பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 395 வாக்குக்கு எட்டாததாகிய (வாசக) திருவாக்கை உடையவனே! தேசங்கள் பலவற்றிலும் உள்ளவர் (பாதமதே தொழ) திருவடிகளைத் தொழுது நிற்கப் பாச நாசனாய் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே! (கலையால் உனை ஒதவும் அருள்வாயே) 1164. இப்பூமியில் அ(ன்)னையினிட) தாயுடைய வயிற்றில் (கர்ப்பப் பையி ல்) வ்ந்து சேரும் ஒரு துளி பயறு அளவு (கழல்) கழலுதல் - விழுதலாகி , (இனிய அண்டமும் கொண்டு) இன்பகரமான ஒரு விதையாகி, (முட்டை வடிவாகி) அதில் சதை ரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெறப் பின்னர் (அங்கமும் அவயவங்களும் (தங்க) வந்துகூட, ஒன்பது துவாரங்களும் - ஏற்பட்ட கைகளுடன், அழகிய கால்களும் (கொடு - கொண்டு அங்கே (கண் 2, காது 2, மூக்குத் தொளை 2. வாய் 1, மலத்துவாரம் 1, ஜலத்துவாரம் 1 ஆக ஒன்பது துவாரங்களும் ஏற்பட்டு வளர்ந்து (ஒரு பதின்) ஒரு ് து மாதத்தில் (அவனி வந்து) பூமியிற் பிறந் து. (தாய் தந்தையர் அக் குழந்தையைக்) கண்டு அன்பு பூண்டு, மகன் என வளர்ந்து, நடை பழகிப் (பின்ன்ர் வயது ஏற) மாதர்களின் (சிங்கியில்) விஷச் செயல்களிலே வசப் பட்டு - (திரிகி) சலிப்புற்று நிலை மாறி, தேகம் வளைய (நிமிர்ந்த உடல் குனிய), நடை தடியுடன் பழகுவதாகி, பின்பு (கிடை எனவும் மருவி) படுக்கையிற் கிடக்கை யுற்றுக் கிடக்க (அல்லது வற்றின தக்கைபோற் கிடக்க), கிடக்கும் வீட்டில் முந்தி வந்து யமனானவன் உயிரை உடலினின்றும்) சிதறும்படிச் செய்ய உயிர் நீங்கப் பிணமென்று மக்களும், சுற்றத்தாரும் சோர்வடைந்து, (செடம் இதனை) இந்தக் கட்டையாகிய உடலை எடுமின் எடுமின் என்று எடுத்துக் கொண்டு போய் அன்புடனே சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்துபோய் இங்ங்ணம் அழிகின்ற பிறப்பாகும் இது - இனி வராதிருக்க தண்டைகள் பொருந்திய அழகி 躍 போரில் எதிர்த்து வரும் அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் வாட்டம் உற, (எங்கெங்கணும்) எல்லா இடத்தும் கழுகு, கருடன் இவைகளின் (நயனம்) கண்கள், (இது கண்டு) (அசுரர் பலர் இறந்துபடும் இந்நிலையைக்) கண்டு கொண்டு, (அம்பரம்) ஆகாயத்தில் (திரிய) வட்டமிட (மிக்கு வரும்) பேப் வகைகளைச் சேர்ந்த கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு,