh my Son, long live!"

enumpadi veeRAna vEldhara: and handed to You the powerful Spear!

endrum uLAnE manOhara vayalUrA: You are immortal! You exhilarate the minds of all people! You belong to VayalUr!

insol visAkA kripAkara: You are sweet tongued; You relish the star, VisAkam! You are full of compassion!

sendhilil vAzh vAgiyE adiendranai yeedERa vAzhvaruL perumALE.: Having chosen ThiruchchendhUr as Your abode, kindly bless me with a blissful life, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 53 kombanaiyAr - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]