பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 459 வேண்டாமை எதுவும் வேண்டாம் என்னும் ஆசை நீக்கமான மனநிலை ஒன்றை நான் அடைந்து, உள்ளம் பல த்துஞ் செல்லாது என்னுள்ளே மீண்டு - ஒருவழியாய்த் திரும்பி - ( அதன் கொழுப்பு - வேகம் அடங்கி, உனது திருவடிகளில் விழுந்து ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்புநிலையை நான் Г2 &TML_LLJoah/GUTITELJ வேந்தா! கடம்பமாலை அணிந்தருளும் சேந்தா! உன் திருவடியே சரணம் சரணம் என்னும் அந்த வழிபாடு வீணாகப் போகும்படியான ஒரு தொண்டு அன்று - பயன்தரக்கூடிய பணியேயாம் என்பதை என் உள்ளம் உணர்ந்து பயன் பெறாதோ! நான் அடைய வேண்டும்" வேந்தா சேந்தா" எனவரும் உன் திரு நாமங்களை ஒதுதல் வீண் போகாது என்பதை நான் உணர வேண்டும்" இவ்வளவே என்கின்றனர். பார்ப்பதற்கு எளிது போல் தோன்றுகின்ற வேண்டாமை" அடைதல் அவ்வளவு எளிதா இறைவனை ஏமாற்றுவது போல உரைப்பதொரு வேண்டு கோள் இது: இவ்வாறு சில பெரியோர்கள் இறைவனை ஏமாற்று முறையிற் கேட்பதுண்டு; இரண்டொரு உதாரணம் கூறலாம்: (1)ஒளவையார்:"கணபதி மூர்த்தியே! நான் உனக்குப் பால், தேன், வெல்லம், பருப்பு - என்னும் நான்கு பொருளைத் தருகின்றேன் - நீ எனக்குத் தமிழ்" மூன்று (இயல், இசை நாடகம்) கொடு, போதும், என்கின்றார் - "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ் செய் துங்கக் களிமுகத்துத் துமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா". (2) மாணிக்கவாசகர்:"சிவனே! நீ உன்னைக் கொடுத்து என்னை வாங்கினாய் - நம் இருவரில் யாருடைய சாமர்த்தியம் பெரிது என வினவுகின்றனர் . "தந்த துன்தன்னைக் கொண்ட தென் தன்னைச் சங்கரா ஆர் கொலோ சதுரர்? அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்ற தொன்றென்பால்" - திருவாசகம 22-10 (3) அம்பலவாண தேசிகர் கலம்பகத்தில் . "உடல் முதலா மருவிய மூன்றுங் கொண் டொன்றிவதற்கு வருத்தம் என்னே" என்கின்றார் - மனம், வாக்கு, (தொடர்ச்சி 460-ம் பக்கம் பார்க்க)