பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1210. ஞானம்பெற தானான தான தனதன. தானான தான தனதன தானான தான தனதன தனதான ஆசார வீன னறிவிலி கோபாய ராதி யவகுண னாகாத நீச னநுசிதன் விபரீதன். ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச னாகாச நீர்ம ணனல்வளி யுருமாறி, *மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி யிவனென நினையாமல். மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி மாஞான போத மருள்செய நினைவாயே விசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசிகெட் அறைகூறி.

  • மாசான நா லென் வகை குணம் - உயிர்ப் பொருள்களின் பண்பு 32.

குணப் பண்பு 27: அறிவு, அருள். ஆசை அச்சம், மானம், நிறை, பொறை. உவப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு. எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு. இகல் வென்றி. பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி. தொழிற் பண்பு 5, துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல். இனி நா லென் வகை 4 + 8 பன்னிரண்டு எனக்கொண்டால் - அவை உயிர் வேதனை 12, அனல், சிதம், அசனி, புனல் வாதம், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை இனி நாலும் எட்டும் எனக்கொண்டால் 'நாலு" உயிர்த்தோற்றம் நான்கு கருப்பை முட்டை நிலம், வியர்வை எட்டு"ஆணவமல காரியம் 8 - அவை - விகற்பம், கற்பம், குரோதம், மோகம், நகை கொலை, அஞர் மதம் 'மாசான நா லெண் வகை" என்பதற்குக் குற்றமுள்ள முப்பத்திரண்டு தத்துவங்கள் எனவும் பொருள் கூறுவர் தத்துவங்களின் விவரம் - பாடல் 157-பக்கம் 366 குறிப்பு