பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 437 சுற்றுகின்ற பம்பரம் முன்னே சுழன்று எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற (ஒன்றுற) ஒரு நிக் bச்சி ஏற்பட - என் (உடல் உயிரற்றுவிழ), ஆவி (உயிர்) (உட் ட்டு) நீங்கும் (அந்தப்) பயம் நீங்க - இறப்பு என்னும் பயம் ஒழிய அருள் புரிவாயாக இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரத் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெருங்குறை நீங்கக் . கடல் அதிர்ச்சியுற்று, அச்சமுற்று நிற்க, மேருமலை முழுதும் இடிந்துபோக (வாகைமாலையை) வெற்றி மால்ையை அணிந்து ஒப்பற்ற ஜெயத்தைக் கொண்டருளிய இளையவனே! வீசின. தென்றலுடனே (அந்திப் பொழுதும்) மாலைப் பொழுதும் -பகைமை காட்டச் சேர (அனங்கனும்) மன்மதனும் சண்டை செய்ய, (வேடை எனும்படி) காமநோய் என்று சொல்லும்படி மனம் நொந்து வருந்த (அடைவாக) அதற்கு ஏற்ப வேடர்களின் செழிப்புற்ற (தினைப்) புனத்திலிருந்த (வஞ்சிக்கொடி போன்ற) வள்ளியின் (அஞ்சனம்) மையூசின (வேலின்) வேல்போன்ற கண்ணால், உள்ள்ம்கலங்கி இன்பம் பெறவேண்டி (வேளை எனும்படி) இதுசமயம் கடைக்கணித்து அருளவேண்டும் என்னும் குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கின பெருமாளே! ( ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே) 1180. போருக்கு எழுந்தது என்று சொல்லும்படி, இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுடனே மோதுகின்ற கயல்மீன் போன்ற கண்களை உடைய (மானார்) மாதர்கள், மானமே.இல்லாத (போக மங்கையர்) வேசையர்கள், கோடி கோடிக்கன்க்கான் மனத்தைக் கொண்டவர்கள் - ( ஒரு நிலைப்படாத - LFal) எண்ணங்களை உடைய விலைமாதர்கள் (இத்தகையோரின்) (பூரம்) பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் து.ாள்) பொடி, (ஆமோத) மிக்க வாசனைகொண்ட அல்லது மகிழ்ச்சி தரும் (படீரம்) சந்தனம், சண்பக மலர் இவை கொண்டு (மாலால்) ஆசையால் (லாளிதம்) அழகு செய்யப்பட்ட் (பூதரங்க்ளின் தே) மலையன்ன கொங்கைகளின் மேலே முழுகிய காம்ப்பற்று என்கின்ற

  • வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேரமேவிய

வன்கனார்". பாடல் 237-பக்கம் 92.