பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை வாரண தெய்வயானை, வள்ளிவள்ளியாகிய நாயகிமாருடைய, பொற்றாள்.பொன்னடிகள், மற்றென் தேடுவது - இனி நான் சம்பாதிக்கவேண்டியது வேறென்ன இருக்கின்றது - (எறு) யான்தோன்றா எழுவாய்,தேடுவதென்-பயனிலை ஏஅசை (க உ) நாகமலையில் வாழுங் கந்தசுவாமியே! உன் திருப் புகழை யான் கேட்டறிந்த மாத்திரத்தில் நினது கோழிக்கொடி என் ஆத்துமாவை அபயங்கொடுத்து ஆண்டுகொண்டது! உன் வேலாயுதம் பிறப்புக்கிடமான பேராசையை யொழித் துவிட்டது; உன் தேவிமாரது திருவடியுங் கிடைத்தது, இனி யான் தேடவேண்டியது என்ன இருக்கின்றது? (கு - உ. வேல் வினையை ஒழிக்கும். "வினையோடவிடும் கதிர்வேல்"-அநுபூதி-40 கட்செவிக் குன்றம்-திருச்செங்கோடு-பாடல் 23 பார்க்க இச்செய்யுளை வள்ளி மலைத் திருப்புகழ் சுவாமிகள் தமது மானச பூஜைப் பாராயண நூலில் "பூரண அநுக்ரகம்" பெற்ற நிலைக்குச் சான்றாக எடுத்துக் காட்டியுள்ளார். 27.நெஞ்சுக்கு உபதேசம்முருகன் துணையைத் தேடிக்கொள் தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன் தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத் தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந் தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. (ப உ) தேடிக்கொள் - இப்பொழுதே சம்பாதித்துக் கொள்வாயாக, தும்பு - பாசத்தை அடை - பொருந்திய, கை கையையுடைய, கூற்று இயமன், அடாது அழிக்காதபடி, உளம் நெஞ்சமே, சே இடபம், வில் தநுசுமை - மேஷம், மீன் - மீனம், தேள் - விருச்சிகமென்னும் இராசிகளையும், திக்கொடும் திக்குகளையும், படை - சிருட்டித்த கோம்ான் - பிரம தேவனை, சிறைபட சிறைப்படுத்தி, வேறுள புத்தேள் மற்றைத் தேவரது தி - பத்தியில், கொடும்பு திருகுதலை, அடையா சேராத வெகு நாட்டன் - ஆயிரங் கண்ணையுடைய இந்திரனது, சிறை - சிறையை, களை ஒழித்தவரும், உந்து நீரிலும் (நெருப்பிலும்) சமணர் செலுத்திய ஏடு-ஏடுகளையும், இக்கொடும் அவர்கள் செய்த கொடுமைகளையும், படு-தாழ்த்திவிட்ட, ஐ சுவாமியாகிய, மின் கேள்வன - தெய்வ யானை நாயகனது