பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 513 (அன்பான நூல் இட்டு) அன்பு என்கின்ற நாரைக்கொண்டு நாவிலே நாக்கு என்கின்ற இடத்திலே (சித்ரமாகவே கட்டி) விசித்திரமாகவே - அழகாகவே (ஒரு மாலையைக்) கட்டி (அந்த மாலைமீது ஒப்பற்ற ஞான வாசம் (ஞானம் என்னும்) நறுமணத்தை வீசித்தடவி, அந்த மாலை (ப்ரகாசியா நிற்ப) ஒளியுடன் விளங்கவும், (மாசு இல் ஓர் புத்தி) (அந்த மாலையில்) குற்றமில்லாத ஒரு புத்தி (அறிவு என்கின்ற (அளிபாட) வண்டு மொய்த்துப் பாடவும் இவ்வாறு (மாக்ருதா) என்னால் (மானசீகமாகவே) கட்டப் படுகின்ற (அல்லது மாத்ருகா மந்த்ர மாலையான) (புஷ்பமாலை) பூமாலையை (கோலம்) அழகிய (ப்ரவாள பாதத்தில்) பவளம்போற் சிவந்த திருவடியில் (அணிவேனோ) அணியும் பாக்கியத்தைப் பெறுவேனோ! எழுத்துக்களாற் பிரிக்கப்பட்ட நாதம் என்று பெயருள்ள சப்த மந்திரங்கள் 145 வகையாக உண்டாயின. அவற்றுள் 'மாத்ருகா மந்திரமே" எல்லா மந்திரங்களிலும் உயர்ந்தது. இம்மந்திரத்தையே மேளா மந்திரம் எனவும், மாலா மந்திரம் எனவும் வேத சிவாகமங்கள்கூறின. இம்மந்திரமான ஐம்பத்தோரக்கரங்களையும் சுப்பிரமணியக் கடவுள் தமக்கு வடிவாகக் கொண்டு விளங்குவர். இதன் விவரம் வருமாறு:- "அ" தலையாகவும், "ஆ"நெற்றியாகவும் "இ"வலக்கண்ணாகவும், "ச" இடக்கண் ஆகவும், "உ" வலச்செவியாகவும், "ஊ" இடச்செவியாகவும், இறு" வலக் கபோலமாகவும், 'இறு" இடக் கபோலமாகவும், இலு - இலு" என்பன நாசிகளாகவும், "ஏ" மேலுதடாகவும் "ஐ" கீழுதடாகவும், "ஒ" "ஒள" - என்பன மேலுங் கீழும் உள்ள பற்களாகவும், "அம்", "அஹ" என்பன முரசுகளாகவும், "க", "க்க", "க" (gha) "க" (gga) 'ங்' என்பன வலத்திருக் கரங்களாகவும், "ச" 'ச்ச', 'ஜ' 'ஜ்ஜ' ஞ" என்பன இடத் திருக்கரங்களாகவும். "ட", "ட்ட", "ட" (da) "ட" - "ண" என்பன வலப் பாதங்களாகவும், "த", "த்த", "த" (dha) த" (ddha) "5" srcirusar இடப் பாதங்களாகவும், "ப"என்னும் எழுத்து வயிறாகவும், "ப்ப" "ப" (bha) என்னும் எழுத்துக்கள்முறையே வலப் பாரிசம், இடப் பாரிசம் ஆகவும், ப' (bbha) கந்தமாகவும், ம", இருதயமாகவும், 'ய' "ர", "ல", "வ", "ச","ஷ" "ஸ" என்னும் ஏழெழுத்துக்களும் சத்த தாதுக்களாகவும், "ஹ" ஆன்மா ஆகவும், ள "கூடி" உபசாரங்களாகவும் திருவுருவங் கொண்டு சொற்பிரபஞ்சங்களை எல்லாம் இயக்க நிற்பர். சுப்ரமண்ய பராக்ரமம் - மாத்ருகா மந்திர மூர்த்தி, பக்கம்,260 - இப்பாடலை மகா மந்திரங்களுள் மது மதியம்" என்னும் பகுதி என்று வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமிகள் கூறுவர்.