பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 முருகவேள் திருமுறை (10-திருமுறை 9. தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள் ’செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும் நீேடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும் 'நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல் ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர 'அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே "சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் Oறாய்திமித் துடனடிக்குஞ் சேமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே. (பொ.உ) (1) தேடி அடைவதற்கு அரியனவான (நவமணி) கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை ர்த்ன்ங்கள் (அழுத்தியிடு) பதித்து வைத்தது போன்ற (செங்கரனை) செவ்விய கிரணங்களை உடைய சூரியனை (அமுதம்) கரிய மேகங்கள் மழையானது (வாய்கொள்) வாய்ாற் கெளவி உண்டு மறைக்கும்படியான 2. (செயம்) வெற்றியை (அளித்தருள் எனக்கு என) எனக்குத் தந்தருள் என்று கேட்டு (உவப்பொடு வந்து) மகிழ்ச்சியுட்ன் வ்ந்து தனது சேவடியைப் பிடித்தது போலவும்: O தரதிமித்" என்பது பாடமாயின் தாதிமித்" என்னும் நடன ஒலியுடன் - எனப் பொருள் காண்க