பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 411 (அமரில் வீட்டியும்) போரில் அவனை அழித்தும், தேவர்களை அவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் மீட்டு-நீக்கிப் புரந்தும், (அரனார் பால் மேவிய) (தந்தையாம்) சிவபிரானிடத்தே வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே தேவர்கள் பெருமாளே! (தமியனேற்குமுனே நீ மேவுவதொருநாளே) 1168-1. (ஆரவார மாய் இருந்து) ஆடம்பரமாய் காலங்கழித்து வருநாளில் - எமதுாதர்கள் ஓடிவந்து, (ஆழிவேலை) வட்டமான கடலைப் போலப் பேரொலி செய்து (என்னை) (அடர்வார்கள்) நெருக்கி வருத்துவார்கள்; (என்னுடைய ) உடலிலே கோபத்துடன் ஊசியைக் குத்தி நுழைப்பார்கள், ஆலையில் வைத்த கரும்பு என்று சொல்லும்படி (ஆட்டிக் கசக்கி). வீரம் பொருந்திய (சூரி கொண்டு) சூரிக்கத்தி கொண்டு (நேரை நேரையே பிளந்து) செவ்வையாகப் (பாதி பாதியாகப்) பிளந்து எறிவார்கள் இங்ங்ணம் மரணவேதன்ைப் ப்டுவேன்; (விட்டில் உள்ளோர்) கூகு என்று அழுது கொண்டிருக்கும் பொழுதுவிடுவாசலில் உள்ள மாதர்களும், என்மீது அன்பு கொண்டுள்ள மாதர்களும் வந்து என்உடல் மீது வீழ்வார்கள் . இக்கோலத்தைக் கண்டு நீ வந்து அருள்புரிவாயாக (நாரி) தேவி (வீரி) வீரமுள்ளவள். (சூரி) அச்சத்தைத் தருபவள் - மகாகாளி, (அம்பை) அம்பிகை (வேதவேதமே புகழ்ந்த) எல்லா வேதங்களும் புகழ்கின்ற (நாதர் பாலிலே தலைவராம் சிவபெருமானிடத்தே-இருக்கும் (மகமாயி) தேவி பார்ப்பதி (தன்னை) விரும்பி ஓடிவருகின்ற அன்பர்கள் கண்டு (வேணதே புகழ்ந்து) நிரம்பப் புகழ்ந்து, அல்லது மனதில் தோன்றிய வண்ணமே வேண்டியபடியே புகழ்ந்து நாள் தோறுமே துதித்த மலைமகள்; (கடல்) நீரில் பள்ளி கொண்டிருக்கும் நீல நிறத்தி வைஷ்ணவி, சூலாயுதத்தை ஏந்தினவள் ஆகிய பார்வதிக்கு வாழ்வாய் அமைந்த செல்வமாய் அமைந்த - (மைந்த) பிள்ளையே! கடப்ப மாலையை குடியுள்ள குமரேசனே! (நீலனாக ஓடிவந்த கறுத்த உடலுடன் ஓடி வந்த (அல்லது கொடியவனாக ஓடிவந்த) சூரபத்மாவை (வேறுவேறு உருவம் எடுக்கச் செய்த அல்லது) துண்டம் துண்டமாகப் பிளந்தெறிந்த (நீதனான) நியாயமூர்த்தியான ஒப்பற்ற குழந்தைப் பெருமாள்ே! (வருவாயே)