திருப்புகழ் 382 ஆலவிழி நீல  (திருவருணை)
Thiruppugazh 382 Alavizhineela  (thiruvaruNai)
Thiruppugazh - 382 Alavizhineela - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான

......... பாடல் .........

ஆலவிழி நீலத் தாலதர பானத்
     தாலளக பாரக் ...... கொண்டலாலே

ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே

சாலமய லாகிக் காலதிரி சூலத்
     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித்

தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ

சோலைதரு கானிற் கோலமற மானைத்
     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே

சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே

பாலகக லாபக் கோமளம யூரப்
     பாகவுமை பாகத் ...... தன்குமாரா

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பாரக்
கொண்டலாலே
... விஷம் போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும்,
வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தல் பாரமாகிய மேகத்தாலும்,

ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால்
நற் கொங்கையாலே சால மயலாகி
... முத்துப்போன்ற பற்களாலும்,
வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிந்து அசைந்த நடையாலும், நல்ல
மார்பகங்களாலும், மிகவும் மோகம் கொண்டவனாகி,

கால(ன்) திரி சூலத்தால் இறுகு பாசத் துன்ப(ம்) மூழ்கித்
தாழ்வில் உயிர் வீழ் பட்டு
... யமனுடைய முத்தலைச் சூலத்தைக்
கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, அந்த
மனச் சோர்வில் உயிர் வீழுதல் அடைந்து,

ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ ...
ஊழ்வினை என்னை விடாது தொடர்ந்து, இறப்பதற்கு முன்னே என்னை
ஆட்கொள்ள மாட்டாயோ?

சோலை தரு கானில் கோல மற மானைத் தோளில்
உறவாகக் கொண்ட வாழ்வே
... சோலைகளைக் கொண்ட காட்டில்
அழகிய வேடர் பெண்ணாகிய வள்ளியை தோளில் உறவு பூண்டு
அணைந்து கொண்ட செல்வமே,

சோதி முருகா நித்தா பழய ஞானச் சோணகிரி வீதிக் கந்த
வேளே
... ஜோதி வடிவமான முருகனே, என்றும் அழியாமல்
இருப்பவனே, ஞான பூமியாகிய திருவண்ணாமலையின் தெருவில்
வீற்றிருக்கும் கந்த வேளே,

பாலக கலாபக் கோமள மயூரப் பாக உமை பாகத்தன்
குமாரா
... குழந்தையே, தோகை நிறைந்த அழகிய மயிலை
நடத்துபவனே, உமை பங்கனான சிவ குமாரனே,

பாத மலர் மீதில் போத மலர் தூவிப் பாடுமவர் தோழத்
தம்பிரானே.
... பாதத் தாமரையில் ஞான மலரை* இட்டுப் பாடும்
அடியார்களின் தோழனே, தம்பிரானே.


* ஞான பூஜை செய்வார்க்கு உரிய எட்டு புஷ்பங்கள்:

மனத்தூய்மை, கொல்லாமை, ஐம்புலன் அடக்கம், பொறை, அருள், வாய்மை, தவம், அன்பு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.207  pg 2.208  pg 2.209  pg 2.210 
 WIKI_urai Song number: 524 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 382 - Alavizhi neela (thiruvaNNAmalai)

Alavizhi neelath thAlathara pAnath
     thAlaLaka pArak ...... koNdalAlE

Aranakai yAlviR pOrnuthali nAlvith
     thAranadai yAlnaR ...... kongaiyAlE

sAlamaya lAkik kAlathiri cUlath
     thAliRuku pAsath ...... thunpamUzhkith

thAzhviluyir veezhpat tUzhvinaivi dAmaR
     chAvathanmu nEvaR ...... koNdidAyO

sOlaitharu kAniR kOlamaRa mAnaith
     thOLiluRa vAkak ...... koNdavAzhvE

sOthimuru kAnith thApazhaya njAnac
     chONakiri veethik ...... kanthavELE

pAlakaka lApak kOmaLama yUrap
     pAkavumai pAkath ...... thankumArA

pAthamalar meethiR pOthamalar thUvip
     pAdumavar thOzhath ...... thambirAnE.

......... Meaning .........

Ala vizhi neelaththAl athara pAnaththAl aLaka pArak koNdalAlE: Being attracted by their poisonous eyes that look like blue lilies, their moist and juicy lips, dark cloud-like hair,

Ara nakaiyAl vil pOr nuthalinAl viththAra nadaiyAl naR kongaiyAlE sAla mayalAki: the pearl-like teeth, bow-shaped forehead, leisurely gait and prominent bosom, I became very passionate;

kAla(n) thiri cUlaththAl iRuku pAsath thunpa(m) mUzhkith thAzhvil uyir veezh paddu: being confronted by the trident of Yaman, the God of Death, feeling the tightening of his rope of bondage, seeing that my life begins to slip in that state of mental anguish,

Uzh vinai vidAmal sAvathan mun Eval koNdidAyO: and as my fate follows me unrelentingly, will You not take charge of me before my death?

sOlai tharu kAnil kOla maRa mAnaith thOLil uRavAkak koNda vAzhvE: In the forest full of groves, You courted the beautiful belle of the hunters, VaLLi, and hugged her shoulders, Oh Great Lord!

sOthi murukA niththA pazhaya njAnac chONakiri veethik kantha vELE: Oh MurugA, Your form is an effulgence! Oh Immortal One, You reside in the streets of ThiruvaNNAmalai, which is the seat of Knowledge, Oh Lord KandhA!

pAlaka kalApak kOmaLa mayUrap pAka umai pAkaththan kumArA: Oh dear child, Your vehicle is the beautiful peacock with a lot of plumes! You are the son of Lord SivA in whose body DEvi UmA is concorporate!

pAtha malar meethil pOtha malar thUvip pAdumavar thOzhath thambirAnE.: You are the friend of those devotees who worship Your lotus feet by offering flowers* of true knowledge, Oh Great One!


* The flowers of knowledge referred to here are of eight kinds:

Purity of heart, Non-killing, Control of sensory pleasures, Patience, Graciousness, Truthfulness, Penance and Love.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 382 Alavizhi neela - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]