பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 63 வடக்கே இருந்த (கிரவுஞ்சமலை) இடிபட்டுப் பொடிபடவும், அலை வீசும் கடல் வற்றவும், மகாமேருமலையும் பொடி படவும், (மைக்கண்) பசிய கண்களை உடையதும், உக்ரமானதுமான (ஆதிசேடன் என்னும்) பாம்பு அஞ்சவும், சூரனுடைய ரத்னகிரீடம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பலகுழ, பைரவர் (போர்க்களத்தில்) நடனமிட (பகைவர்களைத் தாக்கி, அவர்கள் பொடியாகும்படி அவர்களை (வாளால்) வெட்டி வேலாற் குத்தின தம்பிரானே! (நித்யத் தத்துவம் வந்திடாதோ) 1019. குகையில் வாசம் செய்யும் நவநாத்ர்களும் திருமாலின் கொப்பூழாம் சிறந்த தாமரை மொட்டில் (ஜாதனும்) தோன்றிய பிரமனும், விளங்கும் முக்குணங்களும், அசுரர் தலைவர்களும், கடல் போல ஒலிக்கின்ற வேதத்தைத் (திரிபுரத்தை எரித்த அந்த நாளில் - தேரின்) குதிரையாகக் கொண்ட திரிபுர சம்மார மூர்த்தியாம் சிவனும், வீரம் மிக்கவரும் பச்சை நிறங் கொண்டவரும், முரன் என்னும் அசுரனை அழித்தவரும் ஆகிய திருமாலும், வெற்றி பெற்ற குலிசாயுதத்தைக் கையிற் கொண்டவனும், வலன் என்னும் அசுரனை அழித்த வனுமான இந்திரனும், (கொடுங்கண்) கடுமையான விதிகளைத் திட்டங்களை விதிக்கும் தரும சாஸ்திர நூல்களும். விரிவான புராணங்களும், உலகிலுள்ள சகல கலை நூல்களும், விரிந்துள்ள அரிய மறைநூல்கள் (வேதம் முதலிய மறை நூல்கள்) பலவும் ஆக இவையெல்லாம் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்றும் அறிய முடியாத அறிவு, அறியாமை ஆகிய இரண்டையும் கடந்த அறிவு எதுவோ அதுவே உனது திருமேனியாகும் என நான் உணர்ந்து உன்னுடைய சிவந்த தாமரையன்ன திருவடியை என்று சேர்வேனோ! x'அறிவறி யாமை இரண்டும் அகற்றிச் செறிவறி வாய் எங்கும் நின்ற சிவனை' - திருமந்திரம் 2580. திருப்புகழ்க் பாடல் 509 - பக்கம் 161 கீழ்க்குறிப்புப் பார்க்க O அறிவு திருமேனி - "அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளுரல் அறிந்தே - - - - அறிவு வடிவென் றறிந்திருந் தேனே" - திருமந்திரம் 2357.