Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 27 - தேடிக் கொடும்படை
Kandhar andhAdhi - thEdik kodumbadai
Kandhar andhAdhi - thEdik kodumbadai    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.181  pg 4.182 
 WIKI_urai Song number: 27 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 27 ... தேடிக் கொடும்படை   (மனதிற்கு உபதேசம்)

......... பாடல் .........

      தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
      தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
      தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
      தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே ...... 27

......... சொற்பிரிவு .........

தேடிக்கொள் தும்பு அடை கை கூற்று அடாது உளம் சே வில் மை மீன்

தேள் திக்கொடும் படை கோமான் சிறைபட வேறுள

(புத்) தேள் தி கொடும்பு அடையா வெகுநாட்டன் சிறைகளை

(உந்து) ஏடு இக்கொடும் படு ஐ, மின் கேள்வன நற்றுணை சிக்கெனவே.

......... பதவுரை .........

உளம் ... நெஞ்சமே,

தும்பு ... பாசக் கயிற்றை,

அடை ... சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்),

கை ... கையை உடைய,

கூற்று ... எமன்,

அடாது ... இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன்,

தேடிக்கொள் ... இப்போதே சம்பாதித்துக்கொள்,

செ ... ரிஷபம்,

வில் ... தனுஷ்,

மை ... ஆடு,

மீன் ... மீனம்,

தேள் ... விருச்சிகம் (முதலிய எல்லா ராசிகளையும்),

திக்கொடும் ... எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும்

படை ... சிருஷ்டித்த,

கோமான் ... பிரம்ம தேவனை,

சிறைபட ... சிறையில் அடைத்து,

வேறுள புத்தேள் ... வேறு தெய்வங்களின்,

தி ... பக்தியில்,

கொடும்பு ... மாறிப்போகும் மனப்பான்மையை,

அடையா ... அடையாத,

வெகு நாட்டன் ... ஆயிரம் கண்களை உடைய இந்திரனின்,

சிறைகளை ... சிறையை நீக்கினவரும்,

உந்து ... நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட,

ஏடு ... பனை ஏடுகளையும்,

இக்கொடும் ... அவர்கள் செய்த பல கொடூர செயல்களையும்,

படு ... அழித்த,

ஐ ... சுவாமியான,

மின்கேள்வன் ... தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின்,

நற்றுணை ... நல்ல அனுக்கிரகத்தை,

சிக்கெனவே ... உறுதியாக, (தேடிக்கொள் மனமே)

......... பொழிப்புரை .........

நெஞ்சமே, பாசக் கயிற்றை பிடித்துள்ள எமன் உன்னை அழிக்காதிருக்க, பிரம்மனை சிறையிலிட்டு, இந்திரனை சிறைவிடுத்து, சமணர்களின் அனல் வாதம் புனல் வாதங்களில் வென்ற குமரக்கடவுளின் துணையை உறுதியாக சம்பாதித்துக்கொள்.

கந்தர் அந்தாதி - 27 - தேடிக் கொடும்படை
Kandhar andhAdhi - thEdik kodumbadai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thEdik kodumbadai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]