பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ உரை 331 மிகவும் உள்ளம் பொல்லாதவர்களான மகாபாவிகள், தரித்திர நிலையைச் சேர்ப்பிக்கும் பாழான மூதேவிகள், (அணி நெருங்கிகள்) ஆபாரணங்களை (நெருங்க) நிறைய அணிந்துள்ளவர்கள் (அல்லது ஆபரணம் வேண்டி அதற்காக நெருங்குபவர்கள் கிட்டுபவர்கள்). (ஆசாபாஷணம்) ஆசைப் பேச்சுக்களைப் பேசும் இளமாதர்கள் - அழகில் மேம்பட்டுப் பொய்யான - மாயை சம்பந்தப்பட்ட உருவத்தினர் - (ஆகிய வேசையர்களின்) புணர்ச்சி இன்பமே வேண்டும் என்று கூறியே - நான் தளர்ச்சி அடைதல் (அலம் அலம்) போதும், போதும், (இனியான்) (இத்தகைய) (தடுமாறாது) தடுமாற்றத்தை அடையாதபடி ஒப்பற்ற நற்கதியைத் தந்தருளுக பறக்குந் தன்மையுள்ள (கூடார்) பகைவர்களின் மூன்று மதில்கள் (திரிபுரங்கள்) - அவற்றின் கொடுமையைக் குறித்து முறையிட்ட (தமர்) தமக்கு வேண்டியவர்களான (வானோர்) தேவிர்கள் எல்லாம் ஒரு தேராகவும் (அரி) திருமால் (பகழி) அம்பாகவும் அமைய (குன்றம்) மலையாகிய மேருவை வில்லாகவும் கொண்டு - (அந்த மூஅரண்) திரிபுரங்கள், நீறெழ சாம்பலாகும்படியும், அதிலிருந்த ஒப்பற்ற மூவர் மாத்திரம் - தமது திருவடித் தியானத்தை விடாதிருந்த காரணத்தால், தமது (தாள்பெற திருவடி நிழலைப் பெறவும் அருள் பாலித்த ( பிரானார் முதல்வர், மாபதி - சிறந்த தலைவர் ஆகிய சிவபிரான் (பரவு) ப்ோற்றித் துதித்த கந்த சுவாமியே (கிானகம் அதில் மேவும்) காட்டிடையே இருந்த குறவர்களின் (பிரானே) தலைவனே மாமரம் நெறு நெறு என்று (முறிந்து அடிவேருடன் நிலைகுலைந் தழியும்படி வெற்றி பெறும் வேலைச் செலுத்தின திருக்கரத்தை உடைய வீரனே! குயில்களும், அன்றில் பறவைகளும் கூகூகூ என்று ஒலி எழுப்ப, மலர்களினின்றும் பொங்கி எழுந்த (தேன்) மது (வீழ் சொட்டும்) (காமிசை) சோலையிலே (அல்லது மலர்களில் நிரம்பச்சேரும் (தேன்) வண்டுகள் (வீழ்) விரும்பும் (காமிசை) (சோலையிலே குறவர் குலத்து அழகிய வள்ளியுடன் கூடின. பெருமாளே! (தடுமாறாதோர் கதி அருள்வாயே) Oகாமிசை கூடியது - "கன்னி தனை ஓர் கடி காவினிற் கலந்து துன்னு கருணை செய்து தொல்லுருவங் காட்டினனே" - கந்தபுரா. 6-24-115