பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 முருகவேள் திருமுறை (7- திருமுறை இனக்கித் தோகையை மகிழ்வோயென்: றெனக்குத் தாளினை யருள்வாய்சூர். இறக்கப் போர்செய்த பெருமாளே (298). 1289. (அகப்பொருள்) நற்றாயிரங்கல் தானத் தானன தந்ததான தீதுற் றேயெழு திங்களாலே. தீயைத் துாவிய தென்றலாலே, போதுற் றாடும நங்கனாலே. போதப் பேதைந லங்கலாமோ, "வேதத் தோனைமு னிந்தகோவே. வேடப் பாவைவி ரும்புமார்பா: ஒதச் சூதமெ றிந்தவேலா. t ஊமைத் தேவர்கள் தம்பிரானே (299) 1290 அகப்பொருள் அணைந்தருளுக தய்யதன தானத் தனதான துள்ளுமத வேள்கைக் கணையாலே. தொல்லைநெடு நீலக் கடலாலே; மெள்ளவரு சோலைக் குயிலாலே. மெய்யுருகு +மானைத் தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே. செய்ய்கும ரேசத் திறலோனே. x வள்ளல்தொழு ஞானக் கமலோனே. வள்ளிமண் வாளப் பெருமாளே (300) "பிரமனை முனிந்தது - பாடல் 608-பக்கம் 106; பாடல் 571 பக்கம் 308 கீழ்க்குறிப்பு. t பாடல் 68-அடி 8-ம் பார்க்க

  1. மன்மதன் அம்புகள், கடல், குயில் - இசை காமங் கொண்டார்க்கு வேதனை தருவன - பாடல் 218 பக்கம் 53 கீழ்க்குறிப்பு.

x உபதேசம் பெற்றபோது சிவபிரான் பிள்ளையை வணங்கினர். "நாதா குமரா நமவென் றரனார்." கந், அது 36 "எதிருறுங் குமரனை யிருந்தவி சேற்றியங் கதிர்கழல் வந்தனை யதனொடுந் தாழ்வயின் சதுர்பட வைகுபு தாவரும் பிரணவ முதுபொருட் செறிவெலாம் மொழிதரக் கேட்டனன்" - தணிகைப்புரா. வீராட்ட 117