பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 409 இப்பூமியில் ஆழமுள்ள (திரை) கடல் ஏழு போல எழுகின்ற (உண்டாகின்ற) பிறவி என்கின்ற, அல்லது கடல் ஏழு போன்ற (எழுபிறவி) ஏழு பிறப்பு ஆகிய (மாக் கடலூடே பெரிய கடலுள் நான் அனுபவிக்கும் (சவலை மனக் குழப்பத்தை ஒழித்து, உன்னுடைய திருவடியையே தலையிற் சூடினவனாப், உன்னுடைய அடியார்கள் வாழ்கின்ற (சபையின் ஏற்றி) கூட்டத்தில் (என்னைக்) கூட்டி வைத்து, (இன்) இனிய (ஞானபோதமும்) ஞான உபதேசத்தையும் எனக்கு அருள்செய்து உபதேசித்து. (ஆட் கொளுமாறேதான்) (என்னை) ஆண்டுகொள்ளவே (அது) அதன் பொருட்டே தமியனேற்கு (முன்னே) தனியேனாகிய என் முன்பு நீ (மேவுவது) வந்து தோன்றுவதான ஒருநாள் உண்டோ ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமோ! 疇 (தருவின் நாட்டு அரசு ஆள்வான்) கற்பக ங்கள் உள்ள நாடு பொன்னுலக அரசாட்சிய்ைப் புரி o. (இந்திரன்) (வேணுவின் உருவமாப்) கிேலின் உருவெடுத்து (பல நாளே) பல நாள்கள் (தான் உறு ÄÇ; தான் செய்த தவத்தின் பயனாகச் (சிவன்) சிவபிரான் (உன்னை) "நீ சென்று தேவர்களின் (சிறைதீர) சிறையை நீக்கும் பொருட்டு (சகல எல்லாவித (லோக்கியம் - லெளகீகம் - உலகப்பற்று) உலக இன்பங்களையும் ஆண்டு அனுபவிக்கும் - அசுர ராஜனான சூரனையும், அவன் (சேயவர்) மக்களையும், (தமரை) சுற்றத்தினரையும் (வேற்கொடு) வேலாயுதங் கொண்டு (நீறாயே பட) அவர்கள் பொடியாய் அழிந்து விழும்படித் தாக்குவாயாக என்று (அருள) திருவாய் மலர்ந்து சொல்ல, ஏற்று (அவர் மொழிக்கு இணங்கி) ஏற்று (அமரோடே போய்) போருக்கெழுந்து சென்று, (அவர்) அந்த அசுரர்கள் (உறையும்) இருப்பிடமாகக் கொண்டிருந்த (மாக்கிரியோடே) பெரிய கிரவுஞ்சம், எழுகிரி யாகிய மலைகளையும் (தானையும்) சேனைகளையும், அழிந்து விழும்படிச் செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் (அமர் அடலாகி) பொருந்திய பகைமை (அல்லது வலிமை) பூண்டு நிறீஇ மகவான் பேரரசளித்துச் சுரர்துயர் அகற்றிப் பெயர்தி என்றனன் எந்தை பெருமான்" - கந்தபுரா , 1-18:34, 35