திருப்புகழ் 40 கமல மாதுடன்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 40 kamalamAdhudan  (thiruchchendhUr)
Thiruppugazh - 40 kamalamAdhudan - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
     சொலவொ ணாதம டந்தையர் சந்தன
          களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
     விழியின் மோகித கந்தசு கந்தரு
          கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்
     தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
          அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே

அறியு மாறுபெ றும்படி அன்பினின்
     இனிய நாதசி லம்புபு லம்பிடும்
          அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்

குமரி காளிப யங்கரி சங்கரி
     கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
          குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி

குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
     வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
          குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
     அணிக ஜானன விம்பனொர் அம்புலி
          மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கமல மாதுடன் இந்திரையும் ... தாமரையில் வீற்றிருக்கும்
சரஸ்வதியும், லக்ஷ்மியும்

சரிசொலவொணாத மடந்தையர் ... இவர்களுக்கு ஒப்பு என்று
சொல்ல ஒண்ணாத அழகான மாதர்களின்

சந்தன களப சீதள கொங்கையில் ... சந்தனக் கலவை பூசிக்
குளிர்ந்த மார்பகங்களிலும்,

அங்கையில் இருபோதேய் ... அழகிய கரங்களிலும், இரவு பகல்
ஆகிய இரண்டு வேளைகளிலும் பொருந்தி,

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் ... காம
சாஸ்திரங்களைக் கற்றறிந்த, வஞ்சனை நிறைந்த மை தீட்டிய
கண்களிலும்,

மோகித கந்த சுகந்தரு கரிய ஓதியில் ... மோகத்தைத் தூண்டும்
நறுமணச் சுகம் தரும் கரிய கூந்தலிலும்,

இந்துமுகந்தனில் மருளாதே ... சந்திரனை ஒத்த முகத்திலும்
மயக்கம் கொள்ளாமல்,

அமல மாகிய சிந்தைய டைந்து ... மாசு இல்லாத தூய சிந்தையை
அடைந்து,

அகல் தொலைவி லாத அறம்பொருள் இன்பமும் ...
பரந்துள்ளதும், அழிவற்றதும் ஆகிய அறம், பொருள், இன்பம் பற்றிய
நூல்கள்

அடைய ஓதி உணர்ந்து தணந்தபின் ... முழுமையும் ஓதி
உணர்ந்து, ஆசைகள் நீங்கி அடங்கியபின்னர்,

அருள்தானே அறியு மாறுபெ றும்படி ... உன் திருவருளை
தானாகவே அறியும் வழியை யான் அடையுமாறு,

அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும் ... அன்புடனே,
இனிமையான ஓசையுடன் சிலம்பு ஒலிப்பதும்,

அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய் ... செம்பொன்னால்
ஆன சதங்கைகள் அணிந்துள்ளதுமான உன் திருவடிகளைத்
தந்தருள்வாயாக.

குமரி காளி ... என்றும் அகலாத இளமையுடைய கன்னியும், கரிய
நிறக் காளியும்,

பயங்கரி சங்கரி ... அடியவர் பயத்தை நீக்குபவளும், ஆன்மாக்களுக்கு
சுகத்தைத் தருபவளும்,

கவுரி நீலி பரம்பரை ... பொன்னிறத்தாளும், நீல நிறத்தாளும்,
பெரும் பொருளுக்கெல்லாம் பெரியவளும்,

அம்பிகை குடிலை யோகினி ... உலக மாதாவும், சுத்த மாயையும்,
யோக சொரூபமாக இருப்பவளும்,

சண்டினி குண்டலி எமதாயி ... பாவிகளுக்குக் கொடியவளும்,
குண்டலினி சக்தியும், எங்கள் தாயும்,

குறைவிலாள் உமை மந்தரி ... குறைவில்லாதவளும், உமாதேவியும்,
சுவர்க்கம் தருபவளும்,

அந்தரி வெகுவித ஆகம சுந்தரி ... முடிவற்றவளும், பலவகைச்
சிவாகமங்களால் துதிக்கப் பெறும் அழகியும்

தந்தருள் குமர ... ஆகிய பார்வதி தேவி பெற்றருளிய குமரனே,

மூஷிகம் உந்திய ஐங்கர ... மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து
கரத்தாரும்,

கணராயன் மம விநாயகன் ... கணங்களுக்குத் தலைவரும், எங்கள்
விநாயகரும்,

நஞ்சுமிழ் கஞ்சுகி அணி ... விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில்
ஆபரணமாகத் தரித்த

கஜானன விம்பன் ... யானை முகத்தை உடையவரும்,

ஒர் அம்புலி மவுலியான் ... பிறைச் சந்திரனைத் தலைமுடியில்
தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி

உறு சிந்தை யுகந்தருள் இளையோனே ... மிகவும் மனமகிழ்ந்து
அருளத் தக்க இளைய பெருமானே,

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் ... செழித்து வளர்ந்த
வாழையும் மஞ்சளும் இஞ்சியும்

