Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
கந்தர் அந்தாதி 64 - சேவக மன்ன மலர்
Kandhar andhAdhi - sEvaga manna malar
Kandhar andhAdhi - sEvaga manna malar    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.225  pg 4.226 
 WIKI_urai Song number: 64 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 64 ... சேவக மன்ன மலர்   (வள்ளியும் முருகனும் கருணை மூர்த்திகளே)

......... பாடல் .........

      சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
      சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
      சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
      சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே ...... 64

......... சொற்பிரிவு .........

சே அகம் மன்னும் அமலர்க்கு ஓம் முன்இ நீ சொல தெய்வ வள்ளி

சே அகம் அன்ன வதனாம் புய கிரி செற்ற முழுச்

சேவக மன்ன திருஆவினன்குடிச் செல்வ கல்விச்

சேவகம் அன்னம் முனிக்கு எங்ஙன் நாணி திகைப்புற்றதே.

......... பதவுரை .........

தெய்வ வள்ளி ... தெய்வீகம் பொருந்திய வள்ளியின்,

சே ... (கருணையினால்) சிவந்த,

அகம் அன்ன ... இதய தாமரை போல் விளங்கும்,

வதனாம் புய ... முகார விந்தம் உடையவனே,

கிரி செற்ற முழுச் சேவக ... கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற வீரனே,

மன்ன ... தலைவனே,

திரு ஆவினன்குடிச் செல்வ ... பழனிப் பதியானே,

சே அகம் ... ரிஷப வாகனத்தின் மேல்,

மன்னு ... நிலைபெற்று வரும்,

அமலர்க்கு ... குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு,

முன் ... முன்னொரு காலத்தில்,

நீ சொல ... நீ பிரணவ உபதேசத்தை செய்ய,

கல்விச் சேவக ... வேதம் ஓதுவதில் வல்லமையும்,

அன்னம் ... அன்ன வாகனத்தையும் உடைய,

முனிக்கு ... பிரமனுக்கு,

எங்ஙன் ... எதனால்,

நாணி ... வெட்கத்தை அடைந்து,

திகைப்புற்றதே ... பொருள் தெரியாமல் மயங்கி நின்றது?

......... பொழிப்புரை .........

வள்ளியின் இதய கமலம் போல் முகமுடையவனே, கிரவுஞ்ச கிரியை அழித்த வீரனே, பழனியாண்டவனே, நீ சிவபெருமானுக்கு பிரணவப்பொருளை உபதேசிக்கும் பொழுது அதன் பொருள் தெரியாமல் பிரம்மன் முழித்திருந்தது என்ன காரணம்?

(வள்ளியின் இதயம் முருகன் அடியார்கள் பேரில் உள்ள கருணையினால் சிவந்து காணப்படுகிறது. முருகனே கருணைக்கு மேரு, கருணைக்கு வாரி என்று அருணகிரியாரால் கூறப்படுகிறார். ஆகையால் வள்ளியின் இதயமும் முருகனின் முகமும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று இங்கு சொல்லப்படுகிறது).

கந்தர் அந்தாதி - 64 - சேவக மன்ன மலர்
Kandhar andhAdhi - sEvaga manna malar
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sEvaga manna malar


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top