பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 273 (பொய்க்கே) பொய்மொழிகளுக்கும், (மெய்க்கே) உடலழகுக்கும், (பித்தாகி) காமவெறிகொண்டு (போகித்தே காம 'இன்பத்தை அநுபவித்து (அவ்விலை மாதர்களுக்குக் கொடுப். பதற்காக) கைக்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்குத் (தெற்கு ஓடி) தென்திசையிலுள்ள ஊர்களுக்கு ஒடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய தலங்களுக்கு ஒடியும், (கீழ்திக்கு ஒடி) கிழக்குத் திசையில் உள்ள பிரதேசங்களுக்கு ஒடியும், பச்சிமமான - மேற்குத் திசையாகின்ற (திக்கோடி) திசையிலுள்ள ஊர்களுக்கு ஒடியும் ( பாணிக்கு ஒடி) (கப்பலேறித் திரைகடலோடியும், தீவுக்கு ஒடி அக்கடலிலுள்ள பலதிவுகளுக்கு ஓடிச்சென்றும் (கெட்டிடலாமோ) நான் விணே அழிந்து போகலாமா! (தற்கோலி) உன்னைக் கோலித்துத் தியானித்துப் பாவிப்பார் (தமது சிந்தனையில் வைப்பவர்கள்) . அல்லது தற்கோலி - நான் யாரெனும் விசாரணையைச் செய்து தியான நிலையில் நிற்பவர்கள் (நற்சிரை) மேலான நற்கதியைச் (சார) அடைவதற்குத் (தற்பரம் ஆனாய்) அவர்கள் வழிபடும் பரம் பொருளானவனே! (தப்பா) தவறுதலில்லாது (அதாவது எப்போதும்) முப்பாலைத் தேடி அறம், பொருள், இன்பம் எனும் மூன்று புருஷார்த்தங்களைத் தேடுபவர்களாகிய (தேசத்தோர்) மக்கள் (நிற்க) ஒருபால் நிற்க (அவர்களை விட்டு விலகித் (தகையோடே) அருளுடனே - (கடமையாகக் கருதி) முன்பு, கானப் பேதைக்காக காட்டிலிருந்த பென் வள்ளியின் பொருட்டு (போய்) நீயே சென்று (முற்பால் வெற்பில்) வெற்பில் . வள்ளிமலையில் (முற்பால்) வள்ளியின் முன்னிலையில் வள்ளி எதிரில் (கணியானாய்) வேங்கைமரமாக நின்றவனே! முத்துப் போன்ற அருமையனே மூன்று வகையான அக்கினிகளுக்கு உரிய நாயகனே! பரிசுத்தமூர்த்தியே! முத்தனே (பற்றற்றவனே) முத்தியைத் தரவல்ல பெருமாளே! (கெட்டிடலாமோ) 18