பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 73 (உக்காரித்து) சத்தமிட்டும், இளைத்து அவத்தைப் பட்டும், (ஈற்றில்) உயிர் (இவ்வுடலை ட்டு) நழுவிப்போக காப் அத்திப்பட்டு-எரிக்கின்ற அந்த (சுடுகாட்டு நெருப்பிற் பட்டு எரிந்து போகின்ற (இந்த உடல் (உக்கேன் - உகேன்-சிந்திப் போம் வழியை - தொலையும் வழியைத் - தேடுகின்றேன் இல்லை, மெய்க்கு - இந்த உடலுக்கு உள்ள (ஆட்டை) ட்டங்களை ஒழிப்பது (என் பிறப்பு ஒய்வதான) ஒருநாள் எனக்குக் கிடைக்குமா! வற்றிப் போகாததும், என்றும் முதிராது விளங்கு வதுமான, பசுமையும் இளமையும் வாய்ந்த கொங்கையில் உள்ள பாலை (கைப் பார்த்து) இடம் பார்த்து சமயம் அறிந்து தந்த ஒப்பற்றவளும், (மை) கரு நிறத்தவளும் அல்லது மை பூசிய் கண்ணை உடையவளுமான (காமக் கோட்டம்) காம கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலனைய தேவி காமாட்சி தந்த குழந்தையே! மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து -- (திசையை அறிந்து) உறியில் உள்ள தயிர், நெய், பாலுக்கு அவை வேண்டி - ஆய்ச்சிக்கு - தாயாகிய யசோதையின் முன்னிலையில் இரு பதம் வைத்து ஆடி - இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடித் தன்து ஆடல்களைக் காட்டி - அந்தத் தயிர், நெய் பால் (பெற்று) உண்ட (அரி) திருமாலின் மருகனே (கல்) ப் போன்ற (தா) வலிமை கொண்ட வில்லைக் காட்டி, (கரை) சொல்லப்படுகின்ற துறையை நற்றாயிரங்கல் துறையாகப் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள் கற்றவராகிய பொய்யா மொழிப் புலவரின் (சொல் கேட்க) பாடலைக் கேட்கத் தனியாக (அவர் வந்து கொண்டிருந்த) (காட்டு) வழியில் வந்தவனே! கையில் சூலத்தை ஏந்தி வந்த யமனும், (கணை மதனை) மலர்ப் பானங்களைக் கொண்டிருந்த மன்மதனும் (துாள்பட்டு) முற்றும் அழிந்து ஒலிடும்படிக் (கனல் பொழி) கோப நெருப்பைச் சொரிந்த தலைவராம் சிவபிரான் மகிழ்ந்து ஏற்கும்படி உபதேசப் பொருளை அருளிய பெருமாளே! (மெய்க் காட்டைத் தவிர்வதும் ஒரு நாளே)

    1. கலை கற்றார் = பொய்யா மொழிப் புலவர்

XX கூற்றை அழித்தது - பாடல் - 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு 00 மன்மதனை எரித்தது - பாடல் 399 - பக்கம் 510 கீழ்க்குறிப்பு