பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 441 கொங்கு நாட்டில் உள்ள (புசக கோத்திரி) பாம்புமலையாகிய திருச்செங்கோட்டையும், (பங்கம்) (தரிசித்தோர்களின்) பாபங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், கொங்கின் - வாசனையுடன் குவளை மலர் - நீலோற்பல மலர் பூக்கின்ற கிரி - மலையாம் திருத்தணிகையையும், சோண குன்றம் - சைலம் (சோனா சலம் - அருணாசலம், செம்மலை - அண்ணாமலையையும், (பூ) அழகிய, பரம் முன்துன்று, பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான (குன்றம்) மலையை - அதாவது திருப்பரங்குன்றத்தையும், (பிறவும்) பிற தலங்களையும் (வாழ்த்துவது) போற்றி வாழ்த்துகின்ற ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமா! எவ்விடத்தும் பிரமாதமாய்க் (கெடி) வல்லமையும் கீர்த்தியும் (விஞ்சும்) மேற்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கடிய கொடிய (தனு) வில்லையும் கொண்ட வேடர்கள் (உனது) திருவடித் இதைக்கேட்ட பிரதிவாத பயங்கரன் ஏது! தள்ளப்பட்ட மாணவனே இவ்வளவு விரைவில் கருத்தமைத்துப் பாடுகின்றானே! வாத்தியாராகிய குணசிலர் எவ்வளவு வேகத்தில் பாடுவரோ அவரோடு நம்மால் வாதிட முடியாது, என்று வாதுக்கு வராமலே திரும்பிப் போய்விட்டான் என்பது ஒரு வரலாறு. திருப்பதியையும் சேஷாசலம்' என்பர். இங்குக் கொங்கின் புஜக கோத்திரி என்றதனால் கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டையே இது குறிக்கும். f ஆய்க்குடி - பாடல் 982 பார்க்க # கொங்கின் குவளை பூக்கிற கிரி = திருத்தணி, - பாடல் 272-பக்கம் 178,179 கீழ்க்குறிப்பு. X பரம் முன் துன்று குன்றம் = திருப்பரங்குன்றம் O தலங்களை வாழ்த்துவதே ஒரு பேறு ஆகும் " பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே" என்றார் சம்பந்தர் 2.39-1.