பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முருகவேள் திருமுறை [7 - திருமுறை சேயெ னப்பல ராடிட மாகலை ஆயு முத்தமர் கூறிடும் வாசக *சேகு சித்திர மாகt நி னாடிய த மோன (155) 1150. உண்மைப் பொருள் உணர தானன தத்தன தத்த தத்தன தானன தத்தன தத்த தத்தன == தானன தத்தன ததத தததன தநததான ஒலைத ரித்தகு ழைக்கு மப்புற im. மோடிநி றத்தும் தர்த்து நெய்த்தற லோதிநி ழற்குள எரிக்கு லத்துட i. --- னொன்றி.ஞானம்

  • முருகவேள் விசித்ரமாக நின்று ஆடின சமயங்கள் சில உள. குடைக்கூத்து, துடிக்கூத்து முன்னரே கூறினோம். (பாடல் 395, 354, 833-பக்கம் 366, 396; 48 குறிப்பு).

(i) சித்திரசேனன் என்னும் அரசன் சுகுமார சிகாசலம்" என்னும் ஞானகிரியில் தவஞ் செய்யக், குமாரக் கடவுள் எதிர் தோன்றி என்ன வரம் வேண்டு மென, அரசன் முருகா! நின் தந்தை விளையாடின அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் தரிசிக்க விரும்புகின்றேன்" எனக்கூற, அவ்வாறே முருகப் பெருமானும் அத்திரு விளையாடல்களை அவனுக்குக் 'கூறரும் அறுபால் நான்காம் கோலத்தின் செய்கை எல்லாம் வேறுவே றாகக் கந்த வேள்திரு நடனங் காட்டி ஊறுதேன் அருவி கால உயர்ந்தவான் பரங்குன்றத்தி னேறு நீர் நடன நாதன் என ஒரு பெயர்பெற்றானால்" திருச்செந்துார்ப் புராணம் சுப்ரமண்ய பராக்ரமம் பக்க 313. (ii) திரிபுரம் எளித்த வரலாற்றைப் பாடல் 285 பக்கம் 206 பாடல் 496-பக்கம் 62; பாடல் 510.பக்கம் 166 கீழ்க்குறிப்பிற் காணலாகும். திரிபுராதிகள் சிவ பூஜை செய்யும் நெறியில் இருந்த காரணத்தால் அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்து, திருமால்தாம் புத்த ஆசாரியராகவும், நாரதர் தமது மாணாக்கராகவும் வேடம் பூண்டு பலவித அற்புதங்களைக் காட்டி அங்கிருந்த அசுரர்களைச் சிவ பூஜையைக் கைவிடும்படிச் செய்தனர். திரிபுரத் தலைவர்களாகிய மூவர்தவிர பிறர் யாவரும் தவ நெறியைக் கைவிட்டனர் (பாடல் 1132-ம் பார்க்க). கயிலைக்குச் சென்று சிவபிரானிடம் முறையிடலாம் என்று திருமால் செல்ல, முப்புரத்தவரை நன்னெறியில் நின்றும் வழுவச் செய்த தீவினை