பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 737 7. 'அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமாயினுமேவினால் 'அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக் *கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியுXமதுசெங் 'கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல் 'தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன் "தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் Oபஃறலைத் தமன்ரியச் சுடிகையின்மேல் "வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே மேதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கைவேலே. (பொ.உ) (1) (அண்டங்கள் ஒரு கோடி ஆயினும்) ஒரு கோடி அண்டங்கள் எதிரில் இருந்தாலும், குலகிரி அனந்தமாயினும்) சிரேஷ்டமான மலைகள் கணக்கில்லாதன எதிரில் இருந்தாலும், (மேவினால்) எதிர்த்து வந்தால் 2. (அடைய உருவி) முழுதும் (உள்ளே) உருவிப் (புறம் போவதல்லது) வெளியே போகுமே ஒழிய (தங்கல் அறியாது) ஓரிடத்தில் எடுத்த காரியத்தை முடிக்காமல் தங்குதல் என்பதே தெரியாததும், சூரனுடைய உடலைக் 3. (கண்டம் பட) பிளவுபட - துண்டம்படும்படி (பொருது) போர்செய்து, (காலனும்) யமனும் (குலைவுறும்) நடுக்கமுறும் (கடிய கொலை) கடுமையான கொலைகளை (புரியுமது) செய்கின்றதும், (செம்) செவ்விய X அதிசெங் - வேறுபாடம். o பல்+தலை = பஃறலை.