இடைவி டாது நெருங்கிய மங்கல ... இடைவெளி இல்லாமல்
நெருங்கி உள்ளதும், மங்கலத்தை உடையதும்,

மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே. ... கீர்த்தி
வாய்ந்ததுமான பெருநகர் திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.84  pg 1.85  pg 1.86  pg 1.87 
 WIKI_urai Song number: 23 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 40 - kamala mAdhudan (thiruchchendhUr)

kamala mAthudan inthirai yunjari
     solavo NAthama danthaiyar santhana
          kaLapa seethaLa kongaiyil angaiyil ...... irupOthEy

kaLavu nUltheri vanjanai anjana
     vizhiyin mOkitha kanthasu kantharu
          kariya Othiyil inthumu kanthanil ...... maruLAthE

amala mAkiya sinthaiya dainthakal
     tholaivi lAtha aRamporuL inpamum
          adaiya Othiyu Narnthutha Nanthapin ...... aruLthAnE

aRiyu mARupe Rumpadi anpinin
     iniya nAthasi lampupu lampidum
          aruNa Adaka kiNkiNi thangiya ...... adithArAy

kumari kALipa yangari sangari
     kavuri neelipa ramparai ampikai
          kudilai yOkini saNdini kuNdali ...... emathAyi

kuRaivi lALu mai manthari anthari
     vekuvi thAkama sunthari thantharuL
          kumara mUshika munthiya aingara ...... kaNarAyan

mamavi nAyagan nanjumizh kanjuki
     aNika jAnana vimpanor ampuli
          mavuli yAnuRu sinthaiyu kantharuL ...... iLaiyOnE

vaLarum vAzhaiyu manjaLum injiyum
     idaivi dAthune rungiya mangala
          makimai mAnakar senthilil vanthuRai ...... perumALE.

......... Meaning .........

kamala mAthudan inthirai yunjari solavoNAtha madanthaiyar: These women are more beautiful than Saraswathi, who has Her seat on the lotus, and Lakshmi.

santhana kaLapa seethaLa kongaiyil angaiyil irupOthEy: Day and night, I keep lusting after their cool bosom splashed with sandal paste, their lovely arms;

kaLavu nUltheri vanjanai anjana vizhiyin: their clandestine eyes which display the black mascara and stealthy knowledge of love-making;

mOkitha kantha sukantharu kariya Othiyil: their provocative, fragrant and dark hair;

inthumu kanthanil maruLAthE: and their moon-like faces. Lest I am enticed by them,

amala mAkiya sinthaiyadainthu: I would like to obtain a spotless mind.

akal tholaivi lAtha aRamporuL inpamum adaiya Othiyu Narnthu: I would like to learn thoroughly the guiding treatises, which are vast and imperishable, on the fundamentals of DharmA, Arththa and KAma;

thaNanthapin: in that process, I would like to extinguish all my desires;

aruLthAnE aRiyu mARupe Rumpadi: then, I would like to know about Your Grace all by myself;

anpinin iniya nAthasi lampupu lampidum aruNa Adaka kiNkiNi thangiya adithArAy: and for all that, I seek Your love and Your feet, which bear the anklets making a sweet sound with the reddish-golden beads!

kumari kALi: She is forever youthful virgin; She is dark complexioned KALi;

payangari sangari: She is the destroyer of all fears; She gives happiness to all souls;

kavuri neeli paramparai: She is gold and blue complexioned; She is the most Supreme of all supreme principles;

ampikai kudilai: She is the Mother of the Universe; She is delusion in the purest form;

yOkini saNdini kuNdali: She takes the form of yOgA; She is ferocious to all sinners; She is the Kundalini power;

emathAyi kuRaivi lAL umai: She is our Mother; She has no wants whatsoever; She is UmAdEvi;

manthari anthari: She is the One who delivers the paradise; She has no end;

vekuvi thAkama sunthari thantharuL kumara: and She is the beautiful One worshipped by all the SivA AkamAs (foremost scriptures). She is PArvathi who delivered You, Oh KumarA!

mUshikam unthiya aingara kaNarAyan: The five-armed One; Ganapathi, who mounts the big rat (MUshikam);

mamavi nAyagan: our beloved VinAyagan;

nanjumizh kanjuki aNi: He wears as a belt the poisonous cobra around His waist;

or ampuli mavuli yAn: He wears the crescent moon on His head;

kajAnana vimpan: He is the elephant-faced One;

uRu sinthaiyu kantharuL iLaiyOnE: and He cherishes You in His heart and loves You dearly as a Younger brother!

vaLarum vAzhaiyu manjaLum injiyum: There are plenty of tall plantain trees, turmeric plants and ginger plants,

idaivi dAthu nerungiya mangala makimai mAnakar: which are so close to each other that there is always an auspicious aura around this great city of

senthilil vanthuRai perumALE.: ThiruchchendhUr, which is Your favourite abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 40 kamala mAdhudan - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]