பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 முருகவேள் திருமுறை 17 - திருமுறை உனது பத காட்சியைத் தருவாயே *அறுசமய சாத்திரப் பொருளோனே, tஅறிவுளறி வார்க்குணக் கடலோனே. #குறுமுனிவ சேனத்துமுத் தமிழோனே. குமரகுரு Xகார்த்திகைப் பெருமாளே (308) 1299. காத்தருள தத்தனத் தாத்தத் தாத்த தனதான புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது. பொற்புறக் கூட்டிக் காட்டி யருள்ஞான; வித்தகப் பேற்றைத் தேற்றி யருளாலே. மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே தத்தைபுக் கோட்டிக் காட்டி லுறைவாளைச். O சற்கரித் **தேத்திக் கீர்த்தி பெறுவோனே: "ஆறு சமயங்கள் - சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாத்தம், செளரம் என்பன - இவை வைதிக மதம்: சைவம் - சிவனைப் பர தெய்வமாகக் கொண்டு வழிபடும் சமயம்; வைணவம் - திருமாலை (விஷ்ணுவைப்) பரம் பொருளாகக் கொண்ட சமயம் காணா பத்யம் - கணபதியை முதற் கடவுளாக வழிபடுஞ் சமயம் கெளமாரம் - குமரக் கடவுளே (முருகனே) பரம்பொருளென்று வழிபடும் சமயம்: சாத்தம் - சாக்தம் சக்தியைப் பரதேவதையாக வழிபடும் சமயம்: செளரம் - சூரியனை வழிபடும் சிடப்படப். 甘 அறிவுள் அறிவார்க் குணக் கடலோனே!. "அறிவொன்றற நின் றறிவா ரறிவிற் பிறிவொன்றற நின்ற பிரான்" கந், அநுபூதி 48 "அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே" என்றார் 718 ஆம் பாடலில்,

  1. அகத்தியர் - திருத்தணிகை முதலிய தலங்களில் முருகக் கடவுளைப் பூசித்துள்ளார் - பாடல் 409 அடி 7, பாடல் 41-பக்கம் 609 கீழ்க்குறிப்பு **

X கார்த்திகேயன் - என்பது முருகன் திரு நாமங்களுள் ஒன்று. முருகக் கடவுளைச் சரவணப் பொய்கையில் கார்த்திகை மாதர் போற்றி வளர்த்த காரணத்தால் "கார்த்திகை மைந்தன்" என முருகவேள் பெயர் பெற்றனர். "உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவரொருவ ரொருவர்க்கவண் ஒரோர் புத்ரன் ஆனவனும்". வேடிச்சி வகுப்பு. (தொடர் பக்கம் 669)