திருப்புகழ் 41 கரிக்கொம்பம்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 41 karikkombam  (thiruchchendhUr)
Thiruppugazh - 41 karikkombam - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந்தம் தனத்தந்தம்
     தனத்தந்தம் தனத்தந்தம்
          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா

......... பாடல் .........

கரிக்கொம்பந் தனித்தங்கங்
     குடத்தின்பந் தனத்தின்கண்
          கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர்

கணைக்கும்பண் டுழைக்கும்பங்
     களிக்கும்பண் பொழிக்குங்கண்
          கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
     றுகிற்றந்தந் தரிக்குந்தன்
          சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர்

சலித்தும்பின் சிரித்துங்கொண்
     டழைத்துஞ்சண் பசப்பும்பெண்
          தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ

சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
     செழுத்தின்பங் களித்துண்பண்
          சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத்

துவைத்தும்பந் தடித்துஞ்சங்
     கொலித்துங்குன் றிடித்தும்பண்
          சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா

சிரப்பண்புங் கரப்பண்புங்
     கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
          சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே

தினைத்தொந்தங் குறப்பெண்பண்
     சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
          செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரிக் கொம்பம் தனித் தங்கம் குடத்து இன்பம் தனத்தின் கண்
கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர்
... யானையின்
கொம்பு போலவும், ஒப்பற்ற தங்கக் குடம் போலவும் தோன்றி, இன்பம்
தரும் மார்பகத்தின் இடத்தே கரு நிறத்தையும் செந்நிறத்தையும்,
செவ்வரியையும் உடையதாய், தோளை எட்டும் அளவினதாக நீண்டதாய்,

கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு
ஒழிக்கும் கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட
...
அம்பும் முன்னதாக மானும் போன்றதாய், (பார்த்தவர்களின்)
நற்குணத்தை அழிக்க வல்லதாகிய கண், சங்கு வெட்கி ஒளிந்து
கொள்ளும்படியான கழுத்து, பொன்னாலாகிய காதணிகள் ஊசலாட,

சரக் குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன்
சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர்
... மாலைச் சரம் போலத்
தொங்க விட்டுள்ள குஞ்சம் வெளிப்பட, பொன் ஆடையால்
யானைத்தந்தம் (போன்ற மார்பை மூடும்படி) தரித்துள்ள தமது
உடல் தகுதியான நகைகளைக் கொண்டு ஆடம்பரமாக
அலங்கரித்துள்ள விலைமாதர்கள்.

சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும்
பெண் தனத் துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ
...
முதலில் சலித்தும் பிறகு சிரித்தும், (வந்தவரை) அழைத்துச் சென்றும்,
சார்ந்து பசப்பியும், பொது மகளிரின் மார்பகத்தால் வரும் துன்பம்
கொண்டு தவித்து இந்த உலகில் திரிவேனோ?

சுரர்ச் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து
உண் பண் சுகத்து உய்ந்து இன்பு அலர்ச் சிந்த
... தேவர்களின்
கூட்டம் துதி செய்த அந்த ஐந்தெழுத்தால் (நமசிவாய மந்திரத்தால்)
வரும் இன்பத்தில் மகிழ்ந்து, உண்ணுதல், இசை பாடுதல் ஆகிய
சுகத்தில் திளைத்து வாழ்ந்த இன்ப வாழ்வை அழியும்படி செய்த
காரணத்தால்,

அங்கு அசுராரைத் துவைத்தும் பந்து அடித்தும் சங்கு
ஒலித்தும் குன்று இடித்தும் பண் சுகித்தும் கண் களிப்பும்
கொண்டிடும் வேலா
... அங்கு அசுரர்களை மிதித்துக் கசக்கி
பந்தடிப்பது போல் அடித்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரெளஞ்ச
மலையைப் பொடி செய்தும், இசையோடு மகிழ்ந்தும் கண் களிப்புக்
கொண்ட வேலனே,

சிரப் பண்பும் கரப் பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவப் பண்பும் தவப் பண்பும் தருவோனே
... உன்னை
வணங்குவதால் தலை பயன் பெறுதலையும், உன்னைக் கைகூப்பித்
தொழுதலால் கைகள் பயன் அடைவதையும், கடப்ப மாலை
சூட்டுதலைக் கண்டு சிவமாகும் தன்மை
பெறுதலையும், தவ நிலை அடைதலையும் கொடுப்பவனே,

தினைத் தொந்தம் குறப் பெண் பண் சசிப் பெண்
கொங்கையில் துஞ்சும் செழிக்கும் செந்திலில் தங்கும்
பெருமாளே.
... தினைப் புனத்துத் தொடர்புடைய குறப் பெண்ணாகிய
வள்ளி, சீர் நிறைந்த இந்திராணியின் மகளான தேவயானை ஆகிய
இருவர்களின் மார்பகங்களில் துயில் கொள்ளும் பெருமாளே, செழிப்பான
திருச்செந்தூரில் உறையும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.98  pg 1.99  pg 1.100  pg 1.101 
 WIKI_urai Song number: 29 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 41 - karikkomba (thiruchchendhUr)

karikkompan thaniththangang
     kudaththinpan thanaththinkaN
          kaRuppunthan sivappunjchem ...... poRithOLsEr

kaNaikkumpaN duzhaikkumpang
     kaLikkumpaN pozhikkungaN
          kazhuththunjang koLikkumpon ...... kuzhaiyAdac

charakkunjam pudaikkumpon
     RukitRanthan tharikkunthan
          sadaththumpaN pilukkumsam ...... paLamAthar

saliththumpin siriththumkoN
     dazhaiththumsaN pasappumpeN
          thanaththunpan thavippuNding ...... kuzhalvEnO

surarcchangan thuthiththanthanj
     chezhuththinpang kaLiththuNpaN
          sukaththuynthin palarcchinthan ...... gasurAraith

thuvaiththumpan thadiththumchan
     goliththumkun RidiththumpaN
          sukiththumkaN kaLippumkoN ...... didumvElA

sirappaNpung karappaNpung
     kadappanthong kaliRpaNpum
          sivappaNpun thavappaNpun ...... tharuvOnE

thinaiththontham kuRappeNpaN
     sasippeNkon gaiyitRunjum
          sezhikkumchen thilitRangum ...... perumALE.

......... Meaning .........

karik kompam thanith thangam kudaththu inpam thanaththin kaN kaRuppum than sivappum chem poRi thOL sEr: Looking like the elephant's tusk and the matchless golden pot, their exhilarating breasts have the hue of red and black colours, interspersed by reddish lines, and are wide enough to reach up to the shoulders;

kaNaikkum paNdu uzhaikkum pangu aLikkum paNpu ozhikkum kaN kazhuththum sangu oLikkum pon kuzhai Ada: their eyes, looking like the arrow and one-time deer, are capable of destroying the virtues of the beholders; their neck is so soft that the conch becomes bashful in comparison and goes into hiding; their golden ear-studs swing about;

charak kunjam pudaikkum pon thukil thantham tharikkum than sadaththum paN pilukkum sampaLa mAthar: from the tuft of their hair, strings of garlands emerge hanging down; these whores cover their tusk-like bosom with golden fabric and adorn their body with appropriate jewels in a lavish manner;

saliththum pin siriththum koNdu azhaiththum saN pasappum peN thanath thunpam thavippuNdu ingu uzhalvEnO: first they express their agitation and then they giggle a lot; they lead their suitors inside their home and flirt, falling all over them; am I supposed to suffer from the misery caused by the breasts of these whores and roam about aimlessly in this world?

surarc changam thuthiththu antha anju ezhuththu inpam kaLiththu uN paN sukaththu uynthu inpu alarc chintha: Because of their devastation of the blissful life of the celestials who gleefully chanted in groups the Divine Five Letters (namasivAya) and spent their time in eating and singing,

angu asurAraith thuvaiththum panthu adiththum changu oliththum kunRu idiththum paN sukiththum kaN kaLippum koNdidum vElA: You trampled upon the demons and kicked them as if they were balls, blew the conch of victory, shattered the Mount Krouncha to pieces and revelled in devotional music, revealing Your happiness in Your eyes, Oh Lord with the spear!

sirap paNpum karap paNpum kadappam thongalil paNpum sivap paNpum thavap paNpum tharuvOnE: By worshipping You the head derives its blessing, while by folding together in adoration before You, the hands obtain their reward and by beholding the garland of kadappa flowers worn by You, one attains the eminence of SivA, and all these, along with the status of penance, are conferred by You, Oh Lord!

thinaith thontham kuRap peN paN sasip peN kongaiyil thunjum sezhikkum senthilil thangum perumALE.: She was attached to the millet-field; she is VaLLi, the damsel of the KuRavAs; she is DEvayAnai, the daughter of prosperous IndirANi; upon the bosom of both Your consorts, You doze off, my Lord! You are seated in the rich and fertile town, ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 41 karikkombam - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]