பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை Fo 201 சூரியனும், சந்திரனும், (படியை) பூமியை (இடந்தானும்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய விஷத்தைத் தான் உண்டு, ஏழு உலகமும் - பயம் நீங்கி விளங்க நின்று ஆடுகின்ற பரமேசுரன் உள்ளம் களிக்கும் பெருமாளே பழைய வேதங்கள் அந்நாள் முதல் ஒதுகின்ற பெருமாளே! (உன் கருணை மகிழ்ந்தோதும் கலை தாராய்) 1092. நல்வினை தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் (இழவு படு கூட்டை) கேடுற்ற - இறந்துபோன கூடாகிய இவ்வுடலை (பிணத்தை எடுங்கள் எடுங்கள் (என) என்று கூறி - வீட்டில் உள்ள யாவரும் - கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலைப் பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படி - கரு நிறம் கொண்டதும், இரண்டு கொம்புகளை உடையதும், (முரண்) வலிமை கொண்டதுமான (எருமையுடன் வந்த) (மோட்டர்) மூர்க்கராம் (யம தூதுவர்) பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக - பொன்னையும் ரத்னத்தையும்கூடத் (தமது ஒளியால்) வாட்டும் வாட்டமுறும்படிச் செய்வதாய்ப், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடி இணைகளைக் காட்டி அருள் புரிவாயாக; (பருவ மலை நாட்டு மருவு கிளி) உயர்ந்த (வள்ளி) மலைப் பிரதேசத்தில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை - ஒட்டிக் கொண்டிருந்தவளும் அம்மான் திருமாலின் மகளாய்ப் - பழைய உறவைப் பூண்டிருந்தவளுமான - (குற வாட்டி) குறத்தி வள்ளியின் மணவாளனே! (பகைஞர்) பகைவர்களாம் அசுரர்களின் படை வீட்டில் (தலை நகரில்) (அல்லது பாசறையில்)இதி: நெருப்பை ஊட்டு வித்ததும் - மூட்டியதும், (பகரும் ஒளி விடுவதுமான் (நுதல்) நெற்றி (நாட்டம்) கண்களைக்கொண்ட குமரேசனே!