பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை (7- திருமுறை உகந்து மனமுங் குளிர்ந்து "பயன்கொள் தருமம் புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ! திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் f குழும்பி திரண்ட 4 சதியும் புரிந்து முதுசூரன். Xசிரங்கை முழுதுங் குடைந்து நினங்கொள் குடலுந் தொளைந்து சினங் Oகழுகொடும் பெருங்கு ருதிமூழ்கி. அமிழ்ந்தி மிகவும் பினங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட அடர்ந்த அயில்முன் துரந்து பொருவேளே. அலங்க **லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி அணங்கை மணமுன் புணர்ந்த பெருமாளே (176) 1168. தரிசனம் பெற தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனதான நிருத ரார்க்கொரு காலா ஜே.ஜெய சுரர்க ளேத்திடு வேலா ஜே.ஜெய நிமல னார்க்கொரு பாலா ஜே.ஜெய விறலானநெடிய வேற்படை யானே ஜே.ஜெய என இ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான். * பயன்கொள் தருமம் - தக்கார் கைப்படும் தருமமே மிக்க பயன் தரும்: "உறக்குந் துணையதோர் ஆலம்வித் திண்டி இறப்ப நிழற் பயந்தா அங் கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்து விடும்" நாலடியார். 4-8 1 குழும்பி = கூடி 4 பேய்கள் தாள மிடுதல் - கூத்தாடுதல் - "பிள்ளை வீழ விழவும் பெருந் துணங்கை கொட்டுமே" - கலிங்க பரணி. அவதாரம் 78 "பிணப்பறைக் குரலுவந்து வந்து சிலபேய் துணங்கை யிடுதொறும்" தக்கயாக 53 X பேய்கள் போர்க்களத்திற் பிணங்களின் சிரங்களை விழுங்கும்: ரத்தத்தைக் குடிக்கும் (தொடர் - பக்கம் 407